பெரம்பலூர் மாவட்டத்தில் மின்தடை மற்றும் மின் விநியோகம் செய்யப்படும் நேரம் குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் தேவராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிளஸ்- 2 அரசு பொதுத்தேர்வு நடைபெறுவதால் மங்கூன் துணை மின் நிலையத்திற்குள்பட்ட அம்மாபாளையம், மேலப்புலியூர் மின்பாதை, சிறுவாச்சூர் துணை மின் நிலையத்திற்குள்பட்ட பாடாலூர், செட்டிக்குளம், கொளக்காநத்தம் மின்பாதை, பெரம்பலூர் நகர் மற்றும் கிராமிய மின்பாதை, கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்திற்குள்பட்ட தொண்டமாந்துறை, பூலாம்பாடி மின்பாதை, மங்கலமேடு துணை மின் நிலையத்திற்குள்பட்ட லப்பைக்குடிக்காடு,வி.களத்தூர், வேப்பூர் மின்பாதை ஆகிய துணை மின்
நிலையங்களிலிருந்து மின்மாற்றிகள் மூலம் பயன்பெறும் பகுதிகளுக்கு காலை 6 மணி முதல், 9.30 மணி வரை மின் தடையும், 9.30 மணி முதல் 1.30 மணி வரை மின் விநியோகமும், 1.30 மணி முதல் 4 மணி வரை மின் தடையும், 4 மணி முதல் 6 மணி வரை மும்முனை மின்சாரமும், டெல்டா அல்லாத பகுதிகளுக்கு தேர்வு நாள்களில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறாத பகுதிகளில் மங்கூன் துணை மின் நிலையத்திற்குள்பட்ட அடைக்கம்பட்டி, சத்திரமனை மின்பாதை, கிருஷ்ணாபுரம் துணை மின் நிலையத்திற்குள்பட்ட கை.களத்தூர் மின்பாதை, மலையாளப்பட்டி, தொண்டமாந்துறை, கல்லப்பட்டி மின்பாதைகளில் உள்ள மின்மாற்றிகள் மூலம் பயன்பெறும் பகுதிகளுக்கு காலை 6 மணி முதல் 9.30 மணி வரை மும்முனை மின் விநியோகமும், 9 மணி முதல் 1.30 மணி வரை மின் தடையும், 1.30 மணி முதல் 4 மணி வரை டெல்டா பகுதிகளுக்கு மும்முனை மின்சாரமும், டெல்டா அல்லாத பகுதிகளுக்கு இருமுனை மின்சாரமும் விநியோகிக்கப்படும் என்றார் அவர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக