Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 25 மார்ச், 2013

மவ்லானா ராபிஃ நத்வி மீண்டும் முஸ்லிம் தனியார் சட்டவாரிய தலைவராக தேர்வு!


ஆல் இந்தியா முஸ்லிம் தனியார் சட்டவாரிய தேசிய தலைவராக மார்க்க அறிஞர் மவ்லானா ராபிஃ நத்வி மீண்டும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.தொடர்ச்சியாக 5-வது தடவையாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜையினில் உள்ள ஜாமிஆ அரபியா சிராஜுல் உலூமில் நடந்த ஆல் இந்தியா முஸ்லிம் தனியார் சட்டவாரிய 23-வது வருடாந்திர பொதுக்குழுவில் ராபிஃ மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2002-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் காழி முஜாஹிதுல் இஸ்லாம் காஸிமியின் மரணத்தைத் தொடர்ந்து ராபிஃ நத்வி முதன் முதலாக தலைவர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மவ்லானா செய்யது நிஜாமுத்தீன் (பொதுச்செயலாளர்), வழக்கறிஞர் அப்துல்ரஹ்மான் குரைஷி (துணைப்பொதுச் செயலாளர்), மவ்லானா செய்யத் வலி ரஹ்மானி (செயலாளர்) ஆகியோர் இதர நிர்வாகிகள் ஆவர். தற்போதும் இதே பதவிகளை மேற்கண்ட நபர்கள் வகித்து வருகின்றனர்.  40 உறுப்பினர்களை கொண்ட செயற்குழுவும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இவர்களில் பெரும்பாலோர் ஏற்கனவே செயற்குழு உறுப்பினர்களாக உள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து புதிதாக ஒருவர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். போபால் காங்கிரஸ் தலைவர் ஆரிஃப் மஸூத் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உறுப்பினர் ஆவார்.
1929-ஆம் ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி ராய்பரேலியில் பிறந்த ராபிஃ நத்வி, உத்தரபிரதேச மாநிலத்தின் பிரபல இஸ்லாமிய பல்கலைக்கழகமான நத்வத்துல் உலமாவில் டைரக்டராக உள்ளார். சவூதி அரேபியாவில் உள்ள ஆலமி ராபிதா ஆதமே இஸ்லாமியின் துணைத் தலைவர், பிரிட்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்ட் செண்டர் ஆஃப் இஸ்லாமிக் ஸ்டடீஸின் புரவலர், இஸ்லாமிக் ஃபிக்ஹ் அகாடமியின் புரவலர் மற்றும் உ.பியில் பல்வேறு இஸ்லாமிய நிறுவனங்களின் தலைவர் பதவிகளையும் வகித்து வருகிறார் ராபிஃ நத்வி.
நன்றி தூது ஆன்லைன்

1 கருத்து:

  1. ஏன் சகோதரர் பி.ஜே. இந்த moulana வை விவாதிக்க முடியாது?

    பதிலளிநீக்கு