Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 13 மார்ச், 2013

ஆண்டிபயாடிக்ஸுக்கு கட்டுப்படாத நோய்க் கிருமிகள்! – அதிர்ச்சி தகவல்!


ஆண்டிபயாடிக்ஸ் எனப்படும் நுண்ணுயிர் எதிரிகளால் (மருந்துகளுக்கு) நோய்க் கிருமிகள் பாதிக்கப்படாத தன்மை அதிகரித்துவருவது, பயங்கரவாதத்தைவிட மேலும் பெரிய ஆபத்து என்று இங்கிலாந்தின் தலைமை மருத்துவ அதிகாரி எச்சரித்துள்ளார்.
புதிய ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லையென்றால், சாதாரணமாக நடத்தப்படும் அறுவை சிகிச்சைகள் கூட இன்னும் 20 ஆண்டுகளில் மிகவும் ஆபத்தானவையாகக் கூடும் என்று தலைமை மருத்துவ அதிகாரி சேலி டேவிஸ் கூறினார்.

இது ஒரு உலகளாவிய பிரச்சினை என்றும் , எப்போது வெடிக்கக்கூடிய குண்டு என்றும் அவர் வர்ணித்தார். ஒரு புதிய வகையைச் சேர்ந்த ஆண்டிபயாடிக் மருந்து ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு இப்போது 25 ஆண்டுகள் ஆகின்றன.
அதற்கு நேர் எதிராக, புதிய நோய்க் கிருமிகள் தினமும் உருவாகி வருகின்றன, மேலும், தற்போது இருக்கும் கிருமிகளும் சாதாரண சிகிச்சை முறைகளுக்கு கட்டுப்படாத தன்மை உருவாகி வருகிறது என்று அவர் கூறினார்.
புதிய நுண்ணுயிர் எதிரிகளை (ஆண்டிபயாடிக் மருந்துகள்) உருவாக்க, மருந்து நிறுவனங்களுக்கு ஊக்கம் தரப்படவேண்டும் என்றும் சேலி டேவிஸ் கூறினார்.
நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக