Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

முஹம்மது(ஸல்) பற்றி அவதூறு


முஹம்மது(ஸல்) பற்றி அவதூறு

தினமணியின் இலவச இணைப்பான சிறுவர்மணி குழந்தைகள் வார இதழில் நேற்று முஹம்மது(ஸல்) அவர்களைப் பற்றி காவிக் கயவர்கள் எழுதி இருக்கும் அவதூறு. முஹம்மது(ஸல்) அவர்களை வெள்ளிக்கிழமை கல் எரிந்து கொன்றார்கள் என்று எழுதி உள்ளான். வரலாற்றை புரட்டுவதில் காவிகளை விட கை தேர்ந்தவர்கள் யார் இருக்க முடியும். சிறுவர்கள் உள்ளத்திலும் பொய் வரலாற்றை விதைக்கிறார்கள். 

இதற்க்கு, தினமணி மன்னிப்பு கேட்டே ஆக வேண்டும். 

தமிழகத்தில் உள்ள அனைத்து இயக்கங்களும் ஒன்று சேர்ந்து மிகப் பெரிய போராட்டத்தை அறிவியுங்கள்!

இன்ஷா அல்லாஹ்!! அதிகார வர்க்கத்திடம் மண்டியிட்டு வாழ்வதை விட எழுந்து எதிற்த்து நின்று மாண்டுபோவது மேலானது!


1 கருத்து:

  1. பிஸ்மில்லாஹ்…
    இந்த செய்தியை மக்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு மிகுந்த நன்றி! இந்த விடயத்தை மிக கவனத்தில் கொண்டு தினமணியின் தவறை சரிசெய்ய இயக்கங்கள் முயற்சி எடுக்க வேண்டும்.

    பெருமானார் (ஸல்) அவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்ல மனித சமூகத்திற்கு கிடைத்த பொக்கிஷம், அவர்களுடைய உம்மத்தாக இருப்பதற்கு நாம் ஒவ்வொருவரும் மகிழ்ச்சியடைய வேண்டும். அவர்கள் மீது அவதூறும், கண்ணியக்குறைவான நடத்தைகளும் மேற்கொள்ளபடும்போது, அதனை பார்த்து கொண்டு அமைதியாக இருப்போமென்றால் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.

    ஒவ்வொரு இயக்கத்திலிலுள்ள சகோதரர்கள் அவர்களுடைய தலைமை இந்த விடயத்தில் என்ன செய்கின்றது என்பதை கவனிக்க வேண்டும்.

    பதிலளிநீக்கு