லெப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் (25.03.2013) அன்று வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் ‘அம்மா திட்டம் முகாம்‘ நடைபெற்றது. இதில் லப்பைக்குடிக்காடு பேரூராட்சியை சேர்ந்த
பொதுமக்களிடமிருந்து பட்டா பெயர் மாற்றம், குடும்ப அட்டை பெயர் மாற்றம், சேர்த்தல், நீக்கல் ஆகியவை குறித்து 295 மனுக்கள் பெறப்பட்டு, உடனடியாக தீர்வு காணப்பட்டது. இத்திட்ட துவக்க விழாவில் குன்னம் தாசில்தார் செல்வம், ஆர்.ஐ. ராஜேஸ்வரி, விஏஓக்கள் சிதம்பரம், அருள் ஆகியோர் கலந்துகொண்டனர். பேரூராட்சி துணைத் தலைவர் முஹம்மது பாரூக்(எ)முஹம்மது தஸ்லீம் முன்னிலை வகித்தார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள் மீரா மொய்தீன், தாஜ்தீன், தாவூத் அலி, முக்கியஸ்தார்கள் அபுதாஹீர், நாசர், மணி முஹம்மது, சையது இப்ராஹிம் மற்றும் பொது மக்கள்கலந்து கொண்டனர்.
நன்றி தினகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக