அரை நூற்றாண்டுகளை கடந்த லெப்பைக்குடிக்காடு பொது நூலகம்
அறிவுக் களஞ்சியமான பொது நூலகம் லெப்பைக்குடிக்காடு மாநகரில் 15.07.1957 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 06.09.1958 அன்று R.கல்யாணசுந்தரம்
அவர்கள் முதல் உறுப்பினராகவும் 19.10.1958 ல் B.முகமது யூசுப் அவர்கள் இரண்டாவது உறுப்பினராகவும் அதைத் தொடர்ந்து தற்போது 05.05.2013 வரை 2767 உறுப்பினர்கள் பதிவு செய்துள்ளனர். தற்போதைய நூல் இருப்பு 34,083. புரவலர்கள் எண்ணிக்கை 38.
லெப்பைக்குடிக்காடு நிர்வாகத்தினரால் ஜமாலியா நகரில் தனி இடம் ஒதுக்கப்பட்டது. 01.08.1999 முதல் சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மாணாக்கர்களின் புத்திக் கூர்மையை பெருக்கிக் கொள்ள பொது அறிவு நூல்கள் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளன. சமுதாயத்தின் மீது தெளிவு பெற சமுதாய நூல்களும் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழிகாட்டி நூல்கள் இந்நாட்டு அயல்நாட்டு எழுத்தாளர்களின் அற்புதமான கதைகள் கவிதைகள் அடங்கிய நூல்கள் இன்னும் ஏராளமான தலைப்புகளின் கீழ் நூல்கள் உள்ளன.
இன்றைய கால கட்டமானது கணினி மற்றும் தொலைக்காட்சியில் மக்கள் மனநிலை ஆழ்ந்துவிட்டது. அதுவும் குறிப்பாக கைப் பேசியினால் வாழ்க்கையே சுருங்கி விட்டது என கூறலாம். அரை நூற்றாண்டுகளை கடந்து ஒரு நூலகம் வெற்றிப் பாதையில் சென்று கொண்டிருக்கும் அதே வேளையில் தினந்தோறும் பயன்பெறும் உறுப்பினர்கள் எண்ணிக்கை 15 லிருந்து 20 க்குள்ளாகவே இருப்பது மிகவும் வேதனையான விசயமாக உள்ளது.
அனைத்து வகையான நாளேடுகளை ஒரே இடத்தில் படிக்கின்ற பொன்னான வாய்ப்புகள் எத்தனை ஊர்களில் உள்ளது. எளிதாய் கிடைத்திருக்கின்ற வாய்ப்பை இளைஞர்கள் மற்றும் ஊர் மக்கள் தினமும் அரை மணிநேரம் ஒதுக்கி தங்களின் பதிவுகளை வெளிப்படுத்தினால் அறிவு ஜீவிகளான நம்மையும் நமதூரையும் உலகமே திரும்பிப்பார்க்கும் என்பது நிஜம்.
புகைப்படம் நமது நிருபர்
நன்றி குளோபல் செய்திகள் 1 JUN 2013
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக