பெரம்பலூர் அருகே துணை மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டையுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
துணை மின் நிலையம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா பென்னக்கோணம் பகுதியில் புதிய துணை
மின் நிலையம் அமைத்திட வருவாய்த்துறையினர், மின்துறையினர் நடவடிக்கை
எடுத்து வருகின்றனர். இந்நிலையில் கழனிவாசல் கிராம மக்கள் 100–க்கும்
மேற்பட்டோர் நேற்று தங்கள் கிராமத்தில் புதிய துணை மின் நிலையம்
அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு
குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றுடன் வந்தனர்.
கலெக்டர் அங்கு இல்லாததால் மாவட்ட வருவாய் அதிகாரி சுப்ரமணியத்திடம்
கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:–
கோரிக்கை
கழனிவாசல் கிராமத்தில் கடந்த 1948–ம் ஆண்டு முதல் ஆதிதிராவிட இன மக்கள்
பயன்பாட்டில் உள்ள தரிசு நிலத்தில் புதிய துணை மின்நிலையம் அமைத்திடும்
திட்டத்தை கைவிட வேண்டும். மக்கள் பயன்பாடற்ற மாற்று இடத்தில் புதிய மின்
நிலையம் அமைக்க வேண்டும்.
இந்த கோரிக்கையை ஏற்காவிட்டால், நாங்கள் எங்களின் குடும்ப அட்டை, வாக்காளர்
அடையாள அட்டை ஆகியவற்றை கலெக்டரிடம் ஒப்படைத்திட முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறியிருந்தனர். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது
நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது. மீண்டும் வந்து கலெக்டரிடம் முறையிட உள்ளோம்
என கிராம மக்கள் தெரிவித்தனர்.
நன்றி தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக