எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்..
2.மருத்துவம்--- அந்த காலத்தில் எல்லாம் இது மாதிரி நோய் எல்லாம் வந்ததில்லை என பெரியவர்கள் கூற நாம் கேள்விபடுகின்றோம். Heart Operation என்பதை தெரியாத காலமாக இருந்தது போக ஒவ்வொரு வீட்டிலும் தற்போது உள்ள நிலை ஏன்? நீரிளிவு நோய் (Sugar), இரத்த கொதிப்பு (Blood Pressure),மூட்டு வலி இல்லாத வீடே இல்லை என்ற நிலை ஏன்? உணவு உற்பத்தியிலே புகுந்து விளையாடும் ரசாயன உரங்கள்,இயற்க்கை வேளாண்மை பற்றிய விழிப்புணர்வு இல்லாமை,நம் உடலை பற்றியே நாம் புரிந்து கொள்ளாதது,உணவே மருந்து ஆக இருப்பதற்க்கு பதிலாக மருந்தே உணவாகிப்போனது.வேளாண்மைணை பற்றி படிக்கவே,Nutician,இயற்க்கை வைத்தியம்,சுற்றுபுற சூழல்,மாசுகட்டுப்பாடு பற்றி படிக்கவோ நாம் தயாரில்லை,ஏன் எனில் படிப்பது என்பதே பணம் சம்பாரிக்க மட்டும்தான் என்ற ஆழமான எண்ணத்தின் வெளிபாடு.எனவே கல்வி அறிவு இல்லாததால் விழிப்புணர்வு இல்லை.எனவே கவலை இல்லை,வீட்டை Tiles போட்டு வைத்துக் கொண்டு வெளியே கூவம் போன்ற கால்வாயும்,கொசுக்களை பரப்பும் சாக்கடைகளும் நமக்கு எந்த கவலையையும் தரவில்லை.
சில பஸ் உரிமையாளர்கள் நமதூர் வாசிகள் ஆஸ்பத்திரிக்கு சென்று சென்று கோடீஸ்வரர்களாகி விட்டனர்.ஸ்டெதஸ் கோப்போடு வந்த பல டாக்டர்(Dr)கள் இன்று மாடி மேலே மாடி கட்டி மிகப்பெரும் மருத்துவமனைக்கு சொந்தகாரர்களாகி விட்டனர்.ஆனால் நம் பயணம்,நம் நோய் மட்டும் தீர்ந்த பாடில்லை.நம் முழு வருமானத்தில் 40% க்கும் மேல் மருத்துவத்திற்காக அதற்க்கு மேலும் செலவழிக்கின்றோம்.
நிழல் தரும் மரம்,மக்கள் பயன்படுத்தும் நீர் நிலைகளில் மல,ஜலம் கழிப்பது சாபத்துக்குறிய பெரும் பாவமாக இஸ்லாம் கூறி இருந்தும்,செப்டிக் tank கட்டாமல் Toilet-ல் இருந்து வாய்காலில் வந்து விழுவது போல குழாய்களை அமைத்துள்ள வீடுகளை சேர்ந்தவர்களே,குப்பைகளை வாய்காலில் கொட்டுபவர்களே,நீங்கள் மேலே சொன்ன சாபத்தை பெற்று விடுவீர்கள்.எனவே அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள்.இந்த வாய்வாலை நம்பியே வாழும் மக்களின் குடிநீர்,விவசாயம்,சுகாதாரத்தை நீங்கள் கேள்விக்குறியாக்கின்றீர்கள்.நாளை அல்லாஹ் உங்களை கடுமையான தண்டணைக்குள்ளாக்க நேரிடும்.எனவே நீங்கள் திருந்தி உங்கள் பாவத்திற்க்கு வருந்தி பச்சாதாபபட்டு வல்ல அல்லாஹ்விடும் மன்னிப்பு கேட்டு உங்கள் செப்டிக் டேங் அமைத்து கொண்டு தெருவில் செல்லும் சாக்கடையோடு விட்டு விடுங்கள்.கால்வாயை காப்பாற்றுங்கள்.
பஞ்சாயத்து போர்ட்டு நமதூர் சுகாதாரத்தின் மீது அக்கரை எடுத்து கடுமையான சட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.கண்ட இடங்களில் குப்பை கொட்டுபவர்கள்,கழிவு நீரை வாய்காலில் கலப்பவர்கள்,கோழிக்கடை,இறைச்சி கடை ஹோட்டல்கள் சுத்தம் பராமரிக்க பட வில்லையெனில் பூட்டி சீல் வைக்கபடவும்,அபராதம்,குடிநீர்,மின் வெட்டு என்று கடுமையாக செயல்படுத்தினால் தான் இது நேடைமுறைக்குவரும்.
சாக்கடையில் உட்கார்ந்து இருக்கும் இரு கோழிக்கடை கோழிகளின் புகைப்படம் (Photo) நமக்கு எதை சொலகிறது.அதை உண்பவர்களின் கதி என்னவாகும்.எந்த ஒரு விதி முறைக்கும் கட்டுபடாத அசுத்தமான கோழி வளர்ப்பு அறையும் அதை சுற்றி ஓடும் சாக்கடைகளும்,மேயும் கொசுக்களும்,ஈக்களும்,தொற்று நோயின் ஊற்று கண்கள் என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...
LBK சகோதர சகோதிரிகளே!
அல்ஹம்துலில்லாஹ்,நாம்
அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குபவர்களாகவும்,இறைதூதர் (ஸல்) அவர்கள் வாழ்க்கை முறை கடைபிப்பவர்களாகவும் இருக்கின்றோம்.இதை நாம் சுயபரிசோதனை செய்து பார்போம் எனில் எவ்வளவு தூரம் இஸ்லாம் காட்டிய வழிமுறையில் இருந்து மாறி நம் வசதி படி செயல்படுகின்றோம் என்பது தெளிவாகும்.
அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குபவர்களாகவும்,இறைதூதர் (ஸல்) அவர்கள் வாழ்க்கை முறை கடைபிப்பவர்களாகவும் இருக்கின்றோம்.இதை நாம் சுயபரிசோதனை செய்து பார்போம் எனில் எவ்வளவு தூரம் இஸ்லாம் காட்டிய வழிமுறையில் இருந்து மாறி நம் வசதி படி செயல்படுகின்றோம் என்பது தெளிவாகும்.
நாம் அதிகமதிகம் தியாகத்தோடு சம்பாரிக்கும் பொருளாதாரம் எப்படி செலவிடப்படுகின்றது.அல்லாஹ் நாளை மறுமையில் பொருளை எவ்வாறு ஈட்டினாய்? எவ்வாறு செலவு செய்தாய் என்று கேள்வி கேட்ப்பான்.நம்முடைய பொருள் 1.கல்வி 2.மருத்துவம் 3.வீடு கட்டுதல் காகவும் செலவிடப்படுகிறது.
1.கல்வி.-- பயனுள்ள (அ) பயனற்ற கல்வி. பயனுள்ள கல்வி எனில் ஆனாயினும்,பெண்ணாயினும் தன் கடமையை நிறைவேற்ற உதவியாக இருக்க வேண்டும்.ஆணின் கடமை பெரூளீட்டி மனைவி,மக்கள் உற்றார் உறவினர் தேவைகளை பூர்த்தி செய்வது.பெண்ணின் கடமை கணவனுக்கு,குழந்தைகள்,பெரியவர்கள்,உறவினர்கள் பணிவிடைகள்,பராமரிப்பு,வளர்ப்பு,விருந்துபச்சாரம்,உறவுமுறை பேணுதல்,நோய் அனுகாமல் பாதுகாத்தல்,சுத்தம் இவைகளாகும்.அவரவர் கடமைகளை சரிவர செய்ய கற்க்கும் கல்வி உதவியாக இருந்தால்தான் குடும்பம் ஜெயிக்கும்.அதை விட்டுவிட்டு திருமண பத்திரிக்கையில் போட்டுக் கொள்வதற்காகவும்,மாப்பிள்ளை கிடைக்கும் என்ற எண்ணத்திலும் பெண்கள் தங்கள் கல்வியை தேர்தெடுப்பது பயனற்றதாகி உள்ளதை கண்கூடாக நடைமுறையில் பார்கின்றோம்.

இந்த முழு மனித சமுதாயத்துக்கும் வாழ்க்கை முறையை செல்லிதர தேர்ந்தெடுக்கப்பட்ட சமுதாயம் நாம்,நம் கல்வி மார்க்கம் சார்ந்ததாக இல்லை.நபி(ஸல்) வழி முறையை கடைபிடித்தாலே அணைத்துக்கும் அருமருந்து,அந்த நபி(ஸல்) நமக்கு கற்றுதராதது அல்ல எதுவும்.ஆனால் நாம்தான் அதை புறக்கணித்து விட்டோம்.

அல்லாஹ் மிகவும் கிருபையுடையவனாகவும்,மன்னிக்ககூடியவனாகவும் இருக்கின்றான்.
நாம் தொலை நோக்கு பார்வை இல்லாதவர்களாக இருக்கின்றோம்.பொதுவான விஷயத்தில் அக்கறை அற்றவர்களாக இருக்கின்றோம்.நம்மிடையே ஒ(ன்)ற்று(மே)மை இல்லை.
எனவே தான் இதுவரை சாக்கடைக்கு முடிவுகட்ட முடியவில்லை.எனவே கொசுவும்,நோயும் தீரப்போவதில்லை.நாம் நோய்காக செலவிட்டதில் 10-ல் 1 பங்கு போட்டால் இந்நேரம் பாதாளசாக்கடை நடைமுறையில் வந்து இருக்கும்.


உடனடியாக இதன் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.இல்லையெனில் சம்பந்தபட்டவர்கள் மீது சம்பந்தபட்ட துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பது தான் நம் கருத்து.
இடம் சுத்தம்,உடல் சுத்தம்,உடை சுத்தம்,ஒளு செய்தல்,குளிப்பு என்று இஸ்லாம் சுத்தத்தின் முக்கியத்துவத்தை எல்லா நிலைகளிலும் வலியுறுத்திகின்றது.
சுத்தம் சுகம் தரும்....
இந்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் விதைக்கப்பட வேண்டும்.
அல்லாஹ் நமக்கு உதவி செய்தால் நம்மை வெல்ல யாராலும் முடியாது... இன்ஷா அல்லாஹ்
மின் அஞ்சல் முலமாக
asalamu alaikum
பதிலளிநீக்குthanks for your information ,
we should be together to fight against
pollutions
please writte your comment and support CLEAN LBK
அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...
பதிலளிநீக்குஅருமையான கட்டுரை.உங்களுடைய இந்த பணி என்றென்றும் தொடரட்டும்.