Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 16 ஜூன், 2013

சிறுபான்மையின மாணவர்கள் கல்வி உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அரசு,அரசு உதவிப்பெறும் மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பயிலும் கிறிஸ்தவர்,இஸ்லாமியர்,புத்த மதத்தினர் சீக்கியர் மற்றும்
பார்சி வகுப்பை சேர்ந்த சிறுபான்மையின மாணவ,மாணவிகளுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் 2013-14 ம் ஆண்டிற்க்கான கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன.விண்ணப்பங்களை
www.tn.gov.in/bcmbcmw/welfschemes_minorities.htm
<http://www.tn.gov.in/bcmbcmw/welfschemes_minorities.htm>


நமதூரில் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையை பயன் பெறும் வகையில் பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் TNTJ ஆகிய இயக்கங்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.

நன்றி தினகரன்

1 கருத்து:

  1. அஸ்ஸலாமு அழைக்கும்

    1. இந்த இடத்துக்கு ( வரையு படம் ) அனுமதி கொடுத்து யார்?

    2. இதே இடத்திற்கு வீட்டுவரி வசூல் செய்தார்களே அப்போதே தெரிய வில்லையா?

    3. சுமார் 25 வருடம் குடிநீர், மின்சாரம் அதற்கு கட்டணம் வசூல் செய்தார்களே அப்போதே தெரிய வில்லையா?

    4.குடும்ப அட்டை , வாக்களர் அட்டை வழகினர்களே அப்போதும் தெரியவில்லையா?
    வாழ்வதற்கு இடம் இல்லை என்று தானே உங்களிடம் அனுமதி கோரினும் எல்லா சலுகைளும் செய்துவிட்டு இப்போ வீட்டை இடி என்பது எந்தவிதத்தில் நாயம்?

    இதற்கு நமது அரசாங்கம் பதில் செல்லவேண்டும்?

    அபுபக்கர்- துபாய்

    பதிலளிநீக்கு