Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

நமதூரில் நடைபெற்ற எழுச்சி கூட்டம்....

நமதூரில் நேற்று பிப்ரவரி 6ஆம் தேதி (நேற்று) விடுதலை சிறுத்தை கட்சி நடத்திய “சமத்துவம் போதித்தா சரித்திர நாயகம் முஹமது நபி (ஸல்) அவர்களை போற்றி மாபெரும் பொதுக் கூட்டம்” நடைபெற்றது.இப்பொதுகூட்டத்தில் மாநில தலைவர் தொல்.திருமாவளவன் எழுச்சியுரை நிகழ்த்தினார்.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தமிழ் மாநில தலைவர் முஹமது இஸ்மாயில் ,ம.ம.க.பொதுச்செயலாளர் தமீம் அன்சாரி , முஸ்லிம் லீக் துணை தலைவர் ஹாஷிம்,இ.வி.க. பொதுச்செயலாளர் தர்வேஷ் ரஷாதி,தேசியலீக் பொதுச்செயலாளர் MGK.நிஜாமுதீன் ,இந்திய தவ்ஹீத் ஐமாத் துணை தலைவர் முஹம்மது முனீர்,இஸ்லாமிய கூட்டமைப்பு ஒ௫ங்கினைப்பாளர் ஹனிபா ஆகியோர் கலந்து கொண்டனர்.











நமது நிருபர் மற்றும் தமுமுக

1 கருத்து:

  1. Ellam Arasiyal trend. Itthanai varudam illatha muslim pasam thideer endru varuvatharku ellam arasiyal than karanam. Ithanai vottu podum makkal thaan unara vendum. Ithellam arasiyalla saatharanam Appa.

    பதிலளிநீக்கு