Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

ஞாயிறு, 5 அக்டோபர், 2014

சத்தியம் தான் வெல்லும் ....



தினத்தந்தியில் இன்று(5.10.14)தீவிரவாதிகளாக மாறும் பெண்கள் என்ற தலைப்பில் வெளியாக கட்டுரையில் செக்ஸ் ஜிகாத் என்று பெண்களை கொச்சைப்படுத்தி மேற்கத்திய பத்திரிக்கைகள் எடுத்த வாந்தியை அப்படியே திருப்பி எடுத்திருக்கிறது.

தினத்தந்தியின் தலைமை பொறுப்பாளரை தொடர்புக்கொண்டு நமது கண்டனங்களையும்,ஆதங்கத்தையும் வெளிப்படுத்தியதை உள்வாங்கிக்கொண்ட அவர் எடிட்டோரியல் குழுவுடன் பேசி சரி செய்கிறேன் என்றார்.


இவர்கள் யாரை திருப்திப்படுத்த தீய நோக்கில் இதுபோல் செய்திகளை வெளியிட்டாலும் அது நல்லவிளைவுகளை பல நேரங்களில் ஏற்படுத்திவிடுகிறது...சென்ற மாதம் நிகழ்ச்சி ஒன்றில் சந்தித்த கல்லூரி மாணவி வைஷ்ணவி கூறிய கருத்து இதுதான் "லவ் ஜிகாத் பற்றி பத்திரிக்கைகள் பரபரப்பு காட்டி எழுதியது.ஜிகாத்தை பற்றி தெரிந்துக்கொள்ள திருக்குர்ஆனை புரட்டினேன்.தற்பொழுது திருக்குர்ஆன் என்னை கவர்ந்துவிட்டது என்றார்.

முகநூலிருந்து
முஹம்மது ஷிப்லி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக