பாலைவன சிங்கம் உமர் முக்தார்...
இயற்கையில் உமர் முக்தார் ‘மதரஸா‘வில் குர்ஆன் போதிக்கும் ஆசான். ஆனால் யுத்த களத்தில் மிகச்சிறந்த கொரில்லா போர் தந்திரங்களை கையாண்டவர். போர் தந்திரம் மற்றும் தாக்குதலின் மூலம் பல நேரங்களில் இத்தாலிய படையை நிலைகுலைய செய்திருக்கிறார். 20 வருடங்களாக இத்தாலிக்கு எதிராக உமர் முக்தார் மேற்கொண்ட கொரில்லா யுத்த முறையையும் லிபியாவின் அன்றைய கால அரசியலையும் மையமாகக் கொண்டு நாவல் வடிவில் இப்புத்தகம் படைக்கப்பட்டுள்ளது.
அன்று உலகின் மிகவும் பலம் பொருந்திய சர்வாதிகாரியாக விளங்கிய முசோலினி, உமர் முக்தாரின் பாலைவன போர் தந்திரத்தை புரிந்து கொள்ள முடியாமல் திணறி போனார் என்பது வரலாறு. உமர் முக்தாரின் லிபிய போராட்ட வரலாறு நடந்து முடிந்து 80 ஆண்டுகள் ஆகிவிட்டபோதிலும், நம் கண் முன்னால் நடப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகின்ற விதத்தில் இந்நாவலை விறுவிறுப்புடன் படைத்திருக்கிறார். நூலாசிரியர் ஏ.எம்.யூசுப். அரபு அல்லாத உலக மொழிகலில் உமர் முக்தாரைப் பற்றிய முதலாவது முழு நூல் இது. 21 ம் நூற்றாண்டின் இளைய தலைமுறையின் கைகளில் தவழக்கூடிய விதத்தில் நூல் அமைந்துள்ளது.
வெளியிட்டோர் - புதுயுகம். 26 பேர்க்ஸ் ரோடு, பெரியமேடு, சென்னை-3 விலை 150
நன்றி தினத்தந்தி 5-6-2013
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக