Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 24 பிப்ரவரி, 2014

அம்மா ஹோட்டல், நமோ டீக்கடை, ராகா பால்கடை! - சில்லறை வியாபாரமாகிப் போன அரசியல்!

சமீப காலமாக இந்திய அரசியல் கட்சிகள் மூலமும், அரசுகள் மூலமும் ஆங்காங்கே சிறு சிறு கடைகள், வணிக நிறுவனங்கள் முளைக்கத் தொடங்கிவிட்டன.
‘அம்மான்னா சும்மா இல்லேடா.. அவ இல்லாம யாரும் இல்லேடா!’ என்ற பாட்டு வரிகள் பலருக்கும் மறந்தாலும் தற்போது அஇஅதிமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகு அரசின் திட்டங்கள் ‘அம்மா’வையும், மேற்க்கண்ட பாடலையும் ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

அம்மா உணவகம், அம்மா வாட்டர், அம்மா மெடிக்கல், அம்மா தியேட்டர் என அம்மா பெயரில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட ‘கலைஞர்’ திட்டங்கள் பெரும்பாலும் கலைக்கப்பட்டு ‘அம்மா’ திட்டங்களாக மாறத் தொடங்கிவிட்டன.
இதுமட்டுமின்றி இன்று தமிழகத்தில் அம்மாவின் தொண்டர்கள் ஓட்டும் வாகனங்களில் ‘அம்மா’ என்ற பெயர் தான் முதலிடம் பிடித்துள்ளது. பெரும்பாலான இடங்களில் புதிதாக அம்மா நகர்களும் உருவாகி வருகின்றன.
அடுத்து பாஜகவின் பிரதம வேட்பாளராக வலம்வரும் நரேந்திர மோடி; ‘நான் ஏழு வயசுல இளநி வித்தவ’ என்ற பாணியில் ‘நான் சின்ன வயசுல டீ வித்தவன்’ என்று சொல்ல இன்று ஆங்காங்கே ‘நமோ’ டீக்கடைகள் முளைக்கத் தொடங்கிவிட்டன.
மேலும் மோடிக்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்களை எதிர்த்து நடத்தும் போராட்டத்திலும், மாநாடு, பொதுக் கூட்டங்களிலும் மோடி முகமூடி அணிந்து டீ விற்கத் தொடங்கியுள்ளனர்.
இதேப்போன்று மீனவர்களின் ஓட்டுக்காக ‘நமோ’ பெயரை வைத்து தற்போது நடமாடும்  ‘நமோ மீன் கடை’களையும் தொடங்கிவிட்டனர் தமிழக பாச(ஜ)க்கார தொண்டர்கள்.
இது மட்டுமின்றி நமோ மிச்சர், மோடி மேஜிக் மிச்சர் என நொறுக்குத் தீனி வகைகளும் வரத்தொடங்கி விட்டன.
மேலும் தேசப்பற்றாளன் என்பதை காட்டுவதற்காக படேலுக்காக சிலை வைக்க ‘பழைய இரும்புக்கு...’ என்ற பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளனர்.
பிரதமர் வேட்பாளர் என்ற அறிவிப்புக்கே இந்த நிலைமை என்றால் நாளை ஆட்சிக்கு வந்தால் என்ன நிலைமை ஏற்படும்? என்பதையும் ஒருகணம் சிந்தித்து பார்க்கவேண்டும்.
இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு சும்மா இருப்பார்களா காங்கிரஸ்காரர்கள் அவர்களும் தற்போது ராகா (ராகுல்காந்தி) என்ற பெயரில் பால்கடைகளை ஆரம்பித்துள்ளனர்.
ஆக இலவசங்கள் மூலமும், சாமானிய தொழிலாளர்கள் செய்யும் தொழிலின் பெயரிலும் ஓட்டுக்களை அறுவடை செய்யும் ஏமாற்று யுக்தியை அரசியல் கட்சிகளும், ஆளும் அரசுகளும் தொடங்கியுள்ளன.
இவ்வாறு அரசுகளும், அரசியல் கட்சிகளும் தத்தமது பெயரால் செய்யும் திட்டங்கள் எல்லாம் மக்கள் பணம் தான் என்பதை மறந்துவிடக்கூடாது. மக்கள் பணம் மூலம் தங்களது பெயரில், சுயலாபத்திற்காக அவர்கள் இவ்வாறான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றனர்.
இதுபோன்ற அரசியல் வியாபார யுக்திகளின் மூலம் பலனடைய போவது அரசியல் கட்சிகள் மட்டுமல்ல, அவைகளை பின்புலத்திலிருந்து இயக்கும் கார்ப்பரேட் நிறுனங்களும், முதலாளிகளுமே.
களந்தையான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக