Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 28 ஜூன், 2013

நமதூர் ஆத்துஓரம் பிரச்சனையும் ! மேற்கு ஜமாத் தலைவரின் வேண்டுகோளும்...!

நமதூர் ஆத்துஓரம் பிரச்சனையும் ! மேற்கு ஜமாத் தலைவரின் வேண்டுகோளும்...!
பழைய புகைப்படம்
இன்று வழக்கம் போல மேற்கு பள்ளியில் ஜிம்மா தொழுகை முடிந்த உடன் ஓர் அறிவிப்பு செய்யப்பட்டது. அது தான் கடந்த சில நாட்களாகவே நமதூரில் உள்ள ஆத்துயோரம் உள்ள பிரச்சனையை பற்றி சுன்னத்து தொழுகை முடிந்த உடன் பேசஉள்ளனர் என்பது தான் அந்த அறிவிப்பு. 


அதோ போல் சுன்னத் தொழுகை முடிந்த உடன் அனைவரும் ஆவலுடன் இருந்து இது நாள் வரைக்கும் என்ன செய்தார்கள் இனி என்ன செய்ய போகிறார்கள் என்பதை பற்றி மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் ஆரம்பத்தில் ரமலான் கஞ்சி காச்சுவது சம்மந்தமாக ஓர் சிறிய கலந்துரையாடல் நடைபெற்றது. அதன் பின் ஆத்துஓரம் உள்ள பிரச்சனை என்ன நாம் இது நாள் வரைக்கும் எடுத்துள்ளோம் என்பதை பற்றி தலைவர் விளக்கமாக கூறினார். முதல் தவனையாக 24 வீட்டுற்கு இடைக்கால தடை மூன்று  வாரத்திற்கு பெறப்பட்டள்ளது. மீதம் உள்ள வீட்டுற்கு நேற்று விட்டு போன வீட்டுற்கு தகவலை பெற பற்று நாளை அல்லது நாளை மறுநாள் ஓர் நல்ல முடிவு தெரியும் என தலைவர் தெரிவித்தார்.

தலைவரின் ஓர் அன்பான வேண்டுகோலையும் விடுத்துள்ளார்கள். இந்த பிரச்சனை சம்மந்தமாக வெளியில் கூறும் புரளிகளை நன்ப வேண்டாம். எந்த விசயமாணாலும் என்னிடம் நேரில் வந்து தெரிந்து கொள்ளுமாறு கூறினார்.

நமது நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக