அன்வரும் தாஹிரும் கல்லூரி முடித்துவிட்டு கல்லூரி விடுதிக்கு சென்றனர்.
அன்வர். தாஹிர் இன்னைக்கு இப்ராஹிம் சார் பாடம் என்னடா நடத்தினார்?
தாஹிர். அதவிடு ரெண்டாவது பிரியடுக்கடுத்து நீ எங்க போகிர்ந்த?
அன்வர்.. மலைக்கோட்டைக்கு கிப்ட் வாங்க போகிர்ந்தேன் ?
தாஹிர். கிப்டா ? இப்ப எதுக்கு கிப்ட் வாங்க போன? அதுவும் வகுப்ப
கட் அடுச்சுட்டு ? சாங்காலம் செல்லிருந்தனா நானும் வந்திருப்பன்ல.... அத்தாக்கு
வேர மருந்து வாங்கவேண்டி இருந்தது...!
அன்வர்.. ஒன்ட சொன்னா சத்தம் போடுவேன்னு சலீம் சொன்னான்! அதனாலதான்
அவனும் நானும் மட்டும் போயிட்டு வந்தோம்.
தாஹிர். சரி என்ன கிப்ட் வாங்குநீங்க ?
அன்வர். நாளைக்கு நம்
போன்ற இளைஞர்களுக்கு ஒரு முக்கியமான நாள் என்பது தெரியுமா ?
தாஹிர். அப்படியா ! அப்படி ஒன்னும் ஹஜரத் சொல்லல!
அன்வர். நாளைக்கு காதலர்
தினம் என்பது கூட தெரியாதா? காலத்துக்கும் இப்படியே இரு!
அப்பொழுது தாஹிர் அமைதியாக இருந்தான்..
அன்வர். வருத்தப்படாத
உன்னுடைய நிலமையைதான் செல்றேன்... ஊர்லதான் வெளி உலகம் தெரியாத அப்படியே இருந்த..
இங்கயுமா ? யோசித்து பார் ! நேற்று நாலாம் போயி என்னுடைய லவ்வருக்காக 500ரூபாய்ல
தாஜ்மாஹால் வாங்கி வந்திருக்கிறேன். நாளைக்கு அவளுக் சர்ப்ரைஸ் கொடுக்கனும்ல!
அதான்...
மாப்ள..... கனியும், கண்ணியும் காலத்தோடு பலன்தர வேண்டும் என்பது பெரியோர்கள்
சொன்ன மூதுரைய ஞாபகத்துல வச்சுக்கோ!
அந்தந்த வயசுல அத அத அனுபவச்சுக்கனும் டா!
தாஹிர். அதிகமா உன் உள்ளத்தில் அலக்களிப்பதெள்ளாம் இந்த உலக
வாழ்கைதான் ஆனால். இதைபற்றி நினைக்கும் போது உன்னுடைய நன்னி அத்தா அடிக்கடி
சொல்ரது தான் என் ஞாபகத்துக்கு வருது.
5 விசயம் வருவதற்கு முன் அதைபற்றி கவனமாக இருந்துக்கொள்ளுங்கள்.
- 1. முதுமைக்கு முன் இளமை.
- 2. நோய்க்கு முன் ஆரோக்கியம்.
- 3. வருமைக்கு முன் வசதி.
- 4. பணிக்கு முன் ஓய்வு.
- 5. மரணத்திற்கு முன் உள்ள வாழ்வு.
என்று நமது தூதர் ரசூல் ஸல் (அலை) அவர்கள் கூறினார்கள். என்பதாக அடிக்கடி கூறுவார்.
ஐந்து நிமிடம் அமைதியாக இருந்தான் அன்வர்..
தாஹிர். எனக்கு ஒன்றும் இல்லை நாளை இறைவன் என்னிடம் கேட்டான்
என்றால் நான் அன்வரிடம் கூறினேன் ஆனால் அவன்தான் வழிதவரி சென்றான் எனறு நான் பதில்
சொல்லி விட்டுவேன்.
ஒரு மனிதன் அன்னியபெண்னை பார்ப்பது முதல் பார்வை உன்னுடையது இரண்டாவது பார்வை
சைத்தானுடைய பார்வை என்று இருக்கும் போது பகல் இரவு என்ற எந்நேரத்திலும் போனில்
குலாவுவது விபச்சாரத்திற்கு வழி வகுக்கும்.
விபச்சாரம் அருகில் கூட நெருங்காதீர்கள் என்று கூறும் நமதுடைய தூய மார்கத்தில்
பிறந்த நாம், அதற்கு புரம்பாக நடக்கும் பொழுது நமக்கு நாமே நரகத்திற்கு பாதை
தோற்றுவிப்பதற்கு சமம்.
என்று சொல்லி அசர் தொழுகைக்கு சென்று விட்டான்...
2 மணிநேரம் கழித்து சலீம் அன்வர் ரூமுக்கு வாந்தான்.
சலீம். மாப்ள நாளைக்கு உன்
லவ்வர பார்க்க என்ன சர்ட் போட்டு போற?
நாளை எனக்கு மரணம் நிகழ்ந்தால் நம்மை படைத்த அர்ரஹ்மானிடம் பதில் சொல்ல
என்னிடம் வார்த்தை இல்லை! அது போல உன்னுடைய கேள்விக்கு பதில் கூற எனக்கு சிந்தனை இல்லை!
என்று சலாம் கூறி விடைபெற்றான் மனம் திருந்திய அன்வர்.
என்பதை உனர்ந்த அன்வர் மணம் திருந்தி மஹரிப் தொழுகைக்கு சென்றான்.
லெப்பைக்குடிக்காடு என்ற கண்ணியமிக்க ஊரில் பிறந்தவர்கள் நாம் ஆனால் நமதூரில்
உள்ள நம்போன்றவர்களே நமது ஊரின் கண்ணியத்தை கெடுக்கும் விதமாக நடந்து கொள்வது, கொல்ல
வரும் புலியோடு குடும்பம் நடத்த நினைப்பதாக உள்ளது என்பது இந்த உறையாடலின் தெளிவாக்கம்.
நமது நிருபர்
அருமையான கருத்து. தயவு செய்து நம்ம ஊர் பெண்களிடம் இதை போன்ற கருத்தை நாம் சொல்ல மறந்ததால் தான் இதை போன்ற அனாச்சாரங்கள் பெறுக காரணம்....
பதிலளிநீக்குபிஸ்மில்லாஹ்..
பதிலளிநீக்குநபி யூசுப் (அலை) அவர்களுடைய வாழ்விலிருந்து நாம் ஒவ்வொருவரும் குறிப்பாக இளைய சமுதாயம் பாடம் படிக்க வேண்டும். அந்நிய பெண்மனி தன்னை விபச்சாரத்திற்கு அழைத்த போது, அவர் அந்த பாவத்திலிருந்து தப்பித்துக் கொள்ள விரண்டோடுகின்றார்கள். இன்னும் அந்த சூழ்நிலையில் இருந்தால் எங்கே இந்த பெண்மனியின் சதி தன்னையும் அபகரித்து விடுமோ என்றஞ்சி, செய்யாத குற்றத்திற்கு சிறைச்சாலையை தேர்ந்தெடுக்கின்றார்கள்.
இன்று நம் இளைஞர்கள் காதல் என்ற பெயரில், ஈமானின் அழிவுக்கு வித்திடும் ஆபாசத்தின் பக்கம் செல்கின்றார்கள். நாம் சற்று சிந்திக்க வேண்டும். இவ்வுலகில் நற்குணத்தையும், ஒழுக்கத்தையும் முழுமை படுத்துவதற்காகவும், அதனடிப்படையில் மனித சமூகத்தை கட்டமைப்பதற்காகவும் பெருமானார் (ஸல்) அவர்களை அல்லாஹ் இறுதித் தூதராக அனுப்பினான். அந்த தூதுத்துவத்தை ஏற்று உலகம் முழுமைக்கு கொண்டு சேர்த்து முன்னுதாரணமாக வாழ்வதற்கு நம்மை சிறந்த சமுதாயமாக தேர்ந்தெடுத்தான். ஒழுக்கத்தை கற்று கொடுக்க வேண்டிய நாம் ஆபாசத்தில் மூழ்குவது “வேலியே பயிரை மேய்வதற்கு சமம்”.
அசத்தியவான்கள் ஆபாசத்தில் மூழ்கியிருப்பதை விட சத்தியத்தை சுமந்திருக்கின்ற நாம் ஆபாசத்தில் மூழ்குவது மிகவும் அருவருக்கத்தக்க, கொடுமையான செயல் என்பதை நம் இளைஞர்களும், இளைய சகோதரிகளும் உணர வேண்டும். இதற்கு முன்னால் சத்திய பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சமூகங்களின் அழிவுக்கு காரணங்களாக ஆபாசமும், அந்த சமூகத்தில் நிலவிய அநீதமும், இவ்வுலக ஆசையும் இருந்தது என்பதை நமக்கு ஏராளமான் ஹதீஸ்கள் உணர்த்துகின்றன. நாமும் அவர்களை போன்று வாழ்ந்ந்தோமென்றால் அவர்களுக்கு வந்த அழிவு நமக்கு வருவதற்கு வெகு தூரம் இல்லை. அல்லாஹ் நம்மை காப்பாற்றுவானாக!
நாம் நம்முடைய பொறுப்புக்களை உணர்ந்து செயல்பட வேண்டும். இவ்வுலகத்தின் இன்பம் அற்பமானது. அல்லாஹ்விடத்தில் மறுமையில் இருப்பது மிகவும் சிறத்தது, நிலையானது.
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா நம் சமூதாயத்தின் இளைஞர்களையும், இளைய பெண்களையும் ஆபாசத்திலிருந்தும், ஒழுக்க வீழ்ச்சியிலிருந்தும் காப்பாற்றுவானாக! ஆமீன்!
” பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு. “ திருக்குர்ஆன் 3:14.