Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 28 மார்ச், 2013

வெயில் தொடக்கம்

 பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம்...



அவனே சூரியனை ஒளியாகவும் ( பிரகாசமாகவும் ), சந்திரனை ( அழகிய ) வெளிச்சம் தரக்கூடியதாகவும் ஆக்கி, ஆண்டுகளின் எண்ணிக்கையையும் (மாதங்களின்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவைகளுக்கு (மாறி மாறி வரக்கூடிய) தங்கும் இடங்களையும் நிர்ணயம் செய்தான். மெய்யான தக்க காரணமின்றி இவைகளை அல்லாஹ் படைக்கவில்லை. அறியக்கூடிய மக்களுக்காக(த் தன் ஆற்றலுக்குறிய) சான்றுகளை இவ்வாறு விவரிக்கிறான். 
அல்குர்ஆன் (10-5)
நமதூரில் கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. மக்கள் நடமாட்டம் தெருக்களில் சற்று குறைவாகவே காணப்பட்டு வருகிறது.

இதை கருத்தில் கொண்டு வயதானவர்களும், குழந்தைகளும் தண்ணீர் அதிகமாக குடிக்குமாறு குடும்பத்தார்கள் தங்களின் குடும்பத்தை வளியுறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் தர்பூஸ்னி, நெங்கு, இளநீர் மற்றும் குளிர்சியான உணவுகளை உண்டு உடலை ஆரோக்கியத்தோடு வைத்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மக்கள் நலன் கருதி வெளியிடுவோர்.

மக்களை என்றும் இணைந்திருக்கும் நமது இணையதளம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக