Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 19 மார்ச், 2013

அத்தா கொடுத்த அறிவுரை

(இது அத்தாவின் ஆனந்த கண்ணீர்)
ஒரு நாள் மாலை 6 மணி அளவில்  சாதிக்கும் சரிபும் ஜமாலி நகர் ரோட்டில் எதிர் எதிரே நடந்து வந்தனர் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தும் பார்க்காததுபோல் முன்னோக்கி சென்றார்கள். அப்பொழுது மகள் வீட்டுக்கு சென்றுவந்த இஸ்மாயில் அத்தா இருவரையும் பார்த்தார்கள் அப்பொழுது .......


அத்தா : சாதிக்கு..... சரிபு ..... 
(இருவரும் வந்தனர் .)  எங்கப்பா இருவரும் பார்த்தும் பார்க்காதது போல போறீங்க ! இருவரும் சலாம் கூட சொல்லுவதை பார்க்க முடியவில்லை!
சாதிக்கும் சரிபும் இருவரும் ஒன்றாக பதில் தந்தார்கள் " அப்படிலாம் ஒன்னும் இல்லதா "
இதை சந்தேகமுட்ற அத்தா புன்முறுவலோடு நீங்கள் என்னிடம் மறைக்கலாம் ஆனால் எந்த ஒளிவு மறைவு இல்லதா அல்லாஹ் விடம் மறைக்க முடியாது என்றார். மார்கத்தை அழகிய முறையில் புரிந்துக்கொண்ட நீங்களே சகோதர பாசத்தை முறித்து ஏதோ ஒரு காரணத்திற்காக பேசாமல் போவது எனக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது என்றார் 
சாதிக் : நாங்கள் முன்பு ஒரே ஜமாத்தில் இருந்தோம் இப்பொழுது தனித்தனியே எங்கள் ஜமாஅத் பிரிந்து விட்டது 
சரீபு : இவர்களுடைய கருத்தும் எங்களுடைய கருத்தும் ஒத்துபோகவில்லை. அதனால் தான் நாங்கள்.......
இஸ்மாயில் அத்தா மேல் அவ்விருவரும்  மரியாதை வைத்ததின் காரணமாக, நாங்கள் இருவரில் யார் தவறு செய்தாலும் சொல்லுங்கள் திருத்திகொல்கிறோம் என்றார்கள்.
அத்தா : நம்முடைய கருத்தும் மாற்று மதத்தின் உடைய கருத்தும் ஒன்றாக இருந்தால் அலகிய முறையில் அவர்களுடன் ஒப்பந்தம் செய்துக்கொள்ளலாம் என்று இஸ்லாம் நமக்கு வழி காட்டுகிறது. இப்படி இருக்கும் பொழுது. சிறிய சிறிய கருத்து நபிதோளர்கள் மத்தியிலே வந்ததுதான் ஆனால் இதற்கு தீர்வு அவர்கள் இஸ்லாத்தின் வாயிலாக கண்டுக்கொண்டார்கள் ஆனால் நாம்? உங்கள் இரு ஜாமாதிடமும் பிரச்சனை உண்டுபன்னியவர்கள் சுமார் 5 பேர்கள் தான் இருக்கும் ஆனால் இதன் காரணமாக ஒரு கூட்டமே விலகுவது யாருக்கு லாபம்?
ஒருகாலத்தில் சண்டையிட்டு பிரிந்த மேற்கு ஜமாத்தும் கிழக்கு ஜமாத்தும்  இப்பொழுதும் கூட அவரவர் பஞ்சாயத்துக்கு வரகூடாது என்றுதான் சொல்லு வார்களே தவிர இவர்களுக்குள் நல்ல புரிதல்கள்  உள்ளது. (மார்கத்திற்கு புரம்பாகட்டும் அதைவிட்டு விடுவோம்) மார்க்கம் ஆதரிக்கு விசயங்களில் ஒன்றாகத்தான் உள்ளார்கள். அலகிய முறையில் சலாம் சொல்லுவது, பள்ளிவாசலில் ஒன்றாக தொளுதுக்கொல்வது  திருமணம், இஸ்லாமிய பயான்கள் .... போன்றவைகள்.
ஒருகாலத்தில் நீங்கள் சிருகூட்டமாக இருந்த பொழுது இவர்களிடம் ஒற்றுமை இல்லை என்று சொன்னீர்கள். ஆனால் இன்றைய நிலை
பிரிவு உண்டுபன்னியவர்களை ஒருபொழுதும் அல்லாஹ் விட்டுவைப்பதில்லை. கருத்து வேறுபாடுகள் என்றால் சகோதர துவத்தையும், ஒற்றுமையையும் விட்டு விட வேண்டும் என்ற அர்த்தமல்ல.
மார்கத்தின்  பெயரால் தவறுகள் நடக்கிறது என்றால் தவறை விட்டு வெளியேற வேண்டுமே தவிர மார்கத்தை விட்டு அல்ல!!!
அத்தா கூறிய வார்த்தைகளை கேட்டு இருவரும் தாம் செய்த தவறை திருத்திக்கொள்ளவேண்டும் என்று மனதில் உறுதி எடுத்தார்கள். மகரிபு பாங்கு சத்தம் கேட்டவுடன் அனைவரும் ஒன்றாக தொழ சென்றார்கள்
அப்பொழுது அல்லாஹ்வின் ரஹமத் மழை இறங்கியது அத்தா கொண்டுவந்த இரண்டு குடைகளில் ஒன்றை அவ்விருவருக்கும் கொடுத்தார். இருவரும் ஒன்றாக செல்வதை பார்த்து அத்தா கண்கலங்கினார். (இது ஆனந்த கண்ணீர்)
நமது நிருபர் 


4 கருத்துகள்:

  1. அஸ்ஸலாமு அலைக்கும், யோசிக்க வேண்டிய கதை, புரிய வேண்டியவர்களுக்கு புரிந்தால் சரி.5-6 பேர்களின் மூர்க்க-மான கிறுக்குத்தனம்,மற்றும் பேரியக்க மேதாவித்தனம்,சகோதர முஸ்லீம்களின் கண்ணியத்தை குறைக்க, இல்லாத குறைகளையும்,குற்றச்சாட்டையும் தோண்டி துருவும் சின்ன புத்திதனம் போன்றவற்றால்தான் இன்று சுருதி குறைந்து தனிமைபட்டு நிற்கிறார்கள். கொள்-கையில் குழப்பமில்லை என்றால் தனி தொழுகை ஏன்? பதில் சலாம் (முகமன்) இல்லையே ஏன்? வீண் வம்புகளும் எப்போதும் கடுகடுத்த முகத்தோடு குரோத பார்வை ஏன்?
    மற்றவர்கள் சிந்தித்தால் கதையின் முடிவு போன்ற ஒற்றுமை மலர அல்லாஹ் அருள் புரிவான்(இன்ஷா அல்லாஹ்)

    பதிலளிநீக்கு
  2. அஸ்ஸலாமு அலைக்கும்.
    கருத்துள்ள கதை. அதனை எழுதியவருக்கு எனது வாழ்துக்கள்.
    பிழைகள் அதிகம். கவனம் செலுத்தவும்.
    இன்ஷா அல்லஹ் ஒற்றுமையாய் இருப்போம். ஈமானுடன் இருப்போம்.

    பதிலளிநீக்கு
  3. அஸ்ஸலாமு அலைக்கும்.
    கருத்துள்ள கதை. அதனை எழுதியவருக்கு எனது வாழ்துக்கள்.
    பிழைகள் அதிகம். கவனம் செலுத்தவும்.
    இன்ஷா அல்லஹ் ஒற்றுமையாய் இருப்போம். ஈமானுடன் இருப்போம்.

    பதிலளிநீக்கு
  4. அஸ்ஸலாமு அலைக்கும்!சகோதரரே குர்ஆன் வசனம் இதை சொல்கிறது4:59. நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும்.
    திருக்குர் ஆன் நமக்கு இவ்வாறு உபதேசிக்க, தங்களின் சுய கருத்திற்க்கு முக்கியம் கொடுத்த சிலரின் விஷமத்தனதிற்க்கு பலியானவர்கள் யோசித்து நேர்வழி பெறபிரார்த்திக்கிறேன்.

    பதிலளிநீக்கு