Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 30 அக்டோபர், 2014

அற்புத கலந்துரையாடல் ...

அற்புத கலந்துரையாடல்
ஒரு சமயம் அலி (ரலியல்லாஹூ அன்ஹு) அவர்களுக்கு,
உடல் நிலை சரியில்லாமல் இருந்தது.
அவர்களை விசாரிக்க கண்மணி நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்), அபூபக்கர் ( ரலியல்லாஹு அன்ஹு), உமர் (ரலியல்லாஹு அன்ஹு), உதுமான் (ரலியல்லாஹு அன்ஹு) அனைவரும், ஃபாத்திமா (ரலியல்லாஹு அன்ஹா) அவர்களின் வீட்டிற்கு வந்தார்கள்.

"கத்தி" படமும்! "சூரியூர்" கிராமமும்!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் பின்புறம் அமைந்துள்ள ஓர் அழகிய கிராமம் தான் “சூரியூர்”. ஜல்லிக்கட்டுக்கு பெயர்போன இங்கு தொன்றுதொட்டு வரும் ஒரே தொழில் விவசாயம் தான்.
திருச்சியை சுற்றி காவிரியாற்றின் தண்ணீரை நம்பி தான் விவசாயமே உள்ளது. காவிரி வறண்டு போனால் பல ஏக்கர் நிலம் பாலைவனம் ஆனதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் சூரியூரில் சிறு அளவு வாய்கால் பாசனம் கூட இல்லை. வானம் பார்த்த

இரண்டு நூல்கள் ...

இப்போதெல்லாம் நூல்களை படிப்பதற்கு நம்மில் பலருக்கு நேரம் கிடைப்பதில்லை. கிடைப்பதில்லை என்று சொல்வதை விட கிடைக்கும் நேரத்தை கண்டு கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. நானும் அதில் ஒருவன்.காலை முதல் மாலை வரை அலுவலகம். மாலை வீடு வந்து முகம் கை கால் கழுவி தேநீரைக் குடித்து தின்பண்டம் ஏதாவது இருந்தால் அதை வாயில் வைக்கும் போது அந்தி நேரத்து தொழுகை (மக்ரிப்) அழைப்போசை கேட்டு விடும். அப்புறம் தொலைக்காட்சி, இஷா தொழுகை, சாப்பாடு, தூக்கம் என இரவு கழிந்து விடும்.

புஷ்ரா அறக்கட்டளை - ஓர் நல்ல முயச்சி ....

(தான தர்மங்கள் செய்வதினால் ) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்கொண்டு உங்களை ஷைத்தான்பயமுறுத்துகிறான்ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்ஆனால் அல்லாஹ்வோ(நீங்கள் தான தருமங்கள் செய்தால்தன்னிடமிருந்து மன்னிப்பும் (அருளும்பொருளும்மிக்க செல்வமும் (கிடைக்கும்என்றுவாக்களிக்கின்றான்நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடையவன்யாவற்றையும் நன்கறிபவன். (2-268)

இனி ரத்த பரிசோதனைகள் அவசியமில்லை..!!


ஊசிகளை உடலில் குத்தி, ரத்தத்தை உறிஞ்சி எடுப்பதைப் பார்த்தாலே பலருக்கு மயக்கம் வந்துவிடும். எனவே ஊசியையும், ரத்தப் பரிசோதனையையும் வெறுப்பவர்கள் ஏராளம்.

இனிமேல் ரத்த மாதிரிகள் சேகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு மாற்றாக அமெரிக்காவில் நவீன வழி கண்டுபிடித்திருக்கிறார்கள்.

கல்லாறு காட்டாற்று வெள்ளத்தில் 400 க்கும் மேற்பட்ட ஆடுகள் அடித்து செல்லப்பட்டது!


பெரம்பலூர் அருகே பலத்த மழையால் ஏற்பட்ட கல்லாறு காட்டாற்று வெள்ளத்தில் 400க்கும் மேற்பட்ட  ஆடுகள் அடித்து செல்லப்பட்டது!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் ஆட்டுப்பட்டி அமைத்து ஒவ்வொரு இடங்களிலும் ஆடுகளை மேய்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டைக்கு வந்த அவர் பெரியம்மாபாளையம் என்ற பகுதியில் ஆட்டுப்பட்டி அமைத்து அதில் 120 ஆடுகளை வைத்து மேய்த்து வந்தார்.

தூக்கிலிடப்பட்ட ரெஹானா ஜப்பாரி உருக்கமான கடிதம்!

மரண தண்டனை அளிக்கப்படுவதற்கு முன்பு ரெஹானா ஜப்பாரி தன் தாயிடம் வேண்டிக்கொண்டது.
அன்புத் தாய் ஷோலே, குற்றம் இழைத்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட நான், சட்டப்படி அதற்குப் பதிலடியாகத் தண்டனையை அனுபவிக்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறேன்.
என்னுடைய வாழ்க்கையின் கடைசி அத்தியாயத்தை நெருங்கிவிட்டேன் என்பதை ஏன் சொல்லாமல் மறைத்துவிட்டாய்? இதுதான் எனக்கு வேதனையாக இருக்கிறது. இது எனக்குத் தெரிந்திருக்கவேண்டும் என்று உனக்குத் தோன்றவில்லையா?

உதான்"பயிற்சி ...


"உதான்"பயிற்சித் திட்ட தொடர்பு மையங்களை அதிகரிக்க வேண்டும்: முதல்வர் ஓ.பி.எஸ். கோரிக்கை! Posted by: Mathi Published: Wednesday, October 29, 2014, 15:44 [IST]இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்க     ஷேர் செய்ய   ட்வீட் செய்ய   ஷேர் செய்ய    கருத்துக்கள்  மெயில் சென்னை: ஐ.ஐ.டிஎன்.ஐ.டி. போன்ற

புதன், 29 அக்டோபர், 2014

நமதூர் ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஒடியது.....

பிஸ்மிலாஹிர்ரஹ்மானிரஹீம்



(29.10.2014) புதன்கிழமை அன்று காலை :- 5 மணி அளவில் லப்பைக்குடிகடு வெள்ளாறில் இரண்டு ஆண்டுக்கு பிறகு அல்லாஹ்வின் அளப் பெரும் கிருபையால் வெள்ளாற்றில் தண்ணீர் கரை புரண்டு ஒடியது.

அலஹ்மதுலிலாஹ்!

செவ்வாய், 28 அக்டோபர், 2014

நமதூரில் கணினி பயிற்சி அளிப்பதாக கூறி மாணவ, மாணவிகளிடம் ரூ.2.5 லட்சம் வசூல் மோசடிகம்ப்யூட்டர் சென்டர் நிர்வாகிக்கு வலை


பெரம்பலூர், : பெரம்பலூர் அருகே லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கணினி அடிப் படை பயிற்சி அளிப்பதாக கூறி ரூ.2.5 லட்சம்  வசூலித்து மோசடி கம்ப்யூட்டர் சென்டர் நிர்வாகியை போலீசார் தேடி வருகின்றனர். 

திங்கள், 27 அக்டோபர், 2014

இயற்கையை மொட்டையடிக்கும் 'பேராசைக் கத்தி!'- மெல்ல அழியும் மேற்கு தொடர்ச்சி மலை: நன்னீர் மாசுபடுவதால் 1146 உயிரினங்களுக்கு ஆபத்து

மேற்குத் தொடர்ச்சி மலை | கோப்புப் படம்: கே.கே.முஸ்தஃபா
இயற்கையைப் பேணுவதில் வனம், தாவர உயிரினங்கள் மற்றும் விலங்கினங்கள் தங்களது பங்களிப்பை சிறப்பாகச் செலுத்துகின்றன. ஆனால், மனிதர்கள் மட்டும் தங்களது பேராசையால்-

இன்று 28-10-2014 கடைசி நாள் ...

SDPI கட்சியின் கோரிக்கை 
பெரம்பலூர் மாவட்டத்தில் 467 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. காலியாக உள்ள பணியிடங்களுக்கு சிறுபான்மை முஸ்லிம்களுக்கு 3.5% இடஒதுக்கீட்டின் படி பணி வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் SDPI கட்சியின் மாவட்ட செயலாளர் A. சித்தீக் பாஷா அவர்கள் கோரிக்கை.

இமாம் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை ...

ஆலிம்களின் குழந்தைகளுக்கு ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்
சார்பாக கல்வி உதவித்தொகை வழங்குவதற்கு ஏற்பாடுகள்
செய்யப்பட்டுள்ளது தேவை படுவோர் இந்த லிங்கை கிளிக் செய்தால்

தாவா மாநாடு கட்டுரை போட்டி ...


‘வைட்டமின் ஏ’ மருந்து வழங்கும் திட்டம்: பல குழந்தைகளை சென்றடையவில்லை!

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் குடும்பநலத்துறை சார்பாக வைட்டமின் ஏ மருந்து வழங்கும் திட்டம் பல குழந்தைகளை சென்றடையாமல் உள்ளது. இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தாததே இதற்கு காரணம் என்று பொதுமக்கள் புகார் கூறியுள்ளனர்.
இந்தியாவில் 20 சதவீத குழந்தைகள் ஊட்டச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்படு வதாக தேசிய ஊட்டச்சத்து நிறுவன ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில் வைட்டமின்

மழைகாலமும் நாம் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கைகள்...

சுகாதாரம் இல்லாத குடிநீர் மூலம் காலரா, மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் வாந்தி, ப்ளூ காய்ச்சல், மஞ்சள் காமாலை ஆகிய நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் தாக்கும்.அதன் அடிப்படையில் வருகின்ற காலம் பருவமழைக்காலம் என்பதனால் அதை நாம் எப்படி எதிர்க்கொள்ளவேண்டும் பருவமழையினால் ஏற்படும் நோய்களில் இருந்து எப்படி நம்மை காப்பாற்ற வேண்டும் என்பதை கீழே பட்டியலிட்டுள்ளது

ஞாயிறு, 26 அக்டோபர், 2014

யார் காட்டிய வழி இது?

எங்கள் சமுதாயதிற்கு படித்த முட்டாள் தேவையில்லைபடிப்பறிவுள்ள சிந்தனையாளர் தான்.

இன்றைய பள்ளி கூடங்களின் நிலையை தான் குறிப்பிடுகின்றோம்ஆம் நாம் சென்று படித்த கல்வி வேறு இன்று நமது குழந்தைகள் கற்கும் கல்வி வேறு

நாம் படிக்கும் பொழுது ஆற்றங்கரையில்குளத்தில்வாய்க்கால் நீரோடையில்  குளித்துமீன் குஞ்சுக்களை பிடித்து விளையாண்ட காலமும்தெருவில் கபடிஆபியம்இச்பைடுகுண்டுபம்பரம்கிட்டி பில்கிரிகெட்அடிபந்துகொக்கி , கண்ணாமுச்சி , தொடு ஆட்டம் என அடுக்கி கொண்டே போகலாம்.

சனி, 25 அக்டோபர், 2014

நபி (ஸல்) அவர்களின் குனாதிசியங்கள் இரண்டாம் பதிப்பு வெளியிடு.


நாட்டை நோக்கி வரும் கொடிய நோய்

நாட்டை நோக்கி வரும் கொடிய நோய்
நாட்டின் அன்னிய முதலீட்டை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். இந்த அரசு FDIயை அனுமதிக்கிறது . SENSEX மற்றும் NIFTY புள்ளி இன்று சரிந்தது. இது போன்ற செய்திகளை கேட்கும் போதும் படிக்கும் போது செய்திதாளை அல்லது தொலைகாட்சி சேனலை நாம் மாற்றுவோம்.

பெரம்பலூர் - மங்கள மேட்டில் கன்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதல் !

பெரம்பலூர் : பெரம்பலூர் அருகே முன்னால் சென்ற கன்டெய்னர் லாரி மீது அரசு பஸ் மோதியதில் கண்டக்டர் உள்பட 2 பேர் பலியாகினர். 25 பேர் காயமடைந்தனர்.தேனி மாவட்டம் கம்பத்திலிருந்து சென்னைக்கு நேற்றுமுன்தினம் அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர்.

இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்- - பேரா. அ. மார்க்ஸ்

இஸ்லாமியர் படை எடுத்து வந்து இந்துக் கோயில்களை இடித்து கட்டாயமாக மதம் மாற்றி இந்துக்கள் மீது ‘ஜிஸியா’ என்னும் தண்டனை வரி விதிக்கப்பட்டதாகப் பாடநூல்களில் படித்திருக்கிறோமே?

வெள்ளி, 24 அக்டோபர், 2014

எச். ராஜாவை, எஸ்.ஐ சுட்டால் எப்படி இருக்கும்?

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினத்தில், விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் செய்யதுவை, உதவி ஆய்வாளர் காளிதாஸ், காவல் நிலையத்திலேயே துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்த சம்பவம், தமிழகத்தை கொதிநிலைக்குக் கொண்டு சென்றுள்ளது.
ஏற்கெனவே இதுபோல சென்னை கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள கானத்தூர் காவல் நிலையத்துக்கு, விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தையல் தொழிலாளி ஹுமாயூன், காவல்துறையினரால் அடித்துத் துன்புறுத்தப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.

விகளத்தூரில் நடைபெற்ற கபாடி போட்டியில் நமதூர் அணி முதல் இடம்..

வி களத்தூரில் பாப்புலர் ப்ரண்டின் சார்பாக ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம் பிச்சாரத்தின் ஒருபகுதியாக 
இன்று (23.10.2014) கபாடி போட்டி நடைபெற்றது. 

வியாழன், 23 அக்டோபர், 2014

அழிந்து வரும் ரஞ்சன்குடி கோட்டை : பாதுகாக்க வரலாற்று ஆர்வலர்கள் கோரிக்கை!


பெரம்பலூர்: அழிந்து வரும் வரலாற்று பொக்கிஷமான ரஞ்சன்குடிக்கோட்டையை பாதுகாக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என பெரம்பலூர் மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூரிலிருந்து, 18 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது மங்கலமேடு கிராமத்தில், வரலாற்று சிறப்புமிக்க ரஞ்சன்குடிக்கோட்டை உள்ளது. கம்பீரமாய் உயர்ந்து நிற்கும் இக்கோட்டை, 1,000

இடையனின் இறையச்சம்!

சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் வலம் வந்த ஒரு காணொளிக் காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்தக் காலத்தில் இப்படியுமா நடக்கும் என்று அனைவரும் அதிசயித்தனர்.
ஸஊதி அரேபியாவில் ஒரு பாலைவனத்தில் ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ஓர் ஏழை ஆட்டிடையனைப் பற்றிய செய்திதான் அது. அந்த ஆட்டிடையன் வெறும் இரண்டரை நிமிட காணொளிக் காட்சி மூலம் தான் ஓரிரு நாட்களில் உலகம் முழுவதும் பிரபலமாவோம் என்று ஒருபொழுதும் எண்ணியிருக்கமாட்டார். மூன்று நாட்களில் 35 லட்சம் மக்கள் தன்னை அறிவார்கள் என்று கனவிலும் அவர் நினைத்திருக்கமாட்டார்.

இந்தியாவில் ஹலால் ஒப்பனைப்பொருட்கள் விற்பனை துவக்கம்!

புதுடெல்லி: இந்தியாவில் முதன்முறையாக ஹலால் முறையில் தயாரிக்கப்பட்ட ஒப்பனைப் பொருட்களை மட்டும் உற்பத்தி செய்கின்ற நிறுவனம் தனது வியாபாரத்தை ஆரம்பித்துள்ளது.

முதுகு தண்டுவட அறுவைசிகிட்சை வெற்றி: மருத்துவ உலகின் மகத்தான சாதனை!

லண்டன்: முதுகுத்தண்டுவடத்தில் ஏற்பட்ட மோசமான காயம் காரணமாக மார்புக்கு கீழே செயலற்றிருந்த ஒருவர் மீண்டும் எழுந்து நடக்க முடிந்திருக்கும் செயலானது மருத்துவ உலகின் மிகப்பெரிய அதிசயமாக வர்ணிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்டவரின் நாசித்துவாரத்தில் இருக்கும் செல்களை எடுத்து அவரது பாதிக்கப்பட்ட முதுகுத்தண்டுவடப்பகுதியில் செலுத்தி சிகிச்சையளித்ததன் மூலம் அவரது முதுகுத்தண்டுவடம் மீண்டும் செயற்படத்துவங்கியிருக்கிறது.
அதன் காரணமாக அவர் மீண்டும் எழுந்து நடக்க ஆரம்பித்திருக்கிறார்.

இஸ்லாம் கூறும் கணவன் மனைவி உறவு !

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) (இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
முஆவியா இப்னு ஹய்தா(ரலி) அறிவிக்கின்றார்கள்:

சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பிய முஸ்லிம் வர்த்தக பிரமுகரை ஆடையின்றி சோதனை : மதத்தை கூறி இழிவுப்படுத்தியதாக சுங்கத்துறையினர் மீது குற்றச்சாட்டு.....!!


சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பிய முஸ்லிம் வர்த்தக பிரமுகரை ஆடையின்றி சோதனை : மதத்தை கூறி இழிவுப்படுத்தியதாக சுங்கத்துறையினர் மீது குற்றச்சாட்டு.....!!

தொடரும் காவல்நிலைய மரணங்கள்: கண்காணிப்பு கேமரா அமைக்கக் கோரி வழக்கு!

காவல் நிலைய உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், அனைத்து காவல் நிலையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

செவ்வாய், 21 அக்டோபர், 2014

மகாராஷ்டிரத்தில் ஒவைஸி கட்சி வெற்றி – பறிபோகும் முஸ்லிம் வாக்கு வங்கி: காங். கவலை!

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் முஸ்லிம் கட்சியான அகில இந்திய மஜ்லீஸ்-இ-இத்தாஹாதுல் முஸ்லிமீன் (ஏ.ஐ.எம்.ஐ.எம்) கட்சி இரு தொகுதிகளில் வெற்றிபெற்றுள் ளது. இதன்மூலம் தனது முஸ்லிம் வாக்கு வங்கி பறிபோயுள்ளதால் காங்கிரஸ் கட்சி கவலையடைந் துள்ளது.
ஹைதராபாத்தில் முஸ்லிம் களால் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி ஏ.ஐ.எம்.ஐ.எம். இது, மகாராஷ்டிர சட்டசபைத் தேர்தலில் மும்பையிலுள்ள 14 தொகுதிகள் உட்பட மொத்தம் 28

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் செயற்குழுக் கூட்டம் அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவில் கட்ட வலியுறுத்தல்!

லக்னோ: அயோத்தியில் பிரமாண்டமான ராமர் கோவிலை கட்ட மத்திய அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். வலியுறுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோவில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செயற்குழுக் கூட்டம் கடந்த 3 நாட்களாக நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் முடிவில் சுரேஷ் பையாஜி ஜோஷி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது,

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆன்–லைன் வசதி-பிரவீன்குமார்!

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, பெயர் நீக்கம், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்ள இணையதள வசதியை உபயோகப்படுத்த வேண்டும் என்று  தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறுகையில், வாக்காளர் பட்டியலை திருத்தும் முறை அக், 15 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. 1.1.15 அன்று வரை 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள், வாக்காளர்களாக தங்களை பதிவு செய்துகொள்ளலாம்.

ஞாயிறு, 19 அக்டோபர், 2014

நமதூர் சகோதரனின் கவலை...

அஸ்ஸலாமு அழைக்கும் வரஹமதுல்லாஹ் 
எங்கள் ஏரியா வில் மலை பெய்து எங்கள் இடமே நாறி போய் விட்டது. ஓட்டு கேட்டு வருபவர்கள் அனைவரும் எங்களை வெற்றி பெற செய்தால்

மேக் இன் இந்தியா திரைக்குப் பின்னால் தொழிலாளரை ஒடுக்கும் மோடியின் திட்டங்கள்!

மோடி தலைமையிலான பாஜக ஆட்சி பதவியேற்ற நாள் முதல் பன்னாட்டு, உள்நாட்டு கார்ப்பரேட் முக்கியத்துவம் பெறுவதும், அன்னிய முதலீடு தலைப்புச் செய்தியாவதும் வழக்கமாகிவிட்டன.

காவல்துறை அதிகாரியால் வெறித்தனமாக சுட்டுக் கொல்லப்பட்ட செய்யது முகம்மது பலரது உயிரைக் காப்பாற்றியவர்!

ராமநாதபுரம்: காவல்துறை அதிகாரியால் வெறித்தனமாக சுட்டுக் கொல்லப்பட்ட செய்யது முகம்மது
எரிந்து கொண்டிருந்த பேருந்தில் உயிருக்காகப் போராடியவர்கள் பலரை காப்பாற்றியவர் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.பி.பட்டினம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக கடந்த 14ஆம் தேதி அழைத்து செல்லப்பட்ட செய்யது முஹம்மது என்ற இளைஞர் எஸ்.பி.பட்டினம் காவல் நிலைய துணை ஆய்வாளர் காளிதாஸால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்: காங்கிரஸ் !

வெளிநாட்டு வங்கிகளில் கருப்பு பணத்தை பதுக்கிய இந்தியர்களின் பெயர்களை வெளியிட வேண்டும் என்பது தொடர்பான வழக்கு கடந்த வெள்ளிக்கிழமை சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ரோத்தகி ஒரு மனுதாக்கல் செய்தார்.

சனி, 18 அக்டோபர், 2014

எஸ்.பி. பட்டினத்தில் முஸ்லிம் இயக்கங்கள் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம் ! ( காவி காளி)தாஸ் தற்காலிக பணியிடை நீக்கம்!

இராமநாதபுரம்:எஸ்.பி. பட்டிணத்தில் அப்பாவி இளைஞனை சுட்டுக்கொன்ற  காவல்துரையை கண்டித்து மற்றும் முஸ்லிம் வாலிபர் நீதி கேட்டு  15.10.2014 காலை 10 மணியளவில் இராமநாதபுரம் அரசு மருத்துவமனை முன்பு  மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இந்த ஆர்ப்பாட்டத்தில்

வீணாகும் வக்பு வாரிய சொத்துகள்: மதிப்பீட்டுக் குழு அறிக்கையில் தகவல்!

நாடு முழுவதும் வக்பு வாரிய சொத்துகள் வீணாகப் போய் கொண்டிருப்பதாகவும், அதை முறையாகப் பயன்படுத்தினால் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் கிடைக்கும் எனவும் இது குறித்து ஆய்வு செய்த மதிப்பீட்டுக் குழு சமீபத்தில் மத்திய அரசுக்கு தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

வியாழன், 16 அக்டோபர், 2014

நமது மாவட்டத்தில் நடைபெற்ற இஸ்லாமிய அழைப்பு பணி ...

நமது மாவட்டத்தில் நடைபெற்ற இஸ்லாமிய அழைப்பு பணி 

பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் அக்டோபர் 13,14, 2014 ஆகிய இரண்டு நாட்கள் 

புதன், 15 அக்டோபர், 2014

ஒன்னும் எழுதுவதற்கு இல்லை ...


பெங்களூரு கோர்ட் உத்தரவால் தமிழகம் முழுவதும் அதிமுக ஏற்படுத்திய கலவரத்தில் சேதபடுத்தபட்ட சொத்துக்களுக்கு அதிமுக பொதுச்செயலாளரிடம் வசூலிக்கவேண்டும் என வழக்கு தொடுக்கபட்டுள்ளது.

நோபல் பரிசு - அமைதி அரசியல்?

1931 ஆம் ஆண்டு காந்தி இலண்டன் வட்ட மேசை மாநாட்டில் கலந்து கொள்ளச் சென்றபோது எடுத்த படம்
இவர் தான் எங்கள் முன்மாதிரி என்று வாழ்ந்த மார்டின் லூதர் கிங்.jr முதல் இன்றைய ஒபாமா வரையிலும் தேடிச் சென்ற நோபல் பரிசு, ஏன் நம் கிழவரை இதுவரை நெருங்கவில்லை?

இந்திய முஸ்லிம்கள் தீவிரவாதத்தில் ஈடுபடுவதில்லை: பிரணாப் முகர்ஜி!

இந்திய முஸ்லிம்கள் தீவிரவாதத்தில் ஈடுபடுவது இல்லை என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். நார்வேயில் ஐந்து நாள் பயணத்தைத் தொடங்கியுள்ள அவர் அங்கு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இந்திய முஸ்லிம்களில் யாரும் தீவிரவாத பாதையை தேர்ந்தெடுப்பது இல்லை. எல்லை தாண்டிய தீவிரவாதத்தால்தான் இந்தியா பாதிக்கப்படுகிறது.

குடும்பத்தினர் துன்புறுத்தியதால் லவ் ஜிகாத் என பொய்யான புகார் அளித்ததாக இளம்பெண் வாக்குமூலம் !

மீரட்: உத்தரப்பிரதேசத்தில் நாளுக்கு நாள் பெண்கள் கற்பழிக்கப்பட்டு வருவது தொடர்கதையாகி வருவதாக குற்றச்சாட்டு கிளம்பிய நிலையில் அங்கு பொய்யான புகார் அளிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் அம்மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் மதராசாவில் அடைத்து வைத்து கும்பல் ஒன்று தன்னை கற்பழித்ததாக பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். இப்புகார் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நேதாஜியின் இந்திய தேசிய ராணுவ கேப்டன் அப்பாஸ் அலி மரணம்


லக்னோ: சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றிய கேப்டன் அப்பாஸ் அலி தனது 94வது வயதில் அலிகரில் காலமானார். சுதந்திர போராட்ட வீரர் சுபாஷ் சந்திரபோஸின் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர் கேப்டன் அப்பாஸ் அலி. உத்தர பிரதேச மாநிலம் அலிகரில் வசித்து வந்த அவர் இன்று தனது 94வது வயதில் காலமானார்.

செவ்வாய், 14 அக்டோபர், 2014

தலைக்கு மேலே கத்தி !

இந்தியாவில் சமீபகாலமாக ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக 
நீதிமன்றங்கள் சாட்டையை சுழற்றுகிறது.

விசாரணைக்காக அழைத்து வந்த சையத் முகம்மது துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற எஸ்.ஐ. -ராமநாதபுரத்தில் பயங்கரம்!

ராமநாதபுரம் கோட்டை காவல் நிலையத்தில் இன்று மாலை விசாரணைக்காக அழைத்து வந்த நபரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார் சப் இன்ஸ்பெக்டர். இதனால் ராமநாதபுரத்தில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

திரைக்கு வராத கதாநாயகி!

இந்த மலாலா யூஸுஃப்ஸாய் பற்றிய செய்தி வரும்போதெல்லாம் ஷபானா பாஸிஜ் பற்றி எழுதவேண்டும் என்று தோன்றும்…
சரி, பிறகு எழுதலாம் என்று, விட்டுப்போகும். ஆனால் இரண்டு வருடங்களாக தள்ளிப் போன விடயம் இப்போது எழுதாவிட்டால் எப்போதுமே வேண்டியதில்லை என்றாகிவிடும்.
முதலில் எல்லோரும் சொல்வது போலவே மலாலாவுக்கு வாழ்த்துகள் சொல்லிக்கொள்வோம்!

அட்டெஸ் டேஷன் தொல்லை, இனி இல்லை!

அட்டஸ்டேஷன் எனப்படும் சான்றளிப்பு நடைமுறையைத் தமிழக அரசு கைவிட்டுள்ளது. அசல் சான்றிதழ்களைத் திருத்தி, போலியாக நகல்களை உருவாக்குவதைத் தடுக்கும் விதமாக, நகல்களில் குரூப் ஏ, குரூப் பி அதிகாரிகளிடம் கையொப்பம் பெறும் நடைமுறை இருந்து வந்தது. இதன் மூலம், அதிகாரிகளுக்கும் வேலைப் பளு அதிகரித்தது. விண்ணப்பதாரர்களும் அலைச்சல் ஏற்பட்டது. இதிலும் அதிகாரிகள் சிலர், ஒரு நகலில் கையொப்பம் இட, இவ்வளவு தர வேண்டும் என்று நிர்பந்தித்ததும் உண்டு.

இடைவிடாமல் போராடி சாதனை புரிந்து வரும் இளம் பெண்!

அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதுக்கு என்ற மடமைத்தனத்தை தமது கல்வி போராட்டத்தால் உடைத்தெறிந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டத்தின் சிறு தொகுப்பே இது.
இராமநாதபுரம் மாவட்டம் கடலோர பகுதியில் இரண்டு சகோதரர்களுடன் பிறந்த சித்தி என்னும் பெயரை கொண்ட முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த இளம் பெண் தமது சிறு பிராயத்திலேயே படிப்பிலும்,விளையாட்டிலும் படுசுட்டியாக திகழ்ந்தார்.