Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 12 ஜூன், 2013

குழந்தைகள் பாட்டு!

லெப்பைக்குடிக்காடு குழந்தை பாட்டு! அதுவே நாளைய தலைமுறைக்கு அறிவின் ஊற்று 


குழந்தைகளுக்கு பள்ளி திறந்ததை முன்னிட்டு நமது அறிவுக்கு எட்டியவண்ணம் குழந்தைகளுக்காக ஒரு சிறிய பாடல்.

அம்மாவை போல அன்பாய் பழகு.
அத்தாவை போல அறம் செய்து உண்.

தாதா அத்தாவை போல தைரியமாக வாழ்.
தாதி அம்மாவை போல தன்மானத்தோடு இரு

நண்ணி அத்தாவை போல நற்பெயர் எடுத்திடு.
நண்ணி அம்மாவை போல நன்மை செய்திடு.

குப்பி அத்தாவை போல கொடுத்து உதவிடு
குப்பி அம்மாவை போல குணநலம் காத்திடு. 

மாமாவை போல மானத்தை பேணு.
மாமியை போல மரியாதையாக பழகு.

அக்காவை போல அக்கறையாய் இரு.
அண்ணனை போல அமானிதத்தை காத்திடு.

தங்கையை போல மங்கையை பார்.
சகோதரனை போல சந்தோசமாய் வாழ். 

சிச்சாவை போல சீர் திருத்தம் செய்.
ஹாலவை போல ஹலாலை பேணு.

உறவினரோடு உண்மையாய் இருந்திடு !
அனாதைகளுக்கு அடைக்கலம் கொடுத்திடு !!

சஹாபியை போல சாந்தியை பரப்பு.
அன்சாரிகளை போல அனாசாரத்தை நீக்கு.

வரலாறை பாத்து வருங்காலத்தை மாற்று.
சகோதர துவம்தான் சாந்தியின் ஊற்று 

நபியை போல நல்லாட்சி புரி 
இறைவனின் பொருத்தம் தான், நம்முடைய குறி !

குர் ஆனை போல் ஒரு வேதமும் இல்லை.
அல்லாஹ் தான் முடிவின் எல்லை! 
நமது நிருபர்.

6 கருத்துகள்:

  1. நெகடிவ்வாக எடுத்துக்கொள்ளாமல் அனைத்தும் பாசிடிவாக யோசித்து போட்ட நிருபருக்கு வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
  2. அல்லாஹ் அக்பர்

    பதிலளிநீக்கு
  3. Above all line may be changed, except Below line,

    உறவினரோடு உண்மையாய் இருந்திடு !
    அனாதைகளுக்கு அடைக்கலம் கொடுத்திடு !!

    சஹாபியை போல சாந்தியை பரப்பு.
    அன்சாரிகளை போல அனாசாரத்தை நீக்கு.

    வரலாறை பாத்து வருங்காலத்தை மாற்று.
    சகோதர துவம்தான் சாந்தியின் ஊற்று

    நபியை போல நல்லாட்சி புரி
    இறைவனின் பொருத்தம் தான், நம்முடைய குறி !

    குர் ஆனை போல் ஒரு வேதமும் இல்லை.
    அல்லாஹ் தான் முடிவின் எல்லை!

    so tell me in feature like this. don't add extra.

    பதிலளிநீக்கு