Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 13 பிப்ரவரி, 2014

கடல் அலை போல உலகமெங்கும் பரவும் புற்றுநோய்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!

கடல் அலை போல புற்றுநோய் உலகெங்கும் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.
ஒவ்வொரு வருடமும் 14 மில்லியன் மக்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் ஆனால் இந்த எண்ணிக்கை 2035 வாக்கில் 24 மில்லியனாக உயரும் என்றும் இந்த நிறுவனம் கூறுகிறது.

உலகைப் பாதிக்கும் புற்றுநோயிலிருந்து கிட்டத்தட்ட பாதி அளவை வருமுன் தடுக்கமுடியும் என்று கூறும் உலக சுகாதார நிறுவனம், உடல் பருமன், மது அருந்துதல் மற்றும் புகை பிடித்தல் ஆகியவற்றை சமாளிக்க புதிய முயற்சிகள் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
புற்றுநோய் மருத்துவத்திற்கான செலவு கட்டுப்பாட்டை மீறி அதிகரிப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
புற்றுநோய் பரவுவதால் ஏற்படும் மேலதிகச் செலவு வளர்ந்து வரும் நாடுகளினாலேயே சமாளிக்க வேண்டியிருக்கும் என்றும் அது கூறுகிறது.
2014 ஆம் ஆண்டுக்கான புற்றுநோய் குறித்த அறிக்கையை வெளியிட்ட உலக சுகாதார நிறுவனம், தடுக்கப்படக்கூடிய புற்றுநோய்க் காரணிகளாக:
*புகை பிடித்தல்
*கிருமித்தொற்று
*மது அருந்துதல்
*உடல் பருமன் மற்றும் உடற்பயிற்சி செய்யாதிருத்தல்
*சூரிய ஒளி மற்றும் மருத்துவ ஸ்கேன்களால் ஏற்படும் கதிரியக்கப் பாதிப்பு
*காற்று மாசு, மற்றும் பிற சுற்றுச்சூழல் காரணிகள்
*தாய்மைப் பேறு தாமதமாவது, குழந்தைகள் அதிகம் பெறாமல் தவிர்ப்பது,
*தாய்ப்பால் தராமலிருப்பது ஆகியவற்றைப் பட்டியலிடுகிறது.
பெரும்பாலான நாடுகளில் மார்பகப் புற்றுநோய்தான் பெண்கள் மத்தியில் புற்றுநோய் தோன்றுவதற்கு மிகப் பொதுவான காரணம். ஆனால், ஆப்ரிக்காவின் பல பகுதிகளில், பெண்களுக்கு அதிகம் கர்ப்பப்பை வாய் புற்றுநோயே அதிகம் காணப்படுகிறது.
புற்றுநோய்க்கும் மது அருந்துவதற்கும் இடையேயான தொடர்பைப் பற்றிக் கூறும், இந்த அறிக்கையைத் தயாரித்தவர்களில் ஒருவரான, ஆஸ்திரேலியாவின்
நியூ சௌத் வேல்ஸ் பல்கலைக்கழகப் பேராசியர் டாக்டர் பெர்னார்ட் ஸ்டூவர்ட், மனித நடத்தைதான் பல வகைப் புற்றுநோய்கள் ஏற்படுவதற்குக் காரணம் என்றார்.
மிக அதிகமாக உடலைப் பழுப்பாக்கிக்கொள்ள சூரியக் குளியலில் ஈடுபடுவது, மது அருந்துவது போன்ற பழக்கங்களைத் தவிர்ப்பதன் மூலம் புற்று நோய்
தவிர்க்கப்பட முடியும் என்று அவர் கூறுகிறார்.
"மது தாராளமாகக் கிடைப்பதைக் கடினமாக்குவது, மது பாட்டில்களில் லேபல்கள் ஒட்டுவதில் கவனம் செலுத்துவது, மதுவை விற்பதில் உள்ள விளம்பர முறைகள் மற்றும் மதுவின் விலை போன்றவைகளைப் பற்றி நாம் விவாதிக்கவேண்டும்." என்றார் ஸ்டூவர்ட்.
அதேபோல விலைகளை உயர்த்துவது, விளம்பரங்களை கட்டுப்படுத்துவது போன்ற கடுமையான வழிகள் மூலம் மது மற்றும் சர்க்கரை உட்கொள்ளுதலைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை அரசாங்கங்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் சர்வதேச புற்றுநோய் ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.

நன்றி நியூஇந்தியா.டிவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக