Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 27 பிப்ரவரி, 2014

இஸ்லாமிய மார்க்க தீர்ப்புக்களை (ஃபத்வா)சட்டத்திற்கு எதிரானவையாக கருதக்கூடாது

புதுடெல்லி, பிப்.26- இஸ்லாமிய மார்க்கதீப்புக்களை (ஃபத்வா) சட்டத்திற்கு எதிரானவையாக கருதக்கூடாது; அத்தகைய ஃபத்வாக்களை யார் மீதும் திணிக்கவும்கூடாது என உச்சநீதிமன்றம்தீர்ப்பளித்துள்ளது. 


முஸ்லிம் மதத் தலைவர்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை (ஃபத்வா) யார் மீதும் திணிக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. “முஸ்லிம் சமுதாயத்தினரின் ஷரியத் நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் “ஃபத்வா’ உத்தரவுகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானவை என அறிவிக்க வேண்டும்’ என்று விஸ்வ லோசன் மாதம் என்பவர் தாக்கல் செய்த பொது நல மனுவை விசாரித்த நீதிமன்றம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மேலும் கூறியதாவது:
“தாருல் குவாஜா’ மற்றும் “தாருல் இஃப்தா’ போன்ற மத அமைப்புகளின் செயல்பாடுகளில் நீதிமன்றம் தலையிடாது. எனினும் அவர்கள் பிறப்பிக்கும் “ஃபத்வா’ உத்தரவுகளை தனிநபர்கள் ஏற்பதும், ஏற்காமல் இருப்பதும் அவரவர் விருப்பமாகும். அதை யார் மீதும் திணிக்க முடியாது. இதனால் தங்கள் உரிமைகள் பாதிக்கப்படுவதாக கருதினால் மாநில அரசுகள் அவர்களின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உதாரணமாக, தசரா பண்டிகையை குறிப்பிட்ட தேதியில் கொண்டாட வேண்டும் என்று பூசாரி கூறினால் தவறில்லை. அதை மற்றவர்களும் பின்பற்ற வேண்டும் என்று வற்புறுத்தினால், அந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடும்.
முஸ்லிம் மதத் தலைவர்கள் பிறப்பிக்கும் “ஃபத்வா’ உத்தரவுகள் மற்றும் ஹிந்து பண்டிட்டுகளின் கணிப்புகள் போன்றவை சட்டத்துக்கு எதிரானவையாக கருதக்கூடாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக