Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 5 ஜூன், 2013

உழைப்பும் ,பிழைப்பும்.... சிந்தனைக்கு

ஒருவர் ஒரு காட்டுப்பாதையின் வழியாக பயணம் மேற்கொண்டார். அப்பாதையில் ஒரு கழுகு குறுகிப் போய் பரிதாபமாக உட்கார்ந்து இருந்தது. அம்மனிதர் அந்த கழுகின் நிலையைக் கண்டு மிகவும் அனுதாபப்பட்டார், பரிதாபப்பட்டார்... இந்த கழுகு எவ்வாறு தன் வாழ்வாதாரத்தை தேடிக் கொள்ளும் என தனக்குத்தானே எண்ணிக் கொண்டார்.
இவ்வாறு அவர் நினைத்துக் கொண்டிருக்கும் போதே மற்றொரு கழுகு அதனருகே வந்தது. தன் வாயில் இருந்த
உணவை அதற்கு புகட்டியது, இதனைக் கண்ட அம்மனிதர் “இப்படித்தான் அல்லாஹ் தன் படைப்பில் பலஹீனமானவர்களுக்கு உதவி செய்வான்“ என எண்ணிக் கொண்டு, தானும் ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டார். அல்லாஹ் தனக்கு யார் மூலமாவது ரிஜ்கை தருவான் என நம்பிக்கை வைத்து அமர்ந்துவிட்டார்.
நாட்கள் சில கழிந்தன...யாதொரு உதவியும் வரவில்லை. அப்போது அவர்ருகே ஒரு மனிதர் வந்தார். இவரின் நிலையை கண்டு, விபரங்களை கேட்டறிந்தார். “அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட அடியாரே! உம்மிடத்தில் இரு படைப்பினங்கள் காட்டப்பட்டன. அவற்றுள் நீர் ஏன் பலம் பொருந்தியதை தேர்ந்தெடுக்காமல், பலஹீனமானதை தேர்ந்தெடுத்தீர்?
நீர் ஏன் அந்த உதவி செய்யும் கழுகாக இருக்க விரும்பல்லை? ஏன் அல்லாஹ் உங்களுக்கு அருளியுள்ள பலத்தைக் கொண்டு உம்முடைய வாழ்வாதாரத்தை தேடிக் கொள்ள கூடாது? அதன் மூலம் உமக்கு தேவையான பொருட்களைப் பெற்றுக் கொண்டு தேவையுடையோருக்கு உதவி செய்ய நினைக்கவில்லை...நீர் ஏன் உம்மையே பலஹீனமானவராக எண்ணிக் கொள்ள வேண்டும் என வினவினார்.
தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டால் பூமியில் பரந்து செல்வீர்களாக! அல்லாஹ்வின் அருட்கொடையை (ரிஜ்கை) தேடிக்கொள்வீர்களாக என்ற வசனத்தை எடுத்து கூறினார். (62 : 16)
“ஓர் அடியான் பிறரிடம் கேட்கும் வாசலைத் திறந்தால் அவனுக்கு இழிவின் வாசலை அல்லாஹ் திறந்திடுவானே தவிர வேறில்லை.“ என்று நமது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்ற ஹதீஸையும் எடத்துரைத்தார்.
அவற்றை கேட்ட அம்மனிதர் தன் தவறான எண்ணத்தை மாற்றிக் கொண்டார். தக்க சமயத்தில் தனக்கு கிடைத்த அறிவுரையை எண்ணி அல்லாஹ்வுக்கும் அந்த மனிதருக்கும் நன்றி உரைத்தார்.
தான் கொண்ட தவறான எண்ணத்தினால் யாதொரு உதவியும் கிடைக்க பெற்றிந்தால் அல்லாஹ் தனக்கு இழிவின் வாசலை திறந்திருப்பானே என்பதை எண்ணி கைசேதப்பட்டார்.
உயர்ந்த கொடுக்கும் கரம், தாழ்ந்த வாங்கும் கரத்தைவிடச் சிறந்த்தாகும் எனும் ஹதீஸை கருத்தில் கொண்டு வாழ்வின் புதிய பயணத்தை தொடர ஊக்குவித்தார் அம்மனிதர்.
நாமும் அல்லாஹ் நமக்கு அருளிய பலன்களான, இறைநம்பிக்கை, உடல் பலம் மற்றும் மனபலத்தைக் கொண்டு நமக்கான ரிஜ்கை தேடிக் கொள்வோம்.
நாம் பொறுப்பேற்றுக் கொண்டவர்களான குடும்பத்தில் இருந்தே செலவழித்தலைத் துவங்கலாம்!

இதனால் நாமும் பயன்பெற்று பிறரையும் பயனடையச் செய்து ஈருலகிலும் நன்மை பெற்று சொர்க்கம் புகுவோமாக! 

நமது நருபர்

4 கருத்துகள்:

  1. Neengal yenna solla vareenga
    Alladu neengal mudalil yanna seydeergal
    illai yenna seya poreergal

    summa adu seyi idu seyi yendru sonnal podadu seyyanum..

    LBK Karan
    Basha LBK

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பார்த்த சைட் வாசிகளே உங்களுக்கு ஒரு அறயுரை
    அதாவது மங்களமேடு போலீஸ் காரன் வாங்குற லஞ்சம்,
    நமதூரில் மின்சார வாரியம் வாங்குற லஞ்சம் ,
    கட்சி காரன் வாங்குற லஞ்சம் ,
    நமதூரில் கடை வீதியில் சாராயம் விற்பது ,
    வெளியூர் காரனிடம் நமதூர் காரன் வட்டிக்கு பணம் வாங்குவது
    வீட்டை விற்பது

    இதை எல்லாம் பார்க்காமல்
    சுன்னத் ஜமாத் வாங்குற பீஸ் பற்றி
    மட்டும் எழுதுவது உண்மையில் கண்டிக்க தக்கது .

    இனியாவது உங்களை மாற்றி கொள்ளவும் !


    உங்களின் பெயரை சொல்வதில் உங்களுக்கு என்ன தயக்கம் ?


    உங்களுடைய சைட்டை இன்று முதல் பார்க்க கூடாது என
    முடிவு செய்த

    பாஷித்
    துபை

    050-6718109

    பதிலளிநீக்கு
  3. போலீஸ் காரன் வாங்குற லஞ்சம்,
    மின்சார வாரியம் வாங்குற லஞ்சம் ,
    கட்சி காரன் வாங்குற லஞ்சம் ,
    நமதூரில் கடை வீதியில் சாராயம் விற்பது ,
    வெளியூர் காரனிடம் நமதூர் காரன் வட்டிக்கு பணம் வாங்குவது
    வீட்டை விற்பது ...

    இவர்கள் அனைவரும் காபிர்கள் ...

    சுன்னத் ஜமாத் உள்ள பீஸ் வாங்குற ஆலிம்கள் காபிரா ?

    அப்படி என்றால் இவர்கள் பின் பற்றி தொழலாமா ?

    பதிலளிநீக்கு
  4. Adappavi
    vatikku
    sarayam
    nammaooru
    karanpa
    unnudaya
    sondakaranpa.

    ungale thirutha mudiyathu
    badil sariya illa

    Kootali group
    Dubai

    பதிலளிநீக்கு