Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 5 பிப்ரவரி, 2014

சகோதரத்துவத்திற்கு எடுத்துக்காட்டாய்.....

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


இன்று (04-02-2014) பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு ஜெய்லானித் தெருவை சேர்ந்தவரும் என் நெருக்கத்துக்குரிய சகோதருமான ஜனாப்.அப்துல் ஸத்தார் (ஸத்தார் பாய்) அவர்கள் அதிகாலை 4 மணியளவில் வஃபாத்தானார்கள். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


அச்செய்திக் கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன். தவ்ஹீத் கொள்கையில் மிகுந்த உறுதிக் கொண்ட அச்சகோதரர் பிஜெ, ஜவாஹிருல்லாஹ், பாக்கர், தொண்டியப்பா, பதுழுல் இலாஹி போன்ற தலைவர்களுடன் மிக நெருக்கமாக அன்பாகவும் இருந்தவர்.

இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் அஜ்மான் பொறுப்பாளராக பணியாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்!

நான் ஸ்டார் ஸ்டீலில் HR & Admin Manager ஆக பணிபுரிந்தப் பொழுது என்னுடன் இணைந்து பணியாற்றியவர். நல்லலொழுக்கம் மிக்க அச்கோதரின் பிரிவு என்னை மிகவும் வாட்டுகிறது.

அன்னாரின் மஃபிரத்துக்காக ஏகனிடம் கையேந்துங்கள். அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்திற்கு அல்லாஹ் அழகிய பொறுமையை நல்கட்டுமாக! ஆமீன்.

நேற்று என் சாச்சப்பா (சின்ன வாப்பா) வஃபாத்தாகி போனார்கள். இன்று என் நேசத்திற்குரிய நண்பர் ஒருவர் வஃபாத்தானார்.

ஆணவம் கொண்ட மனிதா! அற்ப துன்யா இதுதான். நாளைய மறுமையில் இந்த பூமியில் எவ்வளவு காலம் வாழ்ந்தாய் என இறைவன் கேட்கும் பொழுது, ஒரு பொழுதோ ஒரு பொழுதின் ஒரு பகுதியோ வாழ்ந்தேன் என மனிதன் சொல்வான். அவன் வாழும் காலம் ஒரு பொழுதுக்கு சமம்.

முஸ்லிமாக பிறக்க வைத்த என்னை முஸ்லிமாகவே இறக்க செய்!

வஸ்ஸலாம்.

முக நூலில் இருந்து
என்றும் அன்புடன் உங்களின் சகோதரன்
கீழை ஜமீல் முஹம்மது.
துபை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக