வீட்டு வாடகை
ஊரு கட்டுப்பாடு அதன்மூலம் ஒற்றுமையின் வெளிபாடு இவை அனைத்தும் காற்று பிடிங்கிய பந்துபோல சுருங்கி கொண்டு வருகிறதை இன்றைய சூழ்நிலை நமக்கு படம் பிடித்து காட்டுகிறது.
குமுறி எறியும் எரிமலையின் மீது எரிகர்க்களை வீசுவது போல வீடு இழப்பவர்களுக்கு
மேலும் துன்பத்தை விளைவிக்கும் வண்ணம் வாடகை வீடு விலை ஏற்றம் அதிகமாகி வருகிறதை நாம் வெறுத்தாலும் வெளிச்சத்திற்கு வரும் உண்மையாகிறது.
நமதூரில் ஆற்றங்கரை வீடு அப்புரவு படுத்தும் பணிக்கு கால அவகாசத்தை அரசு நிர்னைத்து உள்ளதை தாங்கள் அறிந்ததே! இதனால் அடுத்த கட்டமாக பதிக்க படுபவர்கள் வாடகை வீடு பார்க்கும் பணிக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இந்த சூழ்நிலையில் வாடகை வீடும் விலை அதிகமாக உயர்ந்து உள்ளது என்று குமுறுகின்றனர்.
இறக்க மனசு எள்ளளவு கூட இல்லாமல் இருக்கும் ஒரு சில மக்களை நினைக்கும் பொழுது ஈகதிர்க்கும் இரக்கத்திற்கும் சொந்தமான இஸ்லாமிய மார்க்கம், அவர்களது ஆள் மனதில் விட்டு விலகும் அபாயகரமான நிலைக்கு வந்துவிடுவார்களோ! என்று நமது உள் மனசு அபாய எச்சரிக்கை மணி அடிக்கிறது.
அவர்கள் குமுறும் வார்த்தைக்கு நமது பகுத்தறிவு பதில் தரவில்லையானால்? நாளை இந்த நிலைதான் நம் அனைவருக்கும் தொடர்கதையாகிவிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
இன்று ஆற்றங்கரை வீடுகளில் கைவைக்க துடிக்கும் இந்த அரசு, நாளை நமதூர் நெடுஞ்சாலை தான் அடுத்த குறி! என்பது நாம் மறுக்க முடியாத உண்மை.
சிறிக்க தெரிந்த மக்களுக்கு சிந்தக்க தெரியவில்லை! சிந்திக்க தெரிந்த மக்களுக்கு செயல்படுத்த தெரியவில்லை என்று நாளைய வாரிசுகள் நம்மை இழிக்கும் முன் அனைத்து ஜமாத்துக்களும், இயக்கங்களும் ஒன்றுபட்டு இறைவனின் பொருத்தத்தை மட்டுமே கருத்தில் கொண்டு வரக்கூடிய பாதிப்பில் இருந்து நமதூர் மக்களை காக்க வேண்டும் என்பதுதான் பாதிக்கப்பட்டவர்களின் குமுரலாக உள்ளது.
உடைவாள் உடைந்தாளும் உள்ளம் உடையாத உருதியோடு இருப்போம் இன்ஷா அல்லாஹ்...
நமது நிருபர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக