Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 1 ஜூன், 2013

பத்தாம் வகுப்பு நமதூர் மாணவிகளின் சாதனை

பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி கடந்த ஆண்டை விட 9.02 சதம் அதிகரித்துள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது.

பெரம்பலூர் மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி அரசுப் பொதுத் தேர்வை 9,275 மாணவ, மாணவிகள் எழுதினர்.

இதில், 8,383 (90.38 சதவீதம்) மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். கடந்த ஆண்டில் 84.46 சத மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்ற நிலையில், நிகழாண்டு 5.92 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்ட அரசு பள்ளிகள் அளவில், பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர். சுபாஷினி 493 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும்,லெப்பைக்குடிக்காடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி வி. பாத்திமா பானு, கீழப்பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி டி.தமிழரசி ஆகியோர் 489 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், லெப்பைக்குடிக்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஹெச்.அமீர்ஹபீப் 487 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் தேர்ச்சியை அதிகரிப்பதற்காக பல்வேறு சிறப்பு வகுப்புகள் விடுமுறை நாள்களில் நடத்தப்பட்டன.

இதன் காரணமாக அரசு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் தேர்ச்சி வீதம் கடந்த ஆண்டை விட 9.02 சதம் உயர்ந்துள்ளது.

இந்நிகழ்ச்சியில், முதன்மை கல்வி அலுவலர் கே.ஜி.மல்லிகா, மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) வி.சுப்பிரமணியன் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள், பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நன்றி தினமணி

3 கருத்துகள்: