Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

நமதூரில் உள்ள தண்ணீரில் எந்த அளவு டி.டி.எஸ் (Total Dissolved Solids) உள்ளது ?

தண்ணீரையும் மனித உடலையும் தனித்தனியாக பிரிக்க முடியாது. மனித உடலில் தண்ணீர் என்பது எவ்வளவு முக்கியமானது என்றால் உடலில் தண்ணீரின் பங்கு மூன்றில் இரண்டு ஆகும். எனவே தண்ணீர்
என்பது உயிரின் ஆதாரம். மனித உடலுக்கு தண்ணீர் எவ்வளவு முக்கியமோ அதேப்போல இந்த மண்ணிற்கு தண்ணீர் உயிராக விளங்குகிறது. மண் உயிரோடு இருந்தால் தான் செடிகொடிகள் உயிரோடு இருக்கும். அனைத்து ஜீவராசிகலும் உயிர்வாழ அடிப்படை காரணமாக தண்ணீர் விளங்குகிறது. இந்த உலகில் நவீன விஞ்ஞான வளர்ச்சியில் வளர்ச்சியில் தண்ணீரை சுயமாக ஒரு சொட்டு என்ற அளவில் கூட உருவாக்கவோ தயாரிக்கவோ முடியாது.
தண்ணீரை குறித்து 1450 வருடங்களுக்கு முன்பாக இறைவன் இவ்வாறு கூறுகிறான். தண்ணீரை கொண்டு வருவது மனிதன் இல்லை என்பது வெட்ட வெளிச்சம்.
மனிதனால் உற்பத்தி செய்யவோ, தயாரிக்கவோ முடியாத தண்ணீர் குறித்து மக்கள் இன்றளவு ஏனோ தானோ என இருக்கிறார்கள்.
தண்ணீரை தனி மனிதனோ அல்லது தேசமோ உரிமை கொண்டாட முடியாது. காரணம் தண்ணீரை உருவாக்கும் தயாரிப்பாளர்கள் யாரும் இல்லை. நிலைமை இவ்வாறு இருக்கையில் தண்ணீர் குறித்த அச்சத்தை சமீபகால சம்பவங்கள் உணர்த்துகின்றன.
தண்ணீரில் இருக்கும் கனிமங்களை அவை டி.டி.எஸ் ( Total Dissolved Solids ) என்பார்கள். ஒரு லிட்டர் தண்ணீரில் டி.டி.எஸ் ன் அளவு 300 புள்ளிகளுக்கு இருந்தால் மட்டுமே அது குடிக்க உகந்த நீர். ஆனால், இன்று தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் பொதுமக்கள் குடிக்கும் குடிநீரில் டி.டி.எஸ் ஸின் அளவு 3000 த்தை தாண்டிவிட்டது என்று “முந்நீர் விழவுஎன்ற பெயரில் நடந்த பண்பாட்டு அரசியல் கருத்தரங்கில் தண்ணீரைப் பற்றி பகிர்ந்து கொள்ளப்பட்ட அதிர்ச்சி புள்ளிவிவரம்.
உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரப்படி 1.10 கோடி பேர், அதாவது உலக மக்கள் தொகையில் 1.8 சதவீதம் பேருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்க வில்லை.
வளரும் நாடுகளில் 80 சதவீதம் உடல் உபாதைகளும், மரணங்களும் தண்ணீர் தொடர்பான நோய்களால் நிகழ்கின்றன. 2050 ல் உலக மக்கள் தொகையில் மூன்றில் இரண்டு பேருக்கு பாதுகாப்பான, சுத்தமான குடி நீர் கிடைக்காது என அதிர்ச்சிகரமான தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.

இது விழித்துக்கொள்ளும் நேரம். காலம் கடந்து பின்னர் யோசிப்பது முட்டால் தனம். எனவே நமதூர் மக்களாகிய நாம் தண்ணீர் பற்றிய அவசியம் கருதி வழிப்புணர்வையும் மழை நீர் உருவாக்கும் நீர் நிலைகளையும் மரங்களையும் உருவாக்கி இயற்கையாக நாம் பெற்ற இந்த தங்க திரவத்தை (அல்லாஹ்வின் ரஹ்மத்தை) பாதுகாக்க இப்பொழுதே முயற்சி மேற்கொள்வோமாகா !

நமது நிருபர்

3 கருத்துகள்: