எதிர்பாரத விதமாக PFI யுனிட்டி மார்ச்-ல் காவல்துறை தடியடி நடத்திய இடத்தில் இருந்து 350 மீட்டர் தொலைவில் செல்லும் நிர்பந்தம் ஏற்பட்டது.
சம்பவம் நடந்த இடத்திற்கு சில நிமிடம் தாமதம்மாக சென்றதால், அதற்க்கு முன் நடந்த (ஐந்து நிமிடம்) சம்பவம் என்ன வென்று அறுதி இட்டு சொல்ல முடியவில்லை, (அறிந்தவரை காவல்துறை தடியடி நடத்தியதற்கு முக்கிய
காரணம்மாக சொல்லப்பட்டது) காவி கயவர் கும்பல் நடைபெற இருந்த பேரணியில் கல்விசியதால் சமந்தப்பட்ட அமைப்பினர் அவர்களை பிடிக்கும் பொழுது ஏற்பட்ட சலசலப்பின் காரணமாக காவல்துறை தடியடி நடத்தியதாக கூறப்பட்டது.
அனைத்தையும் அல்லாஹ் அறிந்தவன்…
நடைபெற இருந்த பேரணியில் கபோதிகள் கல்வீசி இருந்தால் அவர்களை வன்மையாக கண்டிக்கின்றோம். தமிழக அரசு இக் கயவர்களை கைது செய்து உரிய நடவடிக்கை எடுக்கா விட்டால் இது போன்று சம்பவங்கள் தொடர் கதையவது உறுதி...
அல்லாஹ்விடம் காவி கயவர்களின் சூழ்ச்சியில் இருந்து பாதுகாப்பு தேடு வோம்மாக.
ராமநாதபுரம் - ராமேஸ்வரம் நெடும்சாலை (குமரையா கோவில்) அருகாமையில் காவல்துறை வானத்தை நோக்கி சுட்டதும் அதனை கண்ட மக்கள் பரபரப்பாக ஓடியதை பார்க்கும் போது கண்கள் கலங்கியதை தவிர இது நாம் சாராத அமைப்பிற்கு ஏற்பட்ட நிலைமை என்று நினைப்பில் வரவில்லை…என்ன நடந்தாலும் தனது மக்களை கட்டுக்குள் வைத்து கொள்வது அமைப்புகளின் தலையாகிய கடமை.
தொடர்ச்சியாக பொது கூட்டம் நடக்கும் மேடைக்கு அருகில் சென்ற போது தடியடியில் பாதிக்கப்பட்ட ஒரு சகோதரனை TNTJ யின் மாவட்ட நிர்வாகிகள் கவனித்து கொண்டிருந்ததை பார்க்கும் பொழுது தவ்ஹீத் ஜமாஅத் இந்த சமுதாயத்தின் மேல் வைத்துள்ள அக்கரையை பறை சாற்றும் விதமாக இருந்தது....
புகழ் அனைத்தும் ஓர் இறைக்கே!
இந்திய சனநாயக நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு சனநாயக ரீதியாக எமது சகோதர இயக்கம் நடத்திய பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் பேரணியில் திட்டமிட்டு உட்புகுந்து கலவரத்தை ஏற்படுத்தும் நோக்குடன் செயல்பட்ட விசமிகளை கைது செய்யாமல் பேரணியில் கலந்து கொண்ட ஒட்டு மொத்த சனத்திரள் மீதும் தனது வக்கிரமான கோரத்தாக்குதலை நடத்திய காவல்துறையின் செயல் வண்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த கொடூர தடியடி பிரயோகத்தில் காயமடைந்தவர்கள் பெரும்பாலானோர் பெண்களும், முதியவர்களும், குழந்தைகளும் என்பது இன்னும் கவலையளிக்க கூடிய விசயமாகும்.
நாம் இந்திய சனநாயக நாட்டில்தான் வாழ்கின்றோமா அல்லது ஏதாவது காட்டாட்சியின் கீழ் வாழ்கின்றோமா என்ற சந்தேகம் எம்முள் எழுந்துள்ளது. இந்திய தேசியத்தில் சிறுபான்மையினரின் மீதான அரசபயங்கரவாதத்தின் கோர அடையாளங்களில் இதுவும் ஒன்றாக இன்று பதிந்துள்ளது. இதன் மூலம் சிறுபான்மை இன மக்கள் இந்த அரசின் மீதான நம்பிக்கையின்மையின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது நிதர்சனமான உண்மை.
எது எப்படியாக இருந்தாலும் எம் சமுதாயத்தின் மீதான இந்த அரச பயங்கரவாதம் என்பது எத்தகைய முறையிலும் ஏற்றுக்கொள் இயலாதது. வரும் தேர்தல் களத்தில் இதற்கான பதிலை எம் மக்கள் எதிரொலிப்பார்கள் என்று நம்புகிறோம்.
நாங்கள் எம் முன்னோர் மூட்டிய சுதந்திர யாகத்தில் பிறந்த அக்கிணி குஞ்சுகள்…எம் மீதான தாக்குதலை கொண்டு எம்மை அடக்கி ஆளலாம் என்று நினைத்தால் அது நடக்காது…..வல்ல இறைவனை தவிர வேறு யாருக்கும் அஞ்சிடவோ …அடி பனிந்திடவோ மாட்டோம் நாங்கள்….!!
இந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பரப்பப்படும் வதநதிகளை யாரும் நம்ப வேண்டாம். யாருடைய உயிருக்கும் எந்த ஆபத்துமில்லை. காயமடைந்தவர்களில் பெரும்பகுதியினர் சிகிச்சை முடித்துவிட்டனர். பெருங்காயமுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. களத்தில் நயவஞ்சகர்களை தவிர அனைத்து அமைப்பினரும் ஒற்றுமையுடன் செயல்பட்டுக்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக