Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 30 அக்டோபர், 2014

புஷ்ரா அறக்கட்டளை - ஓர் நல்ல முயச்சி ....

(தான தர்மங்கள் செய்வதினால் ) வறுமை (உண்டாகிவிடும் என்று அதைக்கொண்டு உங்களை ஷைத்தான்பயமுறுத்துகிறான்ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்யுமாறும் உங்களை ஏவுகிறான்ஆனால் அல்லாஹ்வோ(நீங்கள் தான தருமங்கள் செய்தால்தன்னிடமிருந்து மன்னிப்பும் (அருளும்பொருளும்மிக்க செல்வமும் (கிடைக்கும்என்றுவாக்களிக்கின்றான்நிச்சயமாக அல்லாஹ் விசாலமான (கொடையுடையவன்யாவற்றையும் நன்கறிபவன். (2-268)



29-10-2014 அன்று இரவு வி.களத்தூரின் கிலை தலைவர் M,அன்சர் பாஸா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது.

இக்கூட்டத்தில் துபையில் இருந்து தாயகம் வந்த பொது செயளாலர் அப்துல் சலாம் முன்னிலையில் நமது அறக்கட்டளையின் வழர்ச்சிப்பற்றி ஆலோசனை செய்யப்பட்டன

குறிப்பாக வட்டியில்லா நகை கடன் திட்டத்தினை விரிவு படுத்துவது சம்பந்தமாகவும் மேலும் வியாபிரிகள் மற்றும் சிறு வியாபாரிகள் கடன்த்திட்டத்தில் உள்ள நடை முறை பிரச்சனைகளை எப்படி சரி செய்து அனைத்து வியாபரிகளுக்கும் எளிய முறையில் கடன் வழங்குவது என்பதை விரிவாக ஆலோசனை செய்யப்பட்டன

புஷ்ராவின் வைப்புத்திட்டத்தில் அனைத்து வியாபாரிகளையும் பயன் பெற அவர்களை ஊக்கவிக்க முயற்ச்சிப்பது என்பதுபற்றியும் ஆலோசனை செய்யப்பட்டன.

மேலும் இக்கூட்த்தில் வி.களத்தூரின் திட்டக்குழு உறுப்பினர்கள் மற்றும் துபையிலிருந்து சென்ற செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் களந்து ஆலோசித்தனர்.

அன்பு சகோதர்களே நமது அறக்கட்டளையின் பெரும் முயற்ச்சி மக்களை வட்டியிலிருந்து காப்பது என்பதை ஆரம்ப நிலையிலிருந்து இன்று வரை கொஞ்சமும் தொய்வின்றி செய்து வருகிறோம் புஷ்ராவை அறிந்த அனைத்து அன்பர்களுக்கும் தெரியும்.

ஆனால் இதில் எத்தனை சிறமங்கள் உள்ளது என்பதை அதை நிர்வகிக்கும் நிர்வாகிகளுக்கு மட்டுமே தெரியும். அவர்களின் சொந்த வேலை பழுகளுக்கு இடையிலும் இத்தனை சிறமங்களையும் சுமந்து இவ்வுளகத்தில் எந்த பலனையும் எதிர் பாரமால் மறுமைக்காகவே உலைக்கும் எமது நிர்வாகிகளை பாரட்டுகின்றேன் என்று ஒற்ற வரியில் சொல்வதை தவிர எனக்கு வேற ஒன்றும் தோன்றவில்லை…

புஷ்ரா நல அறக்கட்டளையின் அனைத்து குழு நிர்வாகிகளும் மற்றும் நமது அறக்கட்டளை எப்படியெல்லாம் சேவைகள் செய்யவேண்டும் என்று எந்நேரமும் ஆலோசனை வழங்கி வரும் செயற்குழு உருப்பினர்களும் அவர்களுக்கு உருதுனையாக பல ஆலோசனைகள் வழங்கி வரும் பொதுக்குழு உருப்பினர்கள் மற்றும் நமது அறக்கட்டளைக்கு நிதியுதவி அளித்து வரும் பொது மக்களுக்கும் இறைவன் மென்மேலும் அவர்களுக் பொருளாதார உதவியும் உடல் ஆரோக்கியத்தையும் அவர்களின் ஆயுட்காலத்தையும் நீடித்து மறுமையில் வெற்றி பெற இறைவனிடத்தில் துஆ செய்கிறேன்.

இறைவன் மனிதர்களை படைத்து அவர்களுக்காக பல வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ளான். அதில் மிகுந்த செல்வத்தையும் நடுத்தரமான செல்வத்தையும் ஏழ்மையான செல்வத்தையும் மனிதர்களுக்கு மூன்று நிலைகளாக பிரித்துள்ளான்.

ஏழ்மை நிலையிலுள்ளவர்கள் தன் நிலையை எண்ணி நிலைகுலைந்து போகாமல் இருக்கதான் ஜகாத் மற்றும் தான தர்மங்களை வசதி படைத்தவர்களின் மீது கடமையாக்கி, அவர்களுக்கு நீங்கள் கொடுத்து உதவுங்கள் என்று இறைவன் கூறுகிறான்.:

மேலும் நமது அறக்கட்ளையின் வட்டியில்லா நகை கடண் திட்டத்திற்கு போதிய நிதி பற்றாகுறையினால் எங்களால் கேட்க்கும் அனைத்து நபர்களுக்கும் கடண் கொடுப்பதில் சிறமம் ஏற்படுகிறது. எனவே நகை கடண் திட்டத்திற்கும் மற்றும் அறக்கட்டளையின் வளர்ச்சிக்கும் உங்களால் முடிந்த வைப்புத்தொகையாக செலுத்தினால் மேலும் அதிகமான நபர்கள் வட்டியிலிருந்து மீல உதவியாக இருக்கும்.

எனவே புஷ்ராவின் வைப்புத்திட்டத்தில் இனைந்து தாங்களும் மறுமையில் வெற்றி பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த வைப்புத்தொகை திட்டமானது குறைந்தபட்சம் ரூ.5000 (ஐந்து ஆயிரம் ரூபாய் )ஆகும் அதற்கு மேலும் செலுத்தலாம்

இந்த தொகையை தாங்கள் எப்போது வேண்டுமானலும் திரும்ப பெறலாம் ஒரு மாதம் முன்பே அறிவித்தால் போதுமானதாகும்.

மேலும் விபரங்களை அறிய அறக்கட்டளையின் நிர்வாகிகளை தொடர்பு கொள்ளவும்

M. அன்சர் அலி : +91 9585358592 தமிழ் நாடு
A. அப்துல்லா பாஷா : 0097150 3878421 U.A.E

இத்திட்டத்தில் மட்டும் இனைத்து கொள்ளாமல் இந்த அறக்கட்டளையின் உருப்பினர்களாக இனைந்து பயன் பெறுமாறு அன்புடன் அலைக்கின்றோம்

வி.களத்தூரை சார்ந்தவர்கள் மட்டும் இந்த அற்கட்டளையில் இல்லை பல ஊர் நன்பர்களும் பயன் பெற்று வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியுர் நன்பர்களும் இதில் இனைந்து தாங்களும் பயன் பெற்று மற்றவர்களும் பயன் பெற அன்புடன் அலைக்கின்றோம்


யார்இறைவன் செல்வத்தை தனக்கு கொடுத்துள்ளான்அவன் வழியில் செலவிட்டால் தன் செல்வத்தை மென்மேலும்அதிகரிக்கச் செய்வான் என்று தூய்மையான உள்ளத்துடன் வாரி வழங்குகிறார்களோ அவர்களுக்கு இம்மையில் அளவுகடந்த நற்பலன்களை தருகின்றான்இறைவன் தன் திருமறையில்தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில்செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம் அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது ஒவ்வொரு கதிரிலும் நூறுதானியங்கள் உள்ளனதான் நாடியோருக்கு அல்லாஹ் பன்மடங்காகக் கொடுக்கிறான்அல்லாஹ் தாராளமானவன்அறிந்தவன் (2:261)


அன்புடன்

A. அப்துல்லா பாஷா : 0097150 3878421 U.A.E
தலைவர், துபை
மின்னஞ்சல் மூலமாக
புஷ்ரா அறக்கட்டளை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக