ராஜபக்க்ஷேவை தூக்கிலிட வேண்டும். ஆனால் மோடியை என் நாட்டு பிரதமாராக்க வேண்டுமா...?
முதலில் இலங்கையில் நடந்த இனப்படுகொலையை வன்மையாக கண்டிக்கிறேன். அப்பாவி மக்களை மதம், மொழி, சாதி, இனம், நிறம், நாடு போன்றவைகளின் பாகுபாட்டால் மட்டும் படுகொலை செய்பவர்கள், தாக்குபவர்கள், இன அழிப்பு செய்பவர்கள் எவரும் மனிதர்கள் அல்ல. அவர்கள் சாத்தான்கள். அது யாருக்கும் நடந்தாலும் எங்கு நடந்தாலும் சரியே.
சர்வேதேச சட்டப்படி அது மிகப் பெரிய குற்றமாக கருதப்படுகிறது.
அத்தகைய சாத்தான்களை சட்டமும், உலகமும், மக்களும் தண்டிக்கா விட்டால் கடவுளினால் இந்த உலகிலேயே கண்டிப்பாக தண்டிக்கப்படுவார்கள் என்பது என்னுடைய உறுதியான நம்பிக்கை.
இலங்கையில் அநீதி இழக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு நீதி கிடைக்க என் பிரார்த்தனைகள்.
ஆனால்... அதை போன்றதொரு ஒரு இன அழிப்பு.. நம் நாட்டிலேயே நம் நாட்டு மக்களுக்கே.. அதுவும் தன் நாட்டு மக்களின் பாதுகாப்பு என்பதை முதல் கடமையாக கொண்டு செயல்பட வேண்டிய ஒரு மாநில முதல்வரின் ஒத்துழைப்போடே அவரின் மாநில மக்களுக்கே நடத்தப்பட்டதே.. அப்பொழுதெல்லாம்.. எங்கே இருந்தார்கள் இந்த போலி அரசியல்வாதிகள்? எங்கே சென்றது இந்தப் போராட்டங்கள்..? எங்கே சென்றது இந்த கொந்தளிப்பு. ஓ.. அந்த அப்பாவி மக்களுக்காக போராடுவதால் எந்த அரசியல் இலாபம் இல்லை அதனாலா...?
இலங்கையில் நடந்தது ஒரு போர். அந்தப் போரின் போது அப்பாவி மக்களும் கொல்லப்பட்டனர்.
குஜராத்தில் எந்த போர் நடந்தது...?
இலங்கையில் தமிழர்களுக்கென்று தனி நாடு கேட்டதால் போரில் ஈடுபடாத அப்பாவி தமிழர்களையும் அழித்தார்கள்.
குஜராத்தில் அழிக்கப்பட்ட அப்பாவிகள் எந்த தனி நாடு கேட்டார்கள்??
இலங்கையை பொறுத்த மட்டில் அவர்களால் ஒரு தீவிரவாத இயக்கமாக காணப்பட்ட ஒரு இயக்கத்தின் தலைவனின் மகனை கொன்றார்கள். இருந்தாலும் அது அரக்க செயலே.
குஜராத்தில் கொல்லப்பட்ட சிறுவர்களும், குழந்தைகளும், சிசுக்களும் எந்த தீவிரவாத இயக்கத்தின் வாரிசுகள்..?
இலங்கையில் நடந்த்து ஒரு இனப்படுகொலை. உண்மைதான்.
குஜராத்தில் நடந்ததின் பெயர் என்ன..? வெங்காயமா...?
ராஜபக்க்ஷேவை போற்குற்றாவளியாக அறிவிக்க வேண்டும். தூக்கிலிட வேண்டும். உண்மைதான்.
ஆனால் மோடியை மட்டும் இந்தியப் பிரதமாராக அறிவிக்க வேண்டும் இல்லையா.. ? இந்தனையும் தெரிந்துவிட்டும் இவரை பிரதமராக்க வேண்டும் என்று சொல்ல நமக்கு வெட்கம் இல்லையா...?
மதம், மொழி, சாதி, இனம், நிறம், நாடு என்ற எந்த பாகுபாடும் இன்றி அத்தனை அடக்குமுறைகளுக்கும் அநியாயங்களுக்கும் எதிராக போராடுபவன் தான்... சரியான மனிதன், அரசியல்வாதி அல்லது மாணவன் என்பவன்!!!
நான்.. கோத்ரா ரயில் எரிப்பில், குஜராத் கலவரத்தில், இலங்கைப் போரின் போது மற்றும் உலகில் இதுபோன்று நடந்த எல்லா சம்பவங்களிலும் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதையும் தாக்கப்பட்டதையும் ஒரே மனநிலையோடு எந்த பாகுபாடும் இன்றி வன்மையாக கண்டிக்கிறேன். அதில் அநியாயம் இழைக்கப்பட்ட மக்களுக்காக நீதி கிடைக்க வேண்டி இறைவனை தினமும் பிரார்த்திக்கிறேன்.
மின்னஞ்சல் மூலமாக
சர்புதீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக