அரசு புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுக்கு மேல் குடியிருப்போருக்கு ஒருமுறை வரன்முறைபடுத்தி பட்டா வழங்குவதற்கான காலக்கெடுவை நீட்டித்து முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருப்பதாக சட்டசபையில் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் பேசிய புதிய தமிழகம் கட்சி உறுப்பினர் டாக்டர் கிருஷ்ணசாமி, வீட்டுமனை பட்டா கோரி விண்ணப்பிப்போருக்கு பட்டாக்கள் விரைவாக வழங்கப்படுவது இல்லை. எம்.எல்.ஏ.க்கள் சிபாரிசு செய்யும் பட்டா மனுக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றார். அப்போது வருவாய்த்துறை அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் கூறியதாவது;–அரசு புறம்போக்கு நிலத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு செய்து வசித்து வரும் மக்களுக்கு ஒருமுறை வரன்முறைபடுத்தி பட்டா வழங்கும் சிறப்பு திட்டம் நடைமுறையில் இல்லை என்று சில உறுப்பினர்கள் குறிப்பிட்டார்கள்.
சிறப்பு திட்டத்திற்கு காலக்கெடு நீட்டிப்பு
அரசு புறம்போக்கு நிலம் மற்றும் அரசுக்கு தேவைப்படாத நீர்நிலைகள், மேய்க்கால், மந்தைவெளி, மயானம் உள்ளிட்ட பகுதிகளில் 5 ஆண்டுக்கு மேலாக குடியிருந்து வருவோருக்கு பட்டா வழங்குதற்கான ஒருமுறை முறைப்படுத்தும் திட்டத்தை காலநீட்டிப்பு செய்ய முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.வீடு இல்லாத ஏழை மக்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்கவும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு பசுமை வீடுகள் கட்டிக்கொடுக்கவும் அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஏழைகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்குவதுடன் வீட்டையும் கட்டிக்கொடுக்கிறோம்.இவ்வாறு அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் கூறினார்.
ஜெயலலிதாவுக்கு நன்றி
பின்னர் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினர் ஏ.பாலகிருஷ்ணன், ஒருமுறை வரன்முறைப்படுத்தி பட்டா வழங்கும் திட்டத்தை காலநீட்டிப்பு செய்து உத்தரவிட்டு இருப்பதாக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தார். ‘‘மாவட்டங்களில் பட்டா மனு மனுக்கள் மீது தூரித நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.பட்ஜெட் விவாதத்தில் கொங்கு இளைஞர் பேரவை உறுப்பினர் எம்.தனியரசு, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி உறுப்பினர் பி.வி.கதிரவன் ஆகியோர் பேசும்போது, ‘‘அதிக அளவு கிராமப்பகுதிகள் கொண்ட தொகுதிகளின் பரப்பளவு பெரிதாக இருப்பதை கணக்கில் கொண்டு நலத்திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யும் வண்ணம் எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியை ரூ.2 கோடியில் இருந்து ரூ.5 கோடியாக உயர்த்த வேண்டும்’’ என்று கோரிக்கை விடுத்தனர்.
நன்றி தினத் தந்தி
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
பதிலளிநீக்குஇதை உரிய முறையில் ஜமாத்தார்கள் மற்றும் போரூராட்சி தலைவர் தகுந்த முறையில் பயன் படுத்த வேண்டும் என துபாய் வாசிகள் சார்பாக கேட்டுக்கொள்கிறோன்.
சகோதரர்கள் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமு என்றென்றும் நிலவட்டுமாக,
பதிலளிநீக்குஅல்ஹம்துலில்லாஹ் நம் அனைவருடைய துஆக்களையும் அல்லாஹ் அங்கீகரித்து கொண்டான்.இது ஒரு நல்ல வாய்ப்பு.இதை நாம் சரியான முறையில் பயன்படுத்தி கொண்டு பட்டா இல்லாத வீடுகளுக்கு பட்டா பெற்றுக் கொள்ள அணைத்து முயற்சிகளையும் செய்ய வேண்டும் இன்ஷா அல்லாஹ்.
உங்கள் சகோதரன் முஹம்மத்