Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 28 மார்ச், 2013

நமதூரில் யார் முன் வருவார்கள்? எதிர்பார்க்கும் நமதூர் வாசிகள்

நமதூரில் யார் முன் வருவார்கள்? எதிர்பார்க்கும் நமதூர் வாசிகள்
நமதூரில் கடந்த நான்கு நாட்களாக தேசிய அடையாள அட்டை எடுக்கும் பணி நமதூரி துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில் மின்சார பிரச்சணை அதிகமாக காணப்படுவதால் வேலை சற்று தொய்வாகவே நடைபெற்று வருகிறது. இதைபற்றி ஒரு சமூக ஆர்வளர் பேரூராட்சி கவணத்திற்கு கொண்டு செல்லும் போது அதை உரியவர்கள் அலச்சியம் செய்வதின் காரணமாக அவர் மனவேதனையோடு நமது நிருபரிடம் பகிர்ந்துக்கொண்டார். 
இப்படி இருக்கும் இந்த சூழ்நிலை தொடர்ந்தால், இந்த அடையாள அட்டை
(தேசிய உரிமை அட்டை) அணைவரையும் சென்றடைவது சாத்தியப்படாத ஒன்றாக உள்ளது. இதை கருத்தில் கொண்டு ஜெனரேட்டர் மூலம் இந்த பணியை தோய்வின்றி நடைபெற நான்கு ஜமாத்தே அல்லது ஊர்மீது அதீத அக்கரைகொண்ட தீன் இயக்மமோ முன் வருவார்களா? 

இதையெல்லாம் பார்க்கும் பொழுது விலக்கை தேடி விட்டில் பூச்சி போவது போல் தோன்றுகிறது. 

இவர்கள் ஒற்றுமையோடு இருந்தால்..

இந்த விட்டில் பூச்சியை தேடி அந்த விலக்கையும் கொண்டுவர முடியும். இன்ஷா அல்லாஹ்....

நமது நிருபர்.

1 கருத்து: