தமுமுக சார்பில் உ.பி. மாநிலம் முஸப்பர் நகரில் ஏற்பட்ட கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடந்த மாதம் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் நிவாரண நிதி வசூலிக்கப்பட்டது,
இதுவரை வசூலிக்கப்பட்ட நிதி 15 நாட்களில் சுமார் 1 கோடியை நெருங்கியுள்ளது.
இந்நிலையில் நிவாரண நிதியை உரியவகையில் வினியோகம் செய்வதற்காக தமுமுக குழு முஸப்பர் நகருக்கு புறப்பட்டிருக்கிறது மூத்த தலைவர்கள் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ, செ. ஹைதர் அலி, பொருளாளர் ஓ.யூ.ரஹ்மத்துல்லா, அமைப்புச் செயலாளர் சம்சுதீன் நாசர் உமரி ஆகிய நான்கு பேர் கொண்ட குழு புறப்பட்டுள்ளது.
அடுத்த 5 நாட்களுக்கு முஸப்பர் நகரில் முகாமிட்டு அகதி முகாம்களில் வாடிவதங்கும் மக்களை இக்குழு சந்திக்கவுள்ளது. அம்மக்களின் மறுவாழ்வு குறித்து அம்மாநில அரசியல் தலைவர்கள், சமூக தலைவர்கள், அறிவு ஜீவிகள், சமூக சேவகர்கள் என பல தரப்பினரையும் இக்குழு சந்திக்க உள்ளது.
இவண்
தமுமுக தலைமையகம்
வாழ்த்துக்கள்... ஆனால் இந்த விசயத்தில் பேருயியக்கம்(TNTJ) மவுனம் காப்பது அதனுடைய நன்பகத் தன்மையை கேள்விக்குறியாக்குகிறது.
பதிலளிநீக்குமுதலில் தமுமுக இயக்கதிர்கு வாழ்துக்கள்.மற்ற இயக்கங்கள் போல் விளம்பரம் தேடி அதற்காக பல லட்சங்களை சிலவு செய்து மீதம் உல்லதை வழங்காமல் அப்படியே வழங்கியமைக்கு அல்லாஹ் உங்கள் அனைவறுக்கும் நற்கூலி வழங்குவானாக. அம்மா........அழைபார் என்று நம்பி பல கோடிகளை சிலவு செய்து சிறை செல்லும் போராட்டம் நடத்தி வீன் விரையம் செய்ததை இப்பொழுது கூட்டிய பொதுகுழுவை முன்பே கூட்டி அம்மாவிற்க்கு அறிக்கை விட்டுவிட்டு அந்த பொருளாதாரத்தை முஸாபர்நகர்களவரத்தில் பாதிக்கபட்டவர்களுக்கும்,தமிழகத்தில் பல ஆண்டுகளாக விசாரனை கைதிகளாக சிறையில் வாடும் குடும்பத்தாற்கும் உதவி இருக்களாம்.
பதிலளிநீக்குபிஜேபி மற்றும் மோடியை ஆட்சியில் அமரவைக்க துடிக்கும் போலி மீடியாயக்களுக்கும் உங்களுக்கும் பெரிய வித்தியாசமில்லை( பிஜேபி ஆதரிபவர்களின் கருத்தினை பதிவு செய்வது எதிரான கருத்துகளை உடனே அழிப்பது) அதுபோல் நீங்களும் (TNTJ எதிரான நேயர்களின் கருத்தை மட்டும் வெளியிடுவது அதற்கான விளக்கத்தை கொடுக்கும் TNTJ சகோதரர்களின் கருத்தை உடனே அழிப்பது) நீங்களும் அல்லாவின் மார்கத்தில் குற்றவாளிகளே இன்ஷா அல்லாஹ் இதற்கான தண்டனை மறுமை நாளில் உங்களுக்கு கிடைக்கும்.
பதிலளிநீக்குஇந்த வெப்சைட் நடத்துவதின் உள் நோக்கம் பேரூராட்சி துணை தலைவரை திட்டுவது ஊரில் உள்ள இரண்டு ஜமாத்தை குறை சொல்வது SDPI TMMK மற்றும் தாருஸ்ஸலாம் செய்யும் சிறு நிகழ்வுகளை கூட பதிவு செய்து அவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவது. TNTJ பற்றி சில செய்திகளை பதிவு செய்து அதை எதிர்த்து வரும் கமெண்ட்ஸ் விட்டு விட்டு அதற்கு விளக்கம்தரும் கமெண்ட்ஸ் உடனடியாக நீக்குவது. தீன் இயக்கத்தை பற்றி அவதுறாக எழுதுவது. மில்லத் அறக்கட்டளையை பற்றி அவப்போது குறை கண்டு எழுதுவது. இதற்க்கு ஊரின் பெயரில் எதற்கு ஒரு வெப்சைட். அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்.
பதிலளிநீக்கு