Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 5 பிப்ரவரி, 2014

நாளை 06.02.2014 நமதூரில் நடைபெறும் சமத்துவம் போதித்த சரித்திர நாயகம்...

வ௫கின்ற பிப்ரவரி 6ஆம் தேதி லெப்பைக் குடிகாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒ௫ங்கினைக்கும்"சமத்துவம் போதித்த சரித்திர நாயகம் முஹம்மது நபி(ஸல்) அவர்களை போற்றி மாபெரும் பொதுக்கூட்டம் "
சிறப்பாக நடைபெற உள்ளது. ம.ம.க.பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி , முஸ்லிம் லீக் துணை தலைவர் ஹாஷிம்,இ.வி.க. பொதுச்செயலாளர் தர்வேஷ் ரஷாதி,பாப்புலர் பிராண்ட் தலைவர் முஹம்மது இஸ்மாயில் ,தேசியலீக் பொதுச்செயலாளர் MGK.நிஜாமுதீன் ,இந்திய தவ்ஹீத் ஐமாத் துணை தலைவர் முஹம்மது முனீர்,கூட்டமைப்பு ஒ௫ங்கினைப்பாளர் ஹனிபா ஆகியோர் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். அணைவ௫ கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுகிறேன்.



தகவல் முகநூலிலிருந்து

3 கருத்துகள்:

  1. நம்ம ஏரியா MP என்ன இந்த பக்கம். தேர்தல் வருது அதனாலையா !!!!

    பதிலளிநீக்கு
  2. நம்ம ஏரியா MP என்ன இந்த பக்கம். தேர்தல் வருது அதனாலையா !!!!

    பதிலளிநீக்கு
  3. பெருமானார் (ஸல்) அவர்களை பற்றிய வரலாற்றை முஸ்லிம் சமூகம் பேச & பரப்ப மறந்த நிலையில், இது போன்ற நிகழ்வுகளை பார்த்து நாம் நமது பொறுப்புகளை உணர வேண்டும்.

    பிறருடைய குறைகளை பேசி காலம் தாழ்த்துவதைவிட, ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுவதே அறிவுடைமை.

    இயக்கங்கள் இஸ்லாத்திற்காகத்தானேயொழிய இஸ்லாம் இயக்கத்திற்காக
    அல்ல என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

    பிற சமூகங்களை வழிகாட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகம், இன்று பிறருடைய தயவு தாட்சன்யத்திற்காக காத்திருக்கின்றது.

    உலகை வென்றெடுத்து, நாம்தான் பிறருக்கு உரிமைகளை வழங்க வேண்டுமேயொழிய, நம்முடைய உரிமைகளுக்காக பிறரிடம் கையேந்தி காத்திருக்க கூடாது.

    எங்குமே, எப்போதுமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காஃபிர்களிடத்தில் வாழ்வாதாரத்திற்காகவோ, உரிமைக்காகவோ கையேந்தியதில்லை.
    மாறாக பெருமானார் (ஸல்) அவர்கள் “இறைவா! காஃபிர்களிடத்தில் உதவி பெறக்கூடியவனாக என்னை ஆக்கிவிடாதே!” என்று பிரார்த்தனை புரிபவர்களாகத்தான் இருந்தார்கள்.

    நாளை அல்லாஹ்வை சந்திக்கும்போது நம்முடைய பொறுப்புக்கள் குறித்து என்ன பதில் நாம் வைத்திருக்கின்றோம் என்பதை ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும்.

    நாளை மறுமையில், இன்று இருக்ககூடிய எந்த இயக்கமோ, தலைவரோ அல்லாஹ்விடத்தில் நெருக்கத்தை பெற்றுத்தர மாட்டார்கள். நம்முடைய நல்ல செயல்களைத்தவிர என்ற உண்மை உணர வேண்டும்.

    அல்லாஹ் சுப்ஹானஹூ தஆலா நம் சமூகத்தின் அருள்பாலிப்பானாக!
    நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! இறுதி மூச்சு வரை நம்முடைய பாதங்களை இஸ்லாத்திலே திடப்படுத்துவானாக! காஃபிர்களுக்கெதிராக நமக்கு உதவி செய்வானாக! ஆமீன்!


    பதிலளிநீக்கு