அலுவலகத்திற்கு செல்லும் பலருக்கும் அதிகப்படியான வேலைப்பளுவினால் உண்டாகும் டென்ஷனால் மனஅழுத்தம் ஏற்படுகிறது.இத்தகைய மன அழுத்தத்தினால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு வாழ்க்கையின் மீது வெறுப்பு வருவதோடு, எந்த ஒரு செயலையும் செய்ய முடியாமல் தவிப்பார்கள்.
வேலைக்கு செல்வது என்று முடிவெடித்துவிட்டால், நிச்சயம் சில சமயங்களில் அங்கு அதிகப்படியான வேலையை செய்ய வேண்டி வரும். அப்படி அதிகப்படியான வேலையைச் செய்யும் போது, மனமானது சோர்ந்து விடுவதோடு, உடல்நலத்தையும் பாதிக்கும்.
அதுமட்டுமின்றி, இந்த மனஅழுத்தமானது வேலைப்பளுவினால் மட்டுமின்றி சுவையில்லாத உணவுகள், எரிச்சலூட்டும் வகையில் உடன் பணிபுரிவோர் செய்யும் செயல்கள், எதற்கு எடுத்தாலும் குறை சொல்லும் பாஸ் போன்றவற்றால் ஏற்படுகிறது. இதனால் மூளை அதிக அளவில் அழுத்தத்திற்கு உள்ளாகிறது.
இதன் காரணமாக உடல் ஆரோக்கியம் கெடுவது மட்டுமின்றி, உறவுகளிலும் விரிசல் ஏற்படுகிறது.
ஆகவே எவ்வளவுதான் அலுவலகத்தில் வேலைப்பளு அதிகம் இருந்தாலும் செய்யும் வேலையை விரும்பி செய்தால் நிச்சயம் மனஅழுத்தத்தில் இருந்து வெளிவர முடியும்.
இங்கு அலுவலகத்தில் ஏற்படும் டென்ஷன் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து எளிதில் வெளிவர ஒருசில எளிதான வழிகளை உங்களுக்காக கொடுத்துள்ளோம். அதைப் பின்பற்றுங்கள். நிச்சயம் மன அழுத்தத்தில் இருந்து நீங்கள் வெளிவருவதோடு, எவ்வளவு வேலை கொடுத்தாலும் சந்தோஷமாக செய்யலாம்.
ஆழ்ந்து சுவாசித்தல்
டென்ஷன் அதிகரிப்பது போன்று இருந்தால், உடனே சிறிது நேரம் கண்களை மூடி ஆழ்ந்து சுவாசிக்க ஆரம்பியுங்கள். இதனால் மனமானது அமைதி அடைந்து, அதிகப்படியாக உணர்ச்சிவசப்படுவது கட்டுப்படுத்தப்பட்டு, டென்ஷனால் எடுக்கப்படும் தவறான முடிவுகளைத் தவிர்க்கலாம்.
அமைதியாக இருத்தல்
அலுவலகத்தில் வேலை அதிகமாக இருக்கும் போது, பெரும்பாலானோர் வேலையை சீக்கிரம் முடிக்க வேண்டுமென்று அமைதியை இழந்து, ஒருவித பதற்றத்துடன் வேலையை செய்வார்கள்.
ஆனால் அப்படி இருக்கக்கூடாது. எவ்வளவுதான் வேலை அதிகமாக இருந்தாலும், மனதை அமைதியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதற்கு சிறிது நேரம் தனியாகவோ அல்லது உடன் பணிபுரிவோருடனோ நடைப்பயிற்சி சென்று வாருங்கள்.
செய்திகளைப் படியுங்கள்
மனஅழுத்தத்தைக் குறைக்க வேண்டுமானால் அதற்கு முதலில் கவனத்தை மாற்றி ஆக வேண்டும். உங்கள் கவனத்தைத் திசை திருப்ப செய்தி படித்தல் மிக அழகான ஒரு வழி. டென்ஷன் இருக்கும் நேரத்தில் மறக்காமல் தூது செய்திகளைப் படியுங்கள்.
காஃபியைத் தவிருங்கள்
அனைவரும் காஃபி குடித்தால் டென்ஷன் குறையும் என்று நினைத்து அவ்வப்போது காஃபி குடிப்பார்கள். ஆனால் உண்மையில் காஃபி குடித்தால் டென்ஷன் அதிகரிக்கும்.
ஏனெனில் காஃபியில் உள்ள காஃபினானது மனதை அமைதிப்படுத்த உதவும் அடினோசைனைக் குறைக்கும். ஆகவே காஃபியை அதிகம் குடிக்காதீர்கள்.
திக்ர் என்னும் இறைதியானம்
மனம் அமைதியிழந்து இருக்கும்போது திக்ர் என்னும் இறைதியானம் செய்தால் மனம் மட்டுமின்றி, உடலும் ஆரோக்கியமாக இருக்கும். ஏனெனில் திக்ர் செய்யும்போது உடலில் இரத்த ஓட்டமானது அதிகரித்து மனமானது அமைதியடையும். உங்களுக்கு நன்மையும் கிடைக்கும்.
நல்ல உணவுகள்
மனதை அமைதிப்படுத்துவதற்கு ஒருசில உணவுகள் உள்ளன. அத்தகைய உணவுகளை டென்ஷனாக இருக்கும்போது சாப்பிட்டால் அவை மனதை அமைதிப்படுத்துகிறது. அதிலும் பாதாம், ஆரஞ்சு, ப்ளூபெர்ரி போன்றவை மனஅழுத்தத்தைக் குறைக்க உதவும் உணவுப் பொருட்களாகும்.
வைட்டமின் சி அவசியம்
மனஅழுத்தத்தைக் குறைப்பதில் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் பெரிதும் உதவியாக இருக்கும். எனவே வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளான ஆரஞ்சு, கேரட் மற்றும் இதர சிட்ரஸ் பழங்களை வேலை செய்யும்போது சாப்பிடுங்கள்.
தண்ணீர்
மனஅழுத்தத்தைக் குறைக்க தண்ணீரை அடிக்கடி குடிக்க வேண்டும். இதனால் சோர்வடைந்துள்ள தசைகளை நீரானது அமைதியடையச் செய்வதோடு, மனதையும் அமைதிப்படுத்தும்.
நன்றி தூது ஆன்லைன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக