மாநிலங்களவைத் தேர்தலில் தி.மு.க வேட்பாளர் கனிமொழிக்கு ஆதரவளிப்பதாக மனிதநேய மக்கள் கட்சி அறிவித்திருப்பது மிக மிக சாணக்கியத்தனம் நிறைந்த முடிவாகும். தமிழக அரசியலின் திசை வழிப் போக்கை அறிந்தவர்கள், ம.ம.க.வின் இந்த முடிவுக்குப் பின்னால் இருக்கும் மதிநுட்பத்தை புரிந்து கொள்வர்.
2011 சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க அணியில் இடம்பெற்ற ம.ம.க, 'எனக்கு பெட்ரமாஸ் லைட்டேதான் வேணும்' என்று அடம்பிடிக்காமல், சூழலைப் புரிந்து கொண்டு, கிடைத்த மூன்று தொகுதிகளைப் பெற்று, இரு தொகுதிகளில் வெற்றிக் கனியைப் பறித்தது. அன்று தொடங்கிய அதன் அரசியல் காய்நகர்த்தல் இன்று வேலை செய்ய ஆரம்பித்துள்ளது.
கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ம.ம.க.வுக்கு உரிய இடம் கொடுக்க மறுத்த தி.மு.க, இன்று வலியப்போய் ம.ம.க.விடம் ஆதரவு கேட்டக வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் பழைய பகையை மனதில் கொண்டு பழிவாங்க நினைக்காமல், புதிய உறவை வலுப்படுத்துவதற்கான கருவியாக மாநிலங்களவைத் தேர்தலை ம.ம.க பயன்படுத்த முனைவது அதன் அரசியல் முதிர்ச்சியைக் காட்டுகிறது.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க அணியின் நிலைப்பாடு எப்படியிருக்கும் என்பதை கணிக்க முடியாத நிலை உள்ளது. பா.ஜ.க.வில் மோடி முன்னிலைப்படுத்தப் பட்டவுடன் ஜெயலலிதா அதை வரவேற்ற விதமும், பின்னர் ஐக்கிய ஜனதா தளம் பிரிந்த பின்னர் தனது நிலையில் இருந்து ஜெயலலிதா இறங்கி வந்திருக்கும் தன்மையும் கவனிக்கத்தக்கது. மத்தியில் பா.ஜ.க அணி வலுப்பெறும் ஒரு சூழல் உருவானால் அதில் இடம்பெறும் முக்கிய கட்சியாக அ.தி.மு.க இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மேலும் கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் முஸ்லிம்களுக்கு அ.தி.மு.க கொடுத்த எந்த வாக்குறுதியையும் இதுவரை நிறைவேற்றவும் இல்லை. நிறைவேற்றுவதற்கான முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை. இப்படிப்பட்ட ஒரு இறுக்கமான நிலையில் அ.தி.மு.க.வை மேலும் நம்பிக் கொண்டிருப்பது அரசியல் ரீதியில் சரியான முடிவாக இருக்காது.
தி.மு.க.வைப் பொறுத்த வரை, சமுதாய ரீதியாக ம.ம.க அதனிடமிருந்து உரிய பலனைப் பெற்றுள்ளது. முஸ்லிம் இட ஒதுக்கீட்டை சட்டமாக்கிய முடிவு அதற்கு ஒரு சிறந்த உதாரணம். இப்போது இடஒதுக்கீட்டு அளவை உயர்த்தும் கோரிக்கையையும் தி.மு.க தலைமை மட்டுமே கனிவுடன் பரிசீலிக்கும். மீண்டும் தி.மு.க அதிகாரத்தில் அமரும்போது நிச்சயம் ம.ம.க.வால் அதை சாத்தியப்படுத்த முடியும். கடந்த கால அனுபவங்கள் அதை நமக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றன.
பெரிய கட்சிகளுக்கு தமது ஆதரவை நிரந்தரமாக பட்டா போட்டு கொடுக்காமல், சூழ்நிலைகளின் அடிப்படையில் சிறிய கட்சிகள் இதுபோல காய்நகர்த்துவது மிகவும் அவசியமானது. இன்றைய போலி ஜனநாயகத்தில் இத்தகைய தந்திரங்கள் தேவையானதும் கூட. இல்லையெனில் ஒரேயடியாக மொட்டையடித்து மிளகாய் தடவி அனுப்பி விடுவார்கள்.
மற்றபடி ம.ம.க.வின் இந்த முடிவை சந்தர்ப்பவாதம் என்று சொல்வதும், பா.ம.க.வை மிஞ்சி விட்டது ம.ம.க என்று விமர்சிப்பதும் மலிவான பரப்புரைகளே.
விளிம்பு நிலை மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் ம.ம.க போன்ற வளரும் அரசியல் கட்சிகள், ஏதாவதொரு பெரிய கட்சியை சார்ந்தே அரசியல் முடிவு எடுக்க வேண்டிய அவல நிலை உள்ளது. இது வளரும் கட்சிகளின் தவறல்ல. இன்றைய தேர்தல் முறை அப்படி. எனவே நடைமுறை சாத்தியங்களின் அடிப்படையில் பார்க்கும் போது, ம.ம.க எடுத்திருக்கும் இந்த முடிவு அதன் அரசியல் பயணத்தில் ஒரு மைல் கல்லே.
ஆளூர் ஷாநவாஸ்
ஜவாஹிருல்லா அவர்களே,
பதிலளிநீக்குசென்ற சட்டமன்றத்தேர்தலில் ஜெயலலிதா அணி வெற்றிபெற்றது உங்கள் அணியின் செல்வாக்கால் அல்ல..
கருணாநிதியின் குடுமபத்தார் செய்த ஊழல்களாலும்.. அவர்கள் மக்கள் விரோத நடவடிக்கைகளாலும் தான்.. பெரிய தீமை கருணாநிதியை விட சிறியதீமை ஜெயலலிதா மேல் என்று வாக்களித்தார்கள்..
கருணாநிதிக்கு எதிரான வாக்குகளால்.. கனிமொழியின் ஊழல்லுக்கு எதிரான அலையில் வெற்றி பெற்ற நீங்கள்.. அதே கனிமொழிக்கு ஆதரவாக நாங்கள் வாக்களிக்கப் போகிறோம் எனபது..
மக்களுக்கு செய்யும் நம்பிக்கைத் துரோகம் அல்லவா..??
சன் குழுமத்தில் செய்தித்துரையில் அகிலா என்ற பெண் ராஜாவால் பாதிக்கப்பட்ட போது அதனை அலச எந்த ஊடகங்களும் தயார் நிலையில் இல்லை....
பதிலளிநீக்குஅது போலவே இப்போது வேந்தர் வீட்டில் நடந்த ரெய்டு பற்றி அலசுவதற்கு எந்த ஊடகமும் தயாராக இல்லை....
இது போல எத்தனையோ?
இவனுங்க பன்ற தில்லாலங்கடியை இருட்டா வைச்சிக்கிட்டு மத்தவனுங்களை வெளிச்சத்துக்கு கொண்டுவாராங்களாம்...
அரசியல் வாதிகள் செய்யும் அரசியலை விட இவனுங்க பன்னுற அரசியல் கேவலமானது..
இவண்
கூட்டாளி குருப்
உண்மையை உடனுக்குடன் !!!!!!!!
கூட்டாளி குருப் விமர்சனம் ஈமெயில் மூலம் தான் வரும்னு சொன்னாங்க நீ யார் ?
நீக்குyes
நீக்குசென்ற சட்டமன்றத்தேர்தலில் ஜெயலலிதா அணி வெற்றிபெற்றது உங்கள் அணியின் செல்வாக்கால் அல்ல..
நீக்குகருணாநிதியின் குடுமபத்தார் செய்த ஊழல்களாலும்.. அவர்கள் மக்கள் விரோத நடவடிக்கைகளாலும் தான்.. பெரிய தீமை கருணாநிதியை விட சிறியதீமை ஜெயலலிதா மேல் என்று வாக்களித்தார்கள்..
கருணாநிதிக்கு எதிரான வாக்குகளால்.. கனிமொழியின் ஊழல்லுக்கு எதிரான அலையில் வெற்றி பெற்ற நீங்கள்.. அதே கனிமொழிக்கு ஆதரவாக நாங்கள் வாக்களிக்கப் போகிறோம் எனபது..
மக்களுக்கு செய்யும் நம்பிக்கைத் துரோகம் அல்லவா..??
இவண்
கூட்டாளி குழு
Pls. don't kill our Tamil Language... You should no about different between vali and Vazhi....
பதிலளிநீக்குpls. try to correct the headings.......
It's not vali -- means It's pain..
It's Vazhi.....
If you really means that it's Pain.. Then it's pain for MMK....
நீக்குIf you really meaning for (Vali)Pain... It's Absolutely perfect..... and it's really pain for MMK.....
பதிலளிநீக்கு