Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 19 ஜூன், 2013

வளர் பிறை - 2

முஸ்தஃபா கொஞ்சம் கொஞ்சமாக குடும்பச் சூழ்நிலையையும், தனது பொறுப்பையும் அந்தச் சிறு வயதிலேயே உணர ஆரம்பித்தான்.
ஹாஜராம்மா வீட்டிலேயே காலையில் இட்லி, மாலையில் பலகாரம் போன்றவை தயார் செய்து கொடுப்பார். முஸ்தஃபா அதை தெருவில் விற்பனை செய்து வருவதும், விடுமுறை நாட்களில் ஊரில் பிளம்பிங், எலக்ட்ரிக்கல் வேலை பார்ப்பவர்களுக்கு உதவியாகவும் சென்று வருவான். இப்படியே 12ம் வகுப்பும் முடிந்தது.

முஸ்தஃபா : அம்மா… நான் மேற்கொண்டு படிக்கல. தினமும் வேலைக்கு போன என்னால இதவிட கொஞ்சம் காசு அதிகமா கொண்டு வர முடியும்.
ஹாஜராம்மா : அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால நீ இவ்வளவு கஷ்டத்தோட 12ம் வகுப்பு வரை முடிச்சிட்ட. இந்த காலத்துல படிச்சவங்களுக்குதான் மரியாத. உன் வாழ்க்கை நல்ல படியா இருக்கணும். கஷ்டப்பட்டது, கடன் காரனுக்கு கை கெட்டுனது எல்லாமே எங்களோட போகட்டும். உங்க வாழ்க்கை நல்லா இருக்கணும்னுதான் நான் இவ்வளவு கஷ்டபடுறேன். நீ கண்டிப்பா கல்லூரில போய் படிக்கத்தான் செய்யணும். கஷ்டத்தோட கஷ்டம் மூன்று வருடம்தான… கண்ண மூடி திறக்குறதுக்குள்ள ஓடிப் போய்டும்.
அம்மாவின் வார்த்தையைத் தட்ட முடியாத முஸ்தஃபா ஒரு கல்லூரியில் இளநிலை விலங்கியல் துறையில் சேர்ந்தான்.
வண்ணமயமான கல்லூரி வாழ்க்கை முஸ்தஃபாவை வா வா என்று வரவேற்றது. மாணவர்கள் ஓரிரு நாட்களில் நண்பர்களாக மாறினார்கள். அதில் ஸாதிக், கணேஷ், இர்ஃபான் போன்றவர்கள் நெருங்கிய நண்பர்களாக மாறினார்கள். இவர்கள் யாருக்கும் முஸ்தஃபாவைப் போன்ற சூழல் கிடையாது. காசுக்கும் பஞ்சம் கிடையாது.
பெண்களோடு வகுப்பறையில் சேர்ந்து படிப்பது முதல் முறை என்பதால் பள்ளிக்கூட காலங்களை விட கல்லூரி முற்றிலும் மாறுபட்டதாக உணர்ந்தான் முஸ்தஃபா. தானும் மற்றவர்களைப் போல ஆடை அணிய வேண்டும், செலவு செய்ய வேண்டும் என்று பருவ வயது வேலையைக் காட்ட ஆரம்பித்தது.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்…)

நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக