Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 9 மார்ச், 2013

தொப்பி அணிந்தால் ஒட்டுனர் உரிமம் கிடையாது! – திருவள்ளூர் ஆர்.டி.ஓ


திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கத்தை சேர்ந்தவர் முஹம்மத் சாஜித் (25). வாகன ஓட்டுனர் உரிமத்துக்காக திருவள்ளூர் ஆர்.டி.ஓ அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.  நேற்றைய தினம் லேனர் பெறுவதற்காக, ஆர்.டி.ஓ அலுவலகத்தில் புகைப்படம் எடுக்கச்சென்ற அவரை, தொப்பியை கழட்டும்படி அங்கிருந்த அலுவலர் கூறினார். தான் எப்போதும் தொப்பி அணியும் பழக்கமுடையவர் என்றும், வாக்காளர் அடையாள அட்டை – வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட எல்லா ஆவணங்களும் தொப்பி அணிந்த நிலையில் தான் உள்ளது எனவும் எடுத்துக்காட்டினார் முஹம்மத் சாஜித்.

ஆனால் புகைப்படம் எடுக்கும் அலுவலர், எதையும் ஏற்றுக்கொள்ளாததால் அங்கிருந்த வாகன உரிமம் வழங்கும் ஆய்வாளரை அணுகினார் சாஜித். அவரும், யாராக இருந்தாலும் தொப்பியை கழற்றி விட்டுத்தான்  போட்டோ எடுக்கவேண்டும், என்று நீண்ட லெக்சர் அடித்தாரே தவிர, சாஜிதுக்கு உதவ முன்வரவில்லை. நேற்று வெள்ளிக்கிழமை தொழுகைக்கு செல்லவேண்டும் என்ற நிலையிருந்ததால், அவரால் அதிகநேரம் போராட முடியாததால், விரக்தியுடன் வீடு திரும்பிவிட்டார். மீண்டும் திங்கள் கிழமை அன்று ஆர்.டி.ஓ அலுவலகம் வரவுள்ள சாஜித்துக்கு, அவரது மத சுதந்திரத்துக்கு பாதகமில்லாமல், தொப்பி அணிந்து புகைப்படம் எடுக்க அனுமதிப்பார்களா? . வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களில் தொப்பியுடன் இருந்தும் அவர்கள் போட்டோ எடுக்க அனுமதி மறுப்பது அவர்களின் முஸ்லிம் விரோத போக்கினை காட்டுகிறது.
நன்றி தூது ஆன்லைன்

1 கருத்து:

  1. Asalamu alaikum
    the same thing happen with our family members in trichy passport office . they refuse to make photo with cap. then we ask show a goverment order G O . If you show me a GO we will remove if not why should i remove . after long argument they could not show any G O for their own law . Atlast they took photo with cap and hizab

    பதிலளிநீக்கு