Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

இரும்பு ஓர் உதாரணம்!

இரும்பு என்றால் அது மிகவும் வலிமையானது, உறுதியானது என்று அறிவோம். வலிமையான உடல்களை கொண்ட நபர்களை இரும்பு மனிதன் என்று உதாரணம் கூறுவார்கள். ஆனால் அந்த இரும்பு எப்படி உருவாக்கப்பட்டது என்று யாரும் அறிந்ததில்லை.

இரும்பு என்பது அல்லாஹ்வினால் படைக்கப்பட்டதும் அவனால் இந்த பூமிக்கு அனுப்பட்டதும் என்று கீழ்க்காணும் வசனம் உணர்த்துகிறது:

நாம் நம்முடைய தூதர்களைத் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டே அனுப்பி வைத்தோம். அத்துடன் அவர்களுக்கு வேதத்தையும் கொடுத்தோம். மனிதர்கள் நீதமாக நடந்துகொள்ளும் பொருட்டு தராசையும் கொடுத்தோம். இரும்பையும் நாமே படைத்தோம். நாமே இறக்கினோம். அதில் பெரும் சக்தி இருக்கின்றது.
இன்னும் மனிதர்களுக்கு பல பயன்களும் உள்ளன. அல்லாஹ்வைக் (கண்ணால்) காணாமலேயே (அவனை நம்பிக்கை கொண்டு) இதன் மூலம் அவனுக்கும், அவனுடைய தூதருக்கும் உதவி செய்பவர்கள் யார் என்பதை அல்லாஹ் (சோதித்து) அறிந்துகொள்கின்றான். நிச்சயமாக அல்லாஹ் பலசாலியும் (அனைவரையும்) மிகைத்தவனுமாக இருக்கின்றான். (அல் குர்ஆன் 57:25)

இரும்பை யாராலும் உருவாக்க முடியாது. அது அல்லாஹ்வினால் படைக்கப்பட்டது. இரும்பு பூமியில் இருந்து வெட்டி எடுக்கப்படுகிறது. இன்னும் பல இடங்களில் பழைய இரும்பை மறுசுழற்சி முறை மூலம் மீண்டும் பயன்படுத்துகிறார்கள்.

இத்தகைய இரும்பையே நாம் அனைவரும் பயன்படுத்துகிறோம்.  இரும்பின் மூலப்பொருள் Fe. கண்ணாடி என்பது மண்ணினால் செய்யப்பட்டது. இந்தக் கண்ணாடியை செய்ய மண்ணை 1500 – 2500 டிகிரி வெப்பத்தில் சூடாக்க வேண்டும். அப்போழுதுதான் கண்ணாடியை உருவாக்க முடியும்.

ஆனால் இரும்பைச் செய்ய இதை விட அதிகம் வெப்பம் தேவை. அது சூரிய வெப்பத்திற்கு சமம். அது மனிதனால் முடியாத ஒன்று. ஆகையால்தான் அல்லாஹ் தன்னுடைய புத்தகத்தில் இரும்பை நாம் இறக்கினோம் என்று கூறினான்.

மனிதனின் தேவைக்காக அல்லாஹ் எல்லாவற்றையும் தருகிறான். ஆனால் நாம் அல்லாஹ்வுக்கு பிடித்தமான முறையில் நடக்கிறோமா?

நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக