ஞாயிறு, 31 மார்ச், 2013
பெற்றோர்களே எச்சரிக்கை!
பெற்றோர்களே
எச்சரிக்கை!
16 வயது… பெண்களுக்கு ஒருவிதமான மனரீதியான ரசாயன மாற்றத்தை கொடுக்க கூடிய ரெண்டும்
கெட்டான் வயது,
நல்லதும் தெரியாது, கெட்டதும் புரியாது என்பார்கள்.. வெழுத்ததெல்லாம் பால்
மின்னுவதெல்லாம் பொன் என்று நினைத்து விடுகிறார்கள்.
தற்பொழுது இந்த வயது அளவு 13 லிருந்து தொடங்கிவிடுகிறது.
இந்த வயதுடைய
பள்ளிக்கு செல்லும் மாணவிகள் சிலர் விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளாய் காதல்
வலையில் விழுந்து வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள். ஓரக்கண்ணால் பார்த்து… தயங்கி தயங்கி பேசி சத்தமில்லாமல் கடிதம் கொடுத்து… காதல் வளர்த்த காலம் போயே போச்சு.
சனி, 30 மார்ச், 2013
தமிழர்களை அடுத்து இலங்கையில் குறிவைக்கப்படும் முஸ்லிம்கள்! – பி.பி.சி செய்தி அறிக்கை!
இலங்கையில் தொடர்ச்சியாக பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமை, மிருகங்கள் பலியிடப்படுதல் தொடர்பான வதந்திகள், இஸ்லாமிய சட்டப்படி உண்ணப்பட வேண்டிய உணவு முறைமை (halal) தொடர்பான விமர்சனங்கள் போன்ற தொடர்ச்சியான தாக்குதல்களின் பின்னணியில், சிறிலங்காவில் வாழும் சிறுபான்மை முஸ்லீம் மக்கள் கடும்போக்கு புத்தர்களால் எவ்வாறு இலக்கு வைக்கப்பட்டுள்ளனர் என்பதை பி.பி.சி செய்தி சேவையின் சாள்ஸ் ஹவிலண்ட் ஆராய்கிறார்.
வியாழன், 28 மார்ச், 2013
வெயில் தொடக்கம்
பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்...
அவனே சூரியனை ஒளியாகவும் ( பிரகாசமாகவும் ), சந்திரனை ( அழகிய ) வெளிச்சம் தரக்கூடியதாகவும் ஆக்கி, ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவைகளுக்கு (மாறி மாறி வரக்கூடிய) தங்கும் இடங்களையும் நிர்ணயம் செய்தான். மெய்யான தக்க காரணமின்றி இவைகளை அல்லாஹ் படைக்கவில்லை. அறியக்கூடிய மக்களுக்காக(த் தன் ஆற்றலுக்குறிய) சான்றுகளை இவ்வாறு விவரிக்கிறான்.
அல்குர்ஆன் (10-5)
நமதூரில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மக்கள் நடமாட்டம் தெருக்களில் சற்று குறைவாகவே காணப்பட்டு வருகிறது.
நமதூரில் யார் முன் வருவார்கள்? எதிர்பார்க்கும் நமதூர் வாசிகள்
நமதூரில் யார் முன் வருவார்கள்? எதிர்பார்க்கும் நமதூர் வாசிகள்
நமதூரில் கடந்த நான்கு நாட்களாக தேசிய அடையாள அட்டை எடுக்கும் பணி நமதூரி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் மின்சார பிரச்சணை அதிகமாக காணப்படுவதால் வேலை சற்று தொய்வாகவே நடைபெற்று வருகிறது. இதைபற்றி ஒரு சமூக ஆர்வளர் பேரூராட்சி கவணத்திற்கு கொண்டு செல்லும் போது அதை உரியவர்கள் அலச்சியம் செய்வதின் காரணமாக அவர் மனவேதனையோடு நமது நிருபரிடம் பகிர்ந்துக்கொண்டார்.
இப்படி இருக்கும் இந்த சூழ்நிலை தொடர்ந்தால், இந்த அடையாள அட்டை
புதன், 27 மார்ச், 2013
குழந்தைகளைப் பாதுகாப்போம் ! அடுத்துக் கெடுப்பவர்களிடமிருந்து...
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
நமது குழந்தைகள் சிறுவயதிலேயே பாலியல் வன்முறைகளுக்கு ஆட்படுத்தப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஒரு மணி நேரத்திற்கு ஒரு பெண் குழந்தை கற்பழிக்கப் படுகின்றது.
பத்து குழந்தைகளில் ஒன்று பாலியல் வன்முறைக்கு பலியாகின்றது. இத்தனையும் இந்தியாவிலேயே நடைபெறுகின்றது. பாலியல் வன்முறை என்பது குழந்தைகளின் மறைவிடங்களை சில காம வெறியர்கள் தங்கள் வெறிக்குப் பயன்படுத்துவது. இந்தியாவில் வாழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளுள் பாதிபேர் பாலியல் வன்முறைகளுக்கு ஆளாக்கப்பட்டவர்களாக இருக்கின்றார்கள்.
செவ்வாய், 26 மார்ச், 2013
திங்கள், 25 மார்ச், 2013
முஸ்லிம்கள் கைது செய்யப்பட்ட தீவிரவாத வழக்குகளில் விரைவில் தீர்வு காண சிறப்பு நீதிமன்றங்கள்!
முஸ்லிம் இளைஞர்கள் கைதுச்செய்யப்பட்டுள்ள தீவிரவாத வழக்குகளை விரைவில் முடிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் சுசில்குமார் ஷிண்டே கூறியுள்ளார். நிரபராதிகளை தீவிரவாத வழக்குகளில் சிக்கவைக்கும் புலனாய்வு அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஷிண்டே உறுதியளித்துள்ளார்.
முஸ்லிம்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்ட வழக்குகளை பரிசோதிக்க சிறப்பு நீதிமன்றங்களை நிறுவவேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு
ராஜபக்க்ஷேவை தூக்கிலிட வேண்டும். ஆனால் மோடியை என் நாட்டு பிரதமாராக்க வேண்டுமா...?
ராஜபக்க்ஷேவை தூக்கிலிட வேண்டும். ஆனால் மோடியை என் நாட்டு பிரதமாராக்க வேண்டுமா...?
முதலில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை வன்மையாக கண்டிக்கிறேன். அப்பாவி மக்களை மதம், மொழி, சாதி, இனம், நிறம், நாடு போன்றவைகளின் பாகுபாட்டால் மட்டும் படுகொலை செய்பவர்கள், தாக்குபவர்கள், இன அழிப்பு செய்பவர்கள் எவரும் மனிதர்கள் அல்ல. அவர்கள் சாத்தான்கள். அது யாருக்கும் நடந்தாலும் எங்கு நடந்தாலும் சரியே.
சர்வேதேச சட்டப்படி அது மிகப் பெரிய குற்றமாக கருதப்படுகிறது.
அத்தகைய சாத்தான்களை சட்டமும், உலகமும், மக்களும் தண்டிக்கா விட்டால் கடவுளினால் இந்த உலகிலேயே கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை.
இலங்கையில் அநீதி இழக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி கிடைக்க என் பிரார்த்தனைகள்.
மவ்லானா ராபிஃ நத்வி மீண்டும் முஸ்லிம் தனியார் சட்டவாரிய தலைவராக தேர்வு!
ஆல் இந்தியா முஸ்லிம் தனியார் சட்டவாரிய தேசிய தலைவராக மார்க்க அறிஞர் மவ்லானா ராபிஃ நத்வி மீண்டும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.தொடர்ச்சியாக 5-வது தடவையாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையினில் உள்ள ஜாமிஆ அரபியா சிராஜுல் உலூமில் நடந்த ஆல் இந்தியா முஸ்லிம் தனியார் சட்டவாரிய 23-வது வருடாந்திர பொதுக்குழுவில் ராபிஃ மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காழி முஜாஹிதுல் இஸ்லாம் காஸிமியின் மரணத்தைத் தொடர்ந்து ராபிஃ நத்வி முதன் முதலாக தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியாவை ஆண்ட முதல் இஸ்லாமிய அரசி....
இந்தியாவை ஆண்ட முதல் இஸ்லாமிய அரசி....
============================== ======
கி.பி. 1236 - 1240. வரை டெல்லியை ஒரு பெண் சுல்தான். இவர் இந்தியாவின் முதல் அரசி என்று அழைக்கப்படுகிறார். இவரது தந்தை பெயர் ஷம்ஸ்-வுட்-டின் அல்டமிஸ். இவர் டெல்லியை ஆண்ட மூன்றாவது சுல்தான் ஆவார். இவர் டெல்லியை கி.பி. 1211 முதல் 1236 வரை ஆட்சி செய்தார்.
இவருக்கு பல மகள்களும் மகன்களும் இருந்தனர். ஆனால் இவர் ரஸியா பேகத்தையே மிக அதிகமாக நேசித்தார். ஒரு பெண் கற்றுக் கொள்ள வேண்டிய அனைத்து விஷயங்களையும் அவளுக்குக் கற்றுக் கொடுத்தார்.
இவர் ஒரு இளவரசியாகவே வளர்க்கப்பட்டார். கூடவே அரசியல் விவகாரங்களையும் நன்கு பழகிக் கொண்டார்.
குதிரை சவாரியிலும், வாள் வித்தையிலும் தனது சகோதரர்களையும் விட மிகச் சிறந்து விளங்கினார்.
அச்சமயத்தில் இவரது தந்தை ராஜபுத்திரர்களுக்கெதிராக படையெடுத்துச் சென்றார். தான் திரும்பி வர கால தாமதம் ஆகலாம் என கருதிய அவர் தனக்கு பதிலாக தனது மகள் ரஸியா
ஞாயிறு, 24 மார்ச், 2013
Mobile வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு!
Mobile வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு!
Mobile வைத்திருக்கும் பெண்கள் கவனத்திற்கு! சில நாட்களுக்கு முன் என் தோழி ஒருவருக்கு நடந்த நிகழ்ச்சி இது . அவர் வைத்திருக்கும் மொபைல்க்கு தேவை இல்லாத SMS மற்றும் தவறான கால்கள் வந்துள்ளது. இவர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து வந்துள்ளது. வீட்டில் சொன்னால்
சனி, 23 மார்ச், 2013
உழைக்கும் தியாகிகள் !
வளைகுடா வாசிகள்
வளமையான வாழ்விற்காக
இளமைகளை தொலைத்த துர்பாக்கியசாலிகள் !
வறுமை என்ற சுனாமியால் அரபிக்கடலோரம்கரை
ஒதுங்கிய அடையாளம் தெரிந்தநடை பிணங்கள் !
சுதந்திரமாக சுற்றி
திரிந்தபோது வறுமை எனும் சூறாவளியில் சிக்கிய திசை மாறிய பறவைகள் !
நிஜத்தை தொலைத்துவிட்டு
நிழற்படத்திற்கு முத்தம் கொடுக்கும் அபாக்கிய சாலிகள் !
வெள்ளி, 22 மார்ச், 2013
நிறைகள் உண்டு ! ஆனால் குறைகள் ஏராளம் !!!
நிறைகள் உண்டு ! ஆனால் குறைகள் ஏராளம் !!!
நமதூருக்கு பிரச்சனைகளும், சிக்களும்,நெருக்கடிகளும்
ஏராளம். ஆனாலும் ஜமாத் ஓர் தொலைநோக்கு பார்வை இல்லாமலும், ஓர் சார்புடையதாகவும்
இருப்பது வேதனைக்கு உரியது.
ஆனால் குறைகளுக்கு எவ்வித பஞ்சமும் இல்லை என்பதையும் நாம்
கவனத்தில் கொள்ள வேண்டும். செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாக மாறிக்
கொண்டேயுள்ளார்கள். அத்துடன் அதிகமான மாடிவீட்டு ஏழைகளாக நமதூரில் வாழ்ந்து
வருகிறோம். அத்துடன் அதிகமான நீரிழிவு நோயாளிகள் (SUGAR), இதய நோயாளிகள் (HEART PROBLEM), இரத்த
கொதிப்பு (BLOOD PRESSURE) என பலவற்றிலும் நாம் முன்னணியில் தான் உள்ளோம்.
வியாழன், 21 மார்ச், 2013
புதன், 20 மார்ச், 2013
மொஸாத் ஏஜெண்டிற்கு டெல்லியில் ரகசிய இடத்தை ஏற்பாடுச் செய்த ‘ரா’ – அதிர்ச்சி தகவல்!
இந்திய உளவுத்துறையான ரிசர்ச் அண்ட் அனாலிசிஸ் விங்(RAW) இஸ்ரேலின் ரகசிய உளவு அமைப்பான மொஸாதிற்கு நாட்டின் தலைநகரான புதுடெல்லியில் ரகசிய இடத்தை வழங்கியுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் ஆட்சிக் காலக்கட்டத்தில் இந்தியாவில் இஸ்ரேல் நடத்தும் ரகசிய நடவடிக்கைகளுக்காக மொஸாத், டெல்லியில் ‘ரா’வுக்கு சொந்தமான இரண்டு ப்ளாட்டுக்களை உபயோகித்துள்ளது. ராஜீவ் காந்தியின் அனுமதியோடு இது நடந்ததாக முன்னாள் ‘ரா’ அதிகாரிகள் உறுதிச் செய்துள்ளனர்.
செவ்வாய், 19 மார்ச், 2013
எங்கே உள்ளது தீர்வு
எங்கே உள்ளது தீர்வு
நமதூர் கிழக்கு பள்ளிவாசல் கட்டப்பட்டு வந்த சட்டி வைக்கும் இடம் இப்பொழுது புதிய பொழிவுடன் காட்சியளிக்கிறது. கடந்த சில நாட்களாக சட்டி வைப்பதற்கு கூட இல்லாமல் இருந்த நமது கிழக்கு ஜமாஅத் சட்டி வைப்பதற்காக வேண்டி கிழக்கு கபரஸ்தான் ஓரம் சட்டிவைக்கும் இல்லத்தை கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இது ஒருபுறம் இருக்க நீங்க சட்டி வைபீங்கலோ சார்ணி வைபீங்கலோ
குஜராத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை மூடி மறைக்கும் ஊடகங்கள்!
நரேந்திர மோடியின் குஜராத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஊடகங்கள் மூடி மறைத்து வருகின்றன.
கடந்த மாதமும், இம்மாதமும் குஜராத்தின் சோட்டா உதய்பூரில் முஸ்லிம்களின் நிறுவனங்கள் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. முஸ்லிம்களும், பழங்குடியினரும் இப்பகுதியில் அதிகமாக வசிக்கின்றனர். பழங்குடியினரை பயன்படுத்தி சங்க்பரிவார்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.
ஃபலஸ்தீன் பெண் விடுதலைப் போராளி மர்யம் ஃபர்ஹாத் மரணம்!
‘உயிர் தியாகிகளின் அன்னை’ என்றழைக்கப்படும் ஃபலஸ்தீன் விடுதலைப் போராளியும், பாராளுமன்ற உறுப்பினருமான மர்யம் ஃபர்ஹாத்(வயது 64) மரணமடைந்தார். ஞாயிற்றுக் கிழமை காஸ்ஸா மருத்துவமனையில் வைத்து அவரது மரணம் நிகழ்ந்தது. நுரையீரல் மற்றும் சிறுநீரக பாதிப்பால் சிகிட்சைப் பெற்றுவந்தார் மர்யம்.
இஸ்ரேல் ஆக்கிரமிப்பிற்கு எதிரான போராட்டத்தில் முன்னணி போராளியான மர்யம் தனது தீரமிக்க உரைகளின் மூலம் ஃபலஸ்தீன் மக்களின் உள்ளங்களில் விடுதலைப் போராளியாக நீங்கா இடம் பிடித்துள்ளார். 17 வயது மகனை இஸ்ரேலியர்களை கொலைச் செய்ய போர்க்களம் அனுப்பியதன் மூலம் உலகின் கவனத்தை ஈர்த்தார் மர்யம் ஃபர்ஹாத்.
திங்கள், 18 மார்ச், 2013
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், இதயத்தை பாதுகாக்கும் வழிமுறைகள்
சிறுநீரக பாதிப்பு உள்ளவர்களுக்கு மாரடைப்பு, இதய நோய்கள், மூளை இரத்தக் குழாய் அடைப்பு(வாத நோய்) ஆகிய நோய்கள் வர 20 மடங்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இவர்கள் தங்கள் இதயத்தை சிறுநீரகங்களை விட அதிக கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். சிறுநீரக வியாதி உள்ளவர்கள் தங்கள் இதயத்தைக் காக்க 25 சிறந்த வழிகள் இதோ உங்களுக்காக…
பதின்பருவ வயதினரை சீரழிப்பதில் ஃபேஸ்புக்கிற்கு முதலிடம்!
இணையதளத்தில் அதிகமானோர் ஃபேஸ்புக் மூலமாக பாதிக்கப்படுவதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மிரட்டி காரியம் சாதிப்பதில் வெளியே உள்ளவர்களை விட இணையதளத்தில் அதிகரித்து வருவதாக அந்த ஆய்வு கூறுகிறது.
87 சதவீதம் பேர் மார்க் ஷுக்கர்பர்கின் ஃபேஸ்புக் மூலம் பாதிக்கப்படுகின்றனர். ஐந்தில் ஒருவர் ட்விட்டர் மூலம் ஏமாற்றப்படுகின்றனர். மிக அதிகமாக பாதிக்கப்படுவது 19 வயது இளம் பருவத்தினர் ஆவர்.
சமாஜ்வாதிக் கட்சியுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்தார் டெல்லி இமாம்!
உத்தரபிரதேச மாநிலத்தில் ஆளுங்கட்சியான சமாஜ்வாதியுடன் அனைத்து உறவுகளையும் துண்டித்ததாக டெல்லி ஜும்ஆ மஸ்ஜிதின் ஷாஹி இமாம் செய்யது அஹ்மத் புகாரி அறிவித்துள்ளார்.
சமாஜ்வாதிக்கட்சி தலைமையிலான அரசில் அங்கம் வகிக்கும் தனது ஆதரவாளர்கள் தமது பதவிகளை ராஜினாமாச் செய்த கடிதங்களை கட்சி தலைவர் முலாயம்சிங் யாதவிற்கு அளித்துள்ளதாக செய்தியாளர்களிடம் டெல்லி இமாம் கூறினார்.
1,70,000 இந்திய ஹஜ் பயணிகளுக்கு அனுமதி அளிக்க சவூதி அரேபியா அரசு முடிவு!
இந்த ஆண்டு-2013 புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இந்தியாவைச் சார்ந்த 1, 70,000 பயணிகளுக்கு அனுமதி வழங்க சவூதி அரேபியா அரசு முடிவுச் செய்துள்ளது.
இதுக் குறித்து சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் உள்ள இந்திய துணைத் தூதரகம் கூறியது: மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் இ.அஹ்மது, சவூதி அரேபியாவின் ஹஜ் பயணத்துக்கான அமைச்சர் முஹம்மது அல் ஹஜ்ஜாரை சனிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது, ஹஜ் பயணத்துக்கான ஏற்பாடுகள் குறித்தும் ஹஜ் ஒப்பந்தம்
ஞாயிறு, 17 மார்ச், 2013
எங்கே போனது இந்த மாணவர் பட்டாளம்??
எங்கே போனது இந்த மாணவர் பட்டாளம்??
வேலுப்பிள்ளை பிரபாகரன் தலைமையில் வெறிபிடித்த அலைந்த பாசிச விடுதலைப் புலிகள் கடந்த காலங்களில் முஸ்லிம்கள் மீது மேற்கொண்ட அராஜகங்கள் பல.
சர்வதேச சமூகமும், மேகத்திய ஊடகங்களும் விடுதலைப் புலிகளின் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இந்த அக்கிரமங்களை இதுவரை கண்டுகொள்வில்லை. முஸ்லிம் சமூகமும் புலிகள் மேற்கொண்ட அந்த அராஜக நிகழ்வுகளை உலகிற்கு உரியவகையில் எடுத்துக்கூற தவறியுள்ளது.
இந்நிலையில்தான் இன்று புதன்கிழமை பிரிட்டனில் இருந்து செயற்படும் சனல் 4 தொலைக்காட்சி இலங்கை அரசாங்கப் படைகள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர்க்குற்றம் புரிந்ததாககூறி சில ஆவணப்படங்களை காண்பிக்கவுள்ளது.
ஓராண்டுபட்டயபடிப்பு....
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
தாருஸ்ஸலாம் மகளிர்
இஸ்லாமியக் கல்லூரி
நிர்வாகம் :தாருஸ்ஸலாம்கல்விஅறக்கட்டளை.
கதவுஎண் 126, ஃபாத்திமா (ரழி) தெரு, லப்பைக்குடிகாடு.
ஓராண்டுபட்டயபடிப்பு.
சனி, 16 மார்ச், 2013
சங்பரிவாரின் மோடி எனும் மூகமூடி - குமுதம் ரிப்போர்ட்டர்
இஸ்மாயில் என்ற பெயரில் காந்தியைக் கொன்ற கோட்சேவும் காந்தியின் கொள்கையைப் பின்பற்றுவதாகக் கூறும் மோடி அரசும் இந்துத்துவா சித்தாந்தத்தின் மறுபக்கங்களே!
மோடிதான் பிரதமர் பதவிக்குத் தகுதியானவர் என்றால், இந்தியாவின் மதச்சார்பற்ற தகுதி பின்னர் என்னவாகும்? அத்வானியின் ரத யாத்திரை நிறைவடைந்த நிலையில், மோடியின் ரத யாத்திரை நாடாளுமன்றம் நோக்கி பயணத்தைத் துவக்கிவிட்டது.
அண்மையில் பா.ஜ.க.வின் தேசிய செயற்குழுக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. புதிய தலைவரான ராஜ்நாத்சிங் பலத்த கரவொலிக்கிடையில் குஜராத் முதல்வர் மோடியை மேடைக்கு வரவழைத்தார். ஆளுயர மாலை அணிவித்து, அவரின் 'ஹாட்ரிக்' சாதனையை வானளாவப் புகழ்ந்திருக்கிறார். அடுத்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமருக்கான வேட்பாளர் மோடிதான் என்பதை 'சூசகமாக' தெரிவித்துள்ளார்கள். அல்லது நாம் சூசகமாகப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது!
வியாழன், 14 மார்ச், 2013
முதலாம் ஆண்டு நமது இனையதளம்
நாம் திட்டமிட்டு செயல் படாவிட்டால் செயல்படாமல் இருக்கவே திட்டமிடுகிறோம்.!!!
(IF YOU PLAN TO FAIL, WE FAIL TO PLAN !!!)
13-03-2013 ஆம் தேதியோடு முதலாம் ஆண்டு நமது Labbaikudikadunews இனையதளம் அடியெடுத்து வைத்ததின் காரணமாக 11-03-2013 நமது இணையதளத்தின் மீளாய்வு செய்யப்பட்டது.
இதில் நமது தலைமை நிருபர் கிராத் ஓதி ஆரம்பம் செய்துவைத்தார். இதில் இணை ஆசிரியர்கள், ஒருங்கிணப்பாளர், ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ள நமது நிருபர்களும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...
கடந்த ஒரு வருட காலமாக நாம் பணியாற்றி வந்த நிகழ்வுகளையும், நிறை குறைகளையும் பற்றியும் மற்றும் வாசகர்களின் கருத்துக்களையும் இதில் கலந்தாய்வு செய்யப்பட்டது.
ஏன் இந்த இணையதளம்
புதன், 13 மார்ச், 2013
முஸ்லிம்களின் ஒற்றுமை மற்றும் போராட்ட உணர்வுக்கு கிடைத்த வெற்றி! – இடிக்கப்பட்ட கெளஸியா மஸ்ஜித் மீண்டும் கட்டப்படுகிறது!
முஸ்லிம் அமைப்புகள் ஒற்றுமையுடன் போராடியதன் விளைவாக தெற்கு டெல்லியின் மெஹ்ராலியில் உள்ள கவுஸியா காலனியில் டெல்லி வளர்ச்சி ஆணையம் இடித்த மஸ்ஜித் மற்றும் வீடுகள் மீண்டும் கட்டப்பட்டு வருகின்றன.
மஸ்ஜிதின் கட்டிடப் பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துவிட்டன. இடிக்கபட்ட வீடுகளை திரும்பவும் கட்டும் பணி விரைவில் துவங்க உள்ளது. தற்போது தற்காலிக டெண்டுகளில் வீடுகளை இழந்த முஸ்லிம்கள் தங்கியுள்ளனர்.
ஆண்டிபயாடிக்ஸுக்கு கட்டுப்படாத நோய்க் கிருமிகள்! – அதிர்ச்சி தகவல்!
ஆண்டிபயாடிக்ஸ் எனப்படும் நுண்ணுயிர் எதிரிகளால் (மருந்துகளுக்கு) நோய்க் கிருமிகள் பாதிக்கப்படாத தன்மை அதிகரித்துவருவது, பயங்கரவாதத்தைவிட மேலும் பெரிய ஆபத்து என்று இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி எச்சரித்துள்ளார்.
புதிய ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லையென்றால், சாதாரணமாக நடத்தப்படும் அறுவை சிகிச்சைகள் கூட இன்னும் 20 ஆண்டுகளில் மிகவும் ஆபத்தானவையாகக் கூடும் என்று தலைமை மருத்துவ அதிகாரி சேலி டேவிஸ் கூறினார்.
திங்கள், 11 மார்ச், 2013
Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?
தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள்,பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.
ஞாயிறு, 10 மார்ச், 2013
வ.களத்தூர் இந்து - முஸ்லிம் மோதல்களும் அரசு நடவடிக்கைகளும் உண்மை அறியும் குழு அறிக்கை
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டத்திலுள்ள, வ.களத்தூர் கிராமத்தில் இந்து -முஸ்லிம் பிரச்சினை கவலை அளிக்கத் தக்க அளவில் வடிவெடுத்துள்ளது. சென்ற பிப்ரவரி, 25 அன்று அங்குள்ள முஸ்லிம் மக்கள் மாவட்ட ஆட்சியர் வசம் தம் குடும்ப அட்டைகளைக் கொடுத்துவிட்டு ஊரை விட்டு வெளியேற முயற்சித்துள்ளனர். நேற்று சென்னையில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்ட ஆர்பாட்டம் ஒன்றும் அவர்கள் சார்பாக நடத்தப்பட்டது.
மத நல்லிணக்கம் மற்றும் சமூக ஒற்றுமையில் அக்கறை கொண்டவர்கள்
சனி, 9 மார்ச், 2013
பால் சுரக்கும் மடியிலும் இரத்தம் கேட்கும் கொசு!
மதீனாவில் ஒரு காட்சி. கடைத் தெருவில் மக்கள் ஆங்காங்கே கூடி நின்று பேசிக்கொண்டிருந்தனர்.
இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மதீனா வந்தடைந்து சில காலம்தான் ஆகியிருந்தது. ஆதலால் மக்களின் பேச்சு முழுவதும் அவர்களின் வருகையைச் சுற்றியே அமைந்திருந்தது.
கைஸ் இப்னு மதாதியா என்பவர் அந்த மக்களிடம் இவ்வாறு உரக்கக் கூறினார்: “அவ்ஸ் கோத்திரமும், கஸ்ரஜ் கோத்திரமும் இந்த மனிதருக்கு உதவி செய்வதற்குத் தீர்மானித்திருப்பது சரிதான். நாம் அதனைப் பின்பற்றவும் செய்வோம். மக்காவிலிருந்து அவர் கூட வந்தவர்களையும் நாம் ஆதரிப்போம். ஆனால் பாரசீகத்திலிருந்து வந்துள்ள ஸல்மானுக்கும், ரோமிலிருந்து வந்துள்ள ஸுஹைபுக்கும், அபிசீனியாவிலிருந்து வந்துள்ள பிலாலுக்கும் இங்கே என்ன வேலை?”
தொப்பி அணிந்தால் ஒட்டுனர் உரிமம் கிடையாது! – திருவள்ளூர் ஆர்.டி.ஓ
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கத்தை சேர்ந்தவர் முஹம்மத் சாஜித் (25). வாகன ஓட்டுனர் உரிமத்துக்காக திருவள்ளூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். நேற்றைய தினம் லேனர் பெறுவதற்காக, ஆர்.டி.ஓ அலுவலகத்தில் புகைப்படம் எடுக்கச்சென்ற அவரை, தொப்பியை கழட்டும்படி அங்கிருந்த அலுவலர் கூறினார். தான் எப்போதும் தொப்பி அணியும் பழக்கமுடையவர் என்றும், வாக்காளர் அடையாள அட்டை – வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட எல்லா ஆவணங்களும் தொப்பி அணிந்த நிலையில் தான் உள்ளது எனவும் எடுத்துக்காட்டினார் முஹம்மத் சாஜித்.
வியாழன், 7 மார்ச், 2013
நிர்வாகம் + பேரூராட்சி = மக்களின் நிலை?
நிர்வாகம் + பேரூராட்சி = மக்களின் நிலை?
நமதூரில் இன்று காலை முதல் ஆற்றங்கரையோரப் பிரச்சணை தலைதூக்கியுள்ளது. இதன் மூலம் முழுமையாக பேரூராட்சியை நம்பி வந்த மக்கள், பேரூராட்சியின் உண்மை முகம் தெரிந்து விட்டது என்று சொல்லி குடும்பம் குடும்பமாக ஜமாத்திடம் முறையிட வீதிக்கு வந்தது, நமதூரில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த கூட்டத்தி்ல் நமதூர் பெண்கள் மட்டும் சுமார் 100க்கும் மேற்பட்டோர் வந்திரங்கினர். இந்த கூட்டத்தில் பெண்களிடம் நமது நிருபர் நீங்கள்
புதன், 6 மார்ச், 2013
செவ்வாய், 5 மார்ச், 2013
பெரம்பலூர் மாவட்டத்தில் மின்தடை
பெரம்பலூர் மாவட்டத்தில் மின்தடை மற்றும் மின் விநியோகம் செய்யப்படும் நேரம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் தேவராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ்- 2 அரசு பொதுத்தேர்வு நடைபெறுவதால் மங்கூன் துணை மின் நிலையத்திற்குள்பட்ட அம்மாபாளையம், மேலப்புலியூர் மின்பாதை, சிறுவாச்சூர் துணை மின் நிலையத்திற்குள்பட்ட பாடாலூர், செட்டிக்குளம், கொளக்காநத்தம் மின்பாதை, பெரம்பலூர் நகர் மற்றும் கிராமிய மின்பாதை, கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்திற்குள்பட்ட தொண்டமாந்துறை, பூலாம்பாடி மின்பாதை, மங்கலமேடு துணை மின் நிலையத்திற்குள்பட்ட லப்பைக்குடிக்காடு,வி.களத்தூர், வேப்பூர் மின்பாதை ஆகிய துணை மின்
மதுரை:பைப் வெடிகுண்டு சதிகாரர்கள் கைது! புதுவை ரயிலில் குண்டு வைத்தது அம்பலம்!
திருச்சி:ஹைதராபாத் குண்டுவெடிப்பை இந்தியன் முஜாஹிதீன் செய்ததாக ஊடகங்களும், உளவுத்துறை அறிக்கைகளும் பரப்புரை செய்துவரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மும்பையிலிருந்து புதுவை வரும் தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தான் மதுரையில் பா.ஜ.கவின் அத்வானி வருகையின் போது பைப் வெடிக்குண்டு வைத்தவர்கள் என தெரியவந்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)