Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 14 மார்ச், 2013

முதலாம் ஆண்டு நமது இனையதளம்


நாம் திட்டமிட்டு செயல் படாவிட்டால் செயல்படாமல் இருக்கவே திட்டமிடுகிறோம்.!!!
(IF YOU PLAN TO FAIL, WE FAIL TO PLAN !!!)
13-03-2013 ஆம் தேதியோடு முதலாம் ஆண்டு நமது Labbaikudikadunews இனையதளம் அடியெடுத்து வைத்ததின் காரணமாக  11-03-2013  நமது இணையதளத்தின் மீளாய்வு செய்யப்பட்டது. 
இதில் நமது தலைமை நிருபர் கிராத் ஓதி ஆரம்பம் செய்துவைத்தார். இதில் இணை ஆசிரியர்கள், ஒருங்கிணப்பாளர், ஆலோசனை குழு உறுப்பினர்கள் மற்றும் வெளிநாட்டில் உள்ள நமது நிருபர்களும் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...
கடந்த ஒரு வருட காலமாக நாம் பணியாற்றி வந்த நிகழ்வுகளையும், நிறை குறைகளையும் பற்றியும் மற்றும் வாசகர்களின் கருத்துக்களையும் இதில் கலந்தாய்வு செய்யப்பட்டது.
ஏன் இந்த இணையதளம்
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு நமதூரி்ல் உள்ள கல்வியாலர்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் ஒன்று கூடினர். இந்த கூட்டத்தி்ல் இறுதியில் அவர்கள் அனைவரும் ஏகோபித்த ஒரே கருத்தில் ஊன்றி நின்றனர். 
நமதூருக்கு ஒரு நடுநிலையன இணையதளம் வேண்டும் என்பதன் அவசர அவசியமாக துவங்கப்பட வேண்டும் என்பதே அந்த ஏகோபித்த கருத்து.
ஊரில் உள்ள செய்திகளை வெளிநாட்டில் உள்ள நமதூர் வாசிகளுக்கு கொண்டு செல்வதற்கு தற்போது உள்ள இனையதளங்கள் தங்களை ஓர் குறிகிய வட்டத்திற்குள் வளைத்துக்கொண்டனர். இதை நிவர்த்தி செய்ய சமுகத்திற்கும் நமது ஊர் செய்திகளை கொண்டு செல்ல வேண்டும் என்றால் அதற்கு இணையதளத்தின் அவசியம் இருக்க வேண்டும் என்ற கருத்து அங்கே அருதிவரை நிலவியது.
இவர்கள் விதைத்த விதை இன்று நமது இணையதளம் ஏக இறைவன் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் உதவியோடு முதலாம் ஆண்டு அடி எடுத்து வைத்துள்ளது.
கடந்து வந்த பாதைகள்
இணையதளம் ஆரம்பகாலத்தில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக்கள் இருந்தன. ஆனால் அந்த வரவேற்பு எல்லோரிடமும் எதிர்பார்க முடியவில்லை. காரணம் சமுதாயத்தில் நிலவக்கூடிய பிரச்சணைகளை முன்னிருத்தி அதற்கான தீர்வையும் வழியுருத்தும் போது ஒரு சிலர் மத்தியில் அதிக எதிப்பை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகள். இதனால் பலரிடம் மிரட்டல்கள் சந்திக்க வேண்டிய சூழ்நிலைகளும் கூட, அதைஎல்லாம் அலட்சியம் செய்தோம். இது எல்லாம் ஒரு புறம் இருக்க நமக்குள் நீ யார் என்று கேட்டு தரக்குறைவான வார்த்தையை பயன்படுத்தி எங்களை இழிவு படுத்தும் விதமாக ஈமெயில்கள்.
நாங்கள் தவரு செய்தால் சரியான ஆதாரத்தோடு சுட்டடிக்காட்டுங்கள் அதை திருத்திக்கொள்ள கடமைபட்டுள்ளோம்.
நீ யார் என்று கேட்போருக்கு நிருபர்கள் அளிக்கும் பதில் இதுதான்.
உங்கள் கண்ணாடி முன்பு இந்த கேள்வியை கேளுங்கள் அப்பொழுது தெரியும், யார் இந்த இணையதளத்தை வழி நடத்துவது என்று. இதை நீங்கள் இன்று மருத்தாளும் நாளை உங்கள் உள்ளம் இதை உருதிபடுத்தும்.
நன்றி
நமதூரின் வளர்ச்சிக்கும் ஒற்றுமைக்கும் மார்க்க அடிப்படையில் எங்களுக்கு உங்களுடை கருத்துக்களையும் விமர்ச்சனங்களையும் கொடுத்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எல்லாம்வல்ல அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக. 
உங்களுடை கட்டுரைகளும், ஆலோசனைகளும் எங்களிடம் lbkcorner@gmail.com என்ற ஈமெயில் முலம் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் ஆதரவை என்றும் எதிர் நோக்கும் நமதூர் செய்தி.
நமது நிருபர்.

10 கருத்துகள்:

  1. any body tell no stop your news and namadru news need more and dath news need please thank you

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

    உங்களுடைய பணி இன்னும் தொடர இறைவனிடம் பிராத்திற்கும்

    நியூ அம்பு இல்லம்
    துபை

    பதிலளிநீக்கு
  3. உன்னை போல் ஒருவன்15 மார்ச், 2013 அன்று 10:19 AM

    உங்களுடைய சேவைகள் மேலும் மேலும் துடர எங்களுடைய வாழ்ல்துக்கள்

    இவன்
    உன்னை போல் ஒருவன்

    பதிலளிநீக்கு
  4. அசலாமு அழைக்கும்

    நடுநிலையோடு , அச்சமின்றி , துல்யமாக ,விரைவாக உங்கள் பணி தொடரட்டும் , அல்லாஹ் உங்கள் அணைத்து உறுப்பினர்களுக்கு தன பாதுகாப்பையும் ,ரஹ்மைத்யும் பொழிவானாக .

    பதிலளிநீக்கு
  5. asalamu alaikum

    your website done a great job , Particularlly LBK news it is very very usefull to gulf peoples , thank you very much zazakumullah khair .
    I have some comments on past year news coverage some of the news are avoided or only namely published without interest for examples 1.Millath conducted edu.camp for 10,+1 & +2 with great sucess with only one photo you finish that . 2 . Annai ayish womens collage beginning function 3.recent sharath meeting this shows as some partiallity please take care in the future as the news is important to lbk people it should be covered detailed .Please increase the dubai news for lbk peoples .

    பதிலளிநீக்கு
  6. அஹமது சுல்தான்15 மார்ச், 2013 அன்று 6:25 PM

    அல்ஹம்துலில்லாஹ், மிக அருமையான சமூக விழிப்புணர்வு தளம்,

    தங்களின் பணி (நமதூர் ஒற்றுமைக்காகவும், நலனுக்காகவும் இயங்கும் தங்களின் இணைய பணி) தோய்வின்றி இயங்க வல்ல ரஹ்மான் அருள் புரிவானாக, ஆமீன்.

    பதிலளிநீக்கு
  7. சகோதரர்கள் அனைவர் மீதும் எங்க இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் நிலவட்டுமாக,


    மாஷா அல்லாஹ் லப்பைகுடிகாடு செய்தி இணையதளம் வெற்றிகரமாக முதலாம் ஆண்டை நிறைவு செய்து வெற்றிகரமாக இரண்டாம் ஆண்டில் தனது காலடியை எடுத்து வைக்கிறது.இந்த வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த அட்மின்கள் அனைவருக்கும் இந்த இணையதள வாசகரான என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.




    உங்கள் சகோதரன் முஹம்மத்

    பதிலளிநீக்கு
  8. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

    அல்ஹம்துலில்லாஹ்!

    தங்களுடைய வலைதளம் நல்ல பல தகவல்களை கடந்த வருடத்தில் தந்தது போல் எதிர்வரும் காலத்திலும் செய்ய வேண்டும் என்பது நமது ஆவல்!

    ஊர்ச் செய்திகளை உடனுக்குடன் தருவதில் தாங்களுடைய பங்களிப்பு பாராட்டத்தக்கது.

    அல்லாஹ்வுடைய திருப்தியை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இஸ்லாமிய வரம்புக்குட்பட்டு நாம் செய்யும் காரியம் நிச்சயம் நமக்கு நல்ல கூலியை இறைவனிடம் பெற்றுத்தரும், ஆகவே அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா தங்களுடைய முயற்சிகளுக்கு நற்கூலி வழங்குவானாக!

    இந்த தளம் இன்னும் நல்ல முறையில் அமைவதற்கு என்னுடைய சில யோசனைகள், உபயோகமாக இருந்தால் கவனத்தில் கொள்ளவும்:

    1. இயக்க/ஜமாத் வெறி இல்லாமல் முஸ்லிம் சமூகத்தின் அக்கறையுடன் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. ஆகவே சில இயக்கத்தின் மீது ஒரு பார்வையும் சில இயக்கத்தின் மீது மாற்றாந்தாய் பார்வையும் இருந்தால், செய்திகள் நடுநிலை தவறும் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

    2. செய்திகள் உடனுக்குடன் வேகமாக தர வேண்டும் என்ற ஆசை நல்லது. அதே சமயம் செய்யும் வேலையில் நேர்த்தி இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். ஆகவே அவ்வபோது எழுத்து பிழை மீது கவனம் செலுத்தவும். சில நேரங்களில் இவை செய்தியை வாசிப்பவர்களுக்கு சங்கடத்தை ஏற்படுத்தும். சில எழுத்து மாறினால் அர்த்தம் மாறும் அபாயம் உள்ளது.

    ஜசாகல்லாஹ் கைரன்!

    வஸ்ஸலாம்.




    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...

      எல்லாஹ் புகழும் நம்மை படைத்து வளர்த்து பரிபக்குவம் படுத்தும் அல்லாஹ்வுற்கே.
      இன்ஷா அல்லாஹ் நமதூரின் முன்னேற்றத்திற்காகவும் ஒற்றுமைக்காகவும் தொடர்ந்து பயனிப்போம்.

      நீக்கு