Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 22 மார்ச், 2013

நிறைகள் உண்டு ! ஆனால் குறைகள் ஏராளம் !!!


நிறைகள் உண்டு ! ஆனால் குறைகள் ஏராளம் !!!

நமதூருக்கு பிரச்சனைகளும், சிக்களும்,நெருக்கடிகளும் ஏராளம். ஆனாலும் ஜமாத் ஓர் தொலைநோக்கு பார்வை இல்லாமலும், ஓர் சார்புடையதாகவும் இருப்பது வேதனைக்கு உரியது.

ஆனால் குறைகளுக்கு எவ்வித பஞ்சமும் இல்லை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாக மாறிக் கொண்டேயுள்ளார்கள். அத்துடன் அதிகமான மாடிவீட்டு ஏழைகளாக நமதூரில் வாழ்ந்து வருகிறோம். அத்துடன் அதிகமான நீரிழிவு நோயாளிகள் (SUGAR), இதய நோயாளிகள் (HEART PROBLEM), இரத்த கொதிப்பு (BLOOD PRESSURE) என பலவற்றிலும் நாம் முன்னணியில் தான் உள்ளோம்.


வளர்ந்து வரும் மக்கள் தொகையை இதற்கு காரணமாக கூறுவார்கள்.
மாடிவீட்டு ஏழையாகவும், பல்வேறு நோய்களில் வீழ்ந்து கிடக்கும் நமதூர் வாசிகளின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பதிலாக கல்யாண செலவு, ஹந்திரிக்கு சோரு ஆக்குவது, பள்ளிவாசலுக்கு சட்டி வாங்குவதற்காக வறிந்து கட்டி பேசியது (தீன் இயக்கம்) இதில் தான் நிர்வாகிகளும் மக்களும் இருக்கின்றனர்.

இந்த ஊருக்கு முக்கியமான சவலாக இருப்பது பாதாளை சாக்கடை திட்டம். ஆனால் இந்த திட்டத்தை இவ்வளவு காலம் கிடப்பதற்கு காரணமாக இருப்பது நமது இரண்டு சுன்னத்துவல் ஜமாத் நிர்வாகிகலும், நம்மை மாறி மாறி ஆண்ட பஞ்சாயத்து பேர்ட்டு தலைவர்களும் தான் என்பதை கூற மறந்து விட்டனர்.

இந்த ஊரின் சில இளைங்கர்கள் ஜமாத்துக்கு எதிராக செயல் படுவதற்கு காரணம் அவர்களின் இன வெறியை (இஸ்லாம் இன வெறியை முற்றிலும் தடை செய்துள்ளது) அதாவது கிழக்கு ஜமாத், மேற்கு ஜமாத் என்று தங்களுக்கு சாதகமாக ஆக்கி கொண்டனர்.

ஊர் என்பது அர்த்தம் பொதிந்த்தாக இருக்க வேண்டுமெனில், அனைத்து ஜமாத்துக்களும் ஒன்றினைக்க வேண்டும். ஆனால் இந்த ஊரில் அதிகமாக அரசால் புறக்கணிக்கப்படுகிறோம். பேதாக்குறைக்கு ஜமாத் ஆதரவோடு வெற்றி பெற்ற து.தலைவர் கட்விழுத்து விடும் பிரச்சனைகள்.
துரதிர்ஷ் வசத்தால் இவர்களின் கையில் நிர்வாகம் சிக்கித் தவிக்கின்றன. இதில் மக்களும் விதிவிலக்கல்ல.

இந்த ஜமாத்தை மீண்டும் சுன்னத்துவல் ஜமாத் இறையாண்மைக்கு எதிராக ஒப்பந்தங்கள் (பேரூராட்சி து.தலைவரோடு செய்த ஒப்பந்தம்) நமது நிர்வாகிகளால் செய்யப்பட்டுள்ளது.

அதனுடைய ? பலனைதான் நாம் இன்று ஆத்தங்கரையோர உள்ள வீடுகள் நமக்கு காண்பிக்கின்றன.

இவற்றை எல்லாம் கானும் பொழுது எங்களுக்கு இந்த வரிகள் தான் நாபகத்திற்கு வருகிறது !!!!!

எவனோ ஒருவன் தானே கொல்லப்படுகிறான். நமக்கென்ன என இருந்து விடக் கூடாது என்பதைத் தான் மார்ட்டின் நியூமெல்லரின் கவிதை

முதலில் கம்யூனிஸ்ட்களைப் பிடித்து கொண்டு போக வந்தனர்.
நான் வாயை திறக்கவில்லை, ஏனெனில் நாம் கம்யூனிஸ்ட்கள் அல்ல...

பிறகு அவர்கள் யூதர்களைப் பிடித்து கொண்டு போக வந்தனர்.
    நான் ஏதும் பேச வில்லை, ஏனெனில் நான் யூதன் அல்ல...

பிறகு அவர்கள் கத்தோலிக்கர்களைத் தோடிக் கொண்டு வந்தனர்.
    நான் ஒரு புரொட்டெஸ்டென்ட் எனவே
நான் ஏதும் பேச வில்லை.

பிறகு அவர்கள் என்னை பிடிக்க வந்தனர்.
அப்போது எனக்காக பேசுவதற்கு
யாருமே இல்லை.
--மார்ட்டின் நியூமெல்லத் (நாஜிகளால் பலியானவர்)
இது தான் இன்று நமதூருக்கு நடந்து கொண்டு உள்ளது.

யாஅல்லாஹ் நாங்கள் உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவி தேடுகிறோம். நீ எங்களை நேரான வழியில் நடத்துவாயாக. 
(அல்குர்ஆன் 1 :4-6 ) 

 நமது நிருபர்

2 கருத்துகள்:

  1. அல்லாஹ் மென்மேலும் தங்களுக்கு நல்ல சமுதாய சிந்தனை கொண்ட எழுத்தாற்றல் தந்தருள்வானாக!

    பதிலளிநீக்கு
  2. asalamu alaikum
    jamath aatharvu illamal makal nailavarai tharthedukum poluthu than ethairku theervu varum

    பதிலளிநீக்கு