Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

புதன், 26 பிப்ரவரி, 2014

திருமாந்துறை சுங்கச்சாவடி தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்தம்!

லெப்பைகுடிகாடு அருகே திருமாந்துறை சுங்கச் சாவடியில் ஒப்பந்த தொழிலாளர்கள் தொடர் திடீர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். இதனால் 4 சக்கர வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சென்றன. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சுங்கச்சாவடி
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைகுடிகாடு  அருகே உள்ள திருமாந்துறை கிராமத்தில் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தனியார் நிறுவனம் நடத்தி வரும் சுங்கச்சாவடி உள்ளது.
இந்த நிறுவனத்தில் சுங்க வரி வசூல் செய்யும் பணியில் 36 பேரும் காவலர் பணியில் 35 பேரும் ஹெல்ப்லைன் பணியில் 35 பேரும் ஹைவே பெட்ரோல் வாகனத்தில் 35 பேரும் எலக்ட்ரீசியன் பணியில் 15 பேரும் துப்புரவு பணி யாளர்கள் பணியில் 35 பேரும் என 175க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருகின்றனர்.
பணி மாற்றம்
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் முதல் தனியார் நிறுவனம் ஒப்பந்தப் பணியாளர்களை வேறு ஒரு நிறுவனத்திற்கு மறு ஒப்பந்தம் செய்து பணியில் ஈடுபடுத்தி வருகிறது. இதனிடையே கடந்த டிசம்பர் மாதம் முடிய ஒப்படைவு தொகையை சுங்கவரி கட்டணம் வசூலிப்ப வர்களுக்கு மட்டும் 45 ஆயிரம் வரை வழங்கி உள்ளது.
திடீர் வேலை நிறுத்தம்
சுங்கவரி கட்டணம வசூலிப்பவர்களுக்கு வழங்கி யதை போல பாரபட்சம் காட்டாமல் தங்களுக்கும் ஒப்படைவு தொகையை வழங்க வேண்டும் என்று கோரிக்கையை வலியுறுத்தி காவலர், உதவியாளர் நெடுஞ்சாலை கண்காணிப் பாளர் வாகன ஓட்டுநர் மேற் பார்வையாளர் எலக்ட்ரீசியன் மற்றும் துப்புரவு பணி யாளர்கள் என 150க்கும் மேற்பட்டோர் நேற்று மதியம் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு ட்டனர்.
வேலை நிறுத்த போராட்டத்தை தொடர்ந்து சுங்க வரி கட்டணம் வசூல் மையத்திற்கு வந்த ஒப்பந்த தொழிலாளர்கள் வாகனங்கள் வந்து செல்லும் பாதையில் திரண்டனர். அவ்வழியில் உள்ள தானியங்கி தடுப்பு பலகையை சுங்கவரி நிறுவன அதிகாரிகள் அகற்றி அனைத்து வாகனங்களையும் இலவசமாக செல்ல அனுமதித்தனர்.
இலவசமாக சென்றன
இதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் சுங்கவரி கட்டணம் செலுத்தாமல் மகிழ்ச்சியுடன் சென்றனர். மதியம் 1 மணி முதல் மாலை 5 மணி வரை அவ்வழியே வந்த அனைத்து வாகனங்களும் இலவசமாக செல்ல அனுமதிக்கப்பட்டன.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மங்களமேடு சரக உதவி கண்காணிப்பாளர் கோவிந்தராசு இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் விரைந்து சென்று தனியார் சுங்க வரிச்சாவடி நிறுவன அலுவலர்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஓப்பந்த தொழிலாளர்களிடம் சமாதான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த போராட்டம் தொடர்ந்து 3 வது முறையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மின்னஞ்சல் மூலமாக
ஒலி முஹம்மது இலியாஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக