Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

சனி, 15 பிப்ரவரி, 2014

மனித உரிமைக்கு எதிரான சட்டங்களை வாபஸ் பெறவேண்டும் – மும்பையில் யு.ஏ.பி.ஏவுக்கு எதிரான மக்கள் இயக்கம்!

தடா, பொடா போல மத்திய அரசு தற்போது அமல்படுத்தியிருக்கும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டம் (யு.ஏ.பி.ஏ) அரசியல் சாசனம் அளிக்கும் மனித உரிமைகளை அழிக்கும் சட்டம் என்றும், இதற்கு எதிராக மக்களின் கோபம் எழவேண்டும் என்றும் யு.ஏ.பி.ஏவுக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர்கள் மும்பையில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர். யு.ஏ.பி.ஏவுக்கு எதிராக தேசிய அளவில் நடத்தப்படும் பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக மும்பை ப்ரஸ் க்ளப்பில்  யு.ஏ.பி.ஏவுக்கு எதிரான மக்கள் இயக்கம் சார்பாக செய்தியாளர்கள் சந்திப்பு
நடந்தது.அதில்  யு.ஏ.பி.ஏவுக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் தலைவர் கமால் ஃபாரூகி கூறியது: யு.ஏ.பி.ஏ சட்டத்தின் மூலம் அரசை விமர்சித்தால் கூட கைதுச் செய்யும் அதிகாரம் போலீசுக்கு உண்டு. விசாரணை இல்லாமல் நீண்டகாலம் சிறையில் அடைக்கப்பட்டாலும் எங்கேயும் அதுக்குறித்து கேள்வி எழுப்ப முடியாது. நண்பரோ, உறவினரோ அளிக்கும் புகாரின் பேரிலும் கைதுச் செய்ய முடியும். சமூகபணியையும் தீவிரவாத செயலாக கருதி சிறையில் அடைக்கலாம். சமூகப் பணிகளுக்காக வரும் பணத்தைக் கூட தீவிரவாத செயலுக்கான பணமாக கருதி அந்த சமூக பணியாளரை கைதுச் செய்யலாம்.
இவைப் போன்ற பிரிவுகள் அடங்கிய யு.ஏ.பி.ஏ சட்டம், அனைத்து மனித உரிமைகளையும் காற்றில் பறத்துவதாகும். இச்சட்டத்தின் மூலம் கேரளாவைச் சார்ந்தவர்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அரசு கூறுவது மட்டுமே நமக்குகிடைக்கும் விபரமாகும். இவர்களில் 99 சதவீதம் பேரும் நிரபராதிகள் ஆவர். இவ்வாறு ஃபாரூகி கூறினார்.
பினாயக் சென், கொபாத் கண்டி, சோனி சோரி, சீமா ஆஸாத், இம்ரான் கிர்மானி, குலாம் ரசூல் உள்ளிட்ட ஏராளமானோர் யு.ஏ.பி.ஏவின்  பழுதுகளை பயன்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இச்சட்டத்திற்கு எதிராக பிப்ருவரி 21-ஆம் தேதி அகில இந்திய அளவில் மெழுகுதிரி ஏந்தி போராட்டம் நடத்தப்படும். மார்ச் 5-ஆம் தேதி டெல்லியில் அகில இந்திய கன்வென்ஷ நடத்தப்படும்.
இவ்வாறு யு.ஏ.பி.ஏவுக்கு எதிரான மக்கள் இயக்க தலைவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர். செய்தியாளர்கள் சந்திப்பில் கமால் ஃபாரூகி, ஹனீஃப் மன்சூர் அலிகான், முஹம்மது ஷாஃபி, பேராசிரியர் பி.கோயா ஆகியோர் பங்கேற்றனர்.

நன்றி தூது ஆன்லைன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக