Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 3 ஜூன், 2013

சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு 2013-2014 ஆண்டுக்கான கல்வி உதவி தொகை - தமிழக அரசு அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பயிலும் சிறுபான்மையின (இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் ,புத்த மதத்தினர், சீக்கியர்கள், பார்சிகள்) மாணவ – மாணவிகளுக்கு 2013-2014 ஆண்டுக்கான கல்வி உதவித் தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. 2013-14ம் கல்வியாண்டிற்கு, புதிதாக உதவித்தொகை பெறவும் மற்றும் முந்தைய வருடம் பெற்று கொண்டிருக்கும் உதவித்தொகையை புதுப்பிக்கவும் விண்ணப்பங்கள் வரவேற்க்கபடுகின்றன.
விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் :

1) 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ – மாணவிகளுக்கு


2) பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்

3) இறுதித் தேர்வில் 50% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்

4) ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக 2 நபர்களுக்கு மட்டும்வழங்கப்படும்

5)மாணவிகளுக்கு 30 சதவிகிதம் சிறப்பு ஒதுக்கீடு அளிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதள முகவரிக்கு சென்று பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.


பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தேவையான ஆவணங்களுடன் குறிப்பிட்ட தேதிக்குள் தங்களுடைய கல்வி நிறுவனங்களில் சமர்ப்பிக்க வேண்டும்.

இணைக்க வேண்டிய ஆவணங்கள் :

1. பிறப்பு சான்றிதழ்

2. வருமான சான்றிதழ்

3. சாதி சான்றிதழ்

4. முகவரி சான்றிதழ்

5. மாணவர்களின் வங்கி கணக்கு எண்

மேற்கண்ட ஆவணங்களுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தங்களுடைய பிள்ளைகள் பயிலும் பள்ளிகளில் ஜூலை மாதம் இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆண்டிற்கு கல்வி உதவியாக சுமார் 6500 வரை வழங்கப்படும். எனவே நமதூர் பெற்றோர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு நமது இணையத்தளத்தின் மூலம் கேட்டுக் கொள்கிறோம்.
நமது நிருபர்

1 கருத்து:

  1. அஸ்ஸலாமு அலைக்கும்
    அன்பார்த்த சைட் வாசிகளே உங்களுக்கு ஒரு அறயுரை
    அதாவது மங்களமேடு போலீஸ் காரன் வாங்குற லஞ்சம்,
    நமதூரில் மின்சார வாரியம் வாங்குற லஞ்சம் ,
    கட்சி காரன் வாங்குற லஞ்சம் ,
    நமதூரில் கடை வீதியில் சாராயம் விற்பது ,
    வெளியூர் காரனிடம் நமதூர் காரன் வட்டிக்கு பணம் வாங்குவது
    வீட்டை விற்பது

    இதை எல்லாம் பார்க்காமல்
    சுன்னத் ஜமாத் வாங்குற பீஸ் பற்றி
    மட்டும் எழுதுவது உண்மையில் கண்டிக்க தக்கது .

    இனியாவது உங்களை மாற்றி கொள்ளவும் !


    உங்களின் பெயரை சொல்வதில் உங்களுக்கு என்ன தயக்கம் ?


    உங்களுடைய சைட்டை இன்று முதல் பார்க்க கூடாது என
    முடிவு செய்த

    பாஷித்
    துபை

    050-6718109

    பதிலளிநீக்கு