இருபது விழுக்காடு சாலை விபத்துக்கள் தூக்கமின்மையினால் ஏற்படுவதாக அமெரிக்க ஆய்வு கூறுகிறது.
அமெரிக்கன் தோராசிக் சொசைட்டி, சொந்த வாகனம் வைத்திருக்கும் உரிமையாளர்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கையேட்டை வெளியிட்டுள்ளது. அதில் நீண்ட தூரம் ஒரேமாதிரியான சாலையில் பயணிக்கும் ஓட்டுனருக்கு நாளடைவில் ஓ.எஸ்.எ எனப்படும் தூக்க குறைபாடு நோய்குறியீடு ஏற்படுவதாகவும் இதனால் ஓட்டுனருக்கு
சுவாச கோளாறு உட்பட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும் என்பதாகவும், தூக்கமின்மையினால் எதிர்காலத்தில் ஏற்பட போகும் விபத்து பற்றியும் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் கையேட்டை தயாரித்த குழுவின் தலைவரான கிங் மேன் ஸ்ட்ரோஹல், யுனிவெர்சிட்டி கேஸ் மெடிக்கல் சென்டரில் நிர்வாக இயக்குனராகவும் வெஸ்டர்ன் ரிசர்வ் பல்கலைகழகத்தில் தூக்க கோளாறுகள் மற்றும் தூக்கம் தொடர்பான மருத்துவ ஆய்வு மையத்தின் இயக்குனராகவும் உள்ளார்.
அவர் கூறுகையில்; ‘இந்த புதிய கையேடு வாகன உரிமையாளர்களுக்கு மட்டுமின்றி தூக்க கோளாறு தொடர்பாக சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு தூக்கமின்மை நோய் குறியீடு கோளாறின் தாக்கம் பற்றி அளவிடவும் கணிக்கவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் சுவாச கோளாறு மற்றும் அவசர சிகிச்சைக்கான அமெரிக்க பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.’ என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக