Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 30 அக்டோபர், 2014

இனி ரத்த பரிசோதனைகள் அவசியமில்லை..!!


ஊசிகளை உடலில் குத்தி, ரத்தத்தை உறிஞ்சி எடுப்பதைப் பார்த்தாலே பலருக்கு மயக்கம் வந்துவிடும். எனவே ஊசியையும், ரத்தப் பரிசோதனையையும் வெறுப்பவர்கள் ஏராளம்.

இனிமேல் ரத்த மாதிரிகள் சேகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு மாற்றாக அமெரிக்காவில் நவீன வழி கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மருத்துவ சிகிச்சை என்றாலே ரத்தப் பரிசோதனைதான் பிரதானம். முதலில் ரத்தத்தை சோதித்தால்தான் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பது தெரியவரும். நோயின் தீவிரம் எவ்வளவு, எவை பாதிக்கப்பட்டிருக்கிறது, சத்துக்கள் குறைந்திருக்கின்றனவா, அடுத்து என்ன செய்யலாம்? என்பதுபோன்ற கேள்விகளுக்கான விடைகள் ரத்த பரிசோதனையில்தான் கிடைக்கும்.

ஆனால் மேற்சொன்னதுபோலவே ரத்தப் பரிசோதனை செய்வதென்றால் பலருக்கும் பயம் தொற்றிக் கொள்ளும். சிலர் மயக்கமடைந்துவிடுவார்கள். 

வடக்கு மத்திய அமெரிக்க பகுதியில் செயல்படும் சின்சினாட்டி பல்கலைக்கழக ஆய்வாளர்கள், இதற்கு சிறந்த மாற்று வழியாக எலக்ட்ரானிக் பட்டை ஒன்றை உருவாக்கி இருக்கிறார்கள்.

அமெரிக்காவின் விமான படை ஆராய்ச்சி ஆய்வகத்துடன் இணைந்து இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அவர்களின் கூட்டு முயற்சியில் பேண்டேஜ் போல சருமத்தில் ஒட்டிக் கொள்ளும் இந்த பேட்ஜ் தயாரானது.

மருத்துவ பேட்ஜில், சிறிய எலக்ட்ரானிக் சர்க்கியூட் போர்டு, ஆன்டனா, கட்டுப்பாட்டு சிப், வியர்வை மாதிரியை சேகரிக்கும் பதப்படுத்தப்பட்ட காகிதம் ஆகியவை இருக்கும்.

வியர்வையை ஆய்வு செய்து, பரிசோதனை முடிவுகளைத் தரும். இதற்காக உடலில் ஊசியால் குத்த வேண்டிய அவசியமில்லை. சருமத்தில் உள்ள வியர்வை நுண்துளைகளின் வழியே வெளியேறும் வியர்வையே பரிசோதனைக்கு பயன்படுத்தப்படுகிறது.

கணினி அல்லது ஸ்மார்ட்போன் மூலமாக இந்த பட்டைக்கு தகவல் அனுப்பினால், உடனே வியர்வை மாதிரியை சேகரித்து பரிசோதித்து தகவல்களை பட்டியலிட்டுவிடும். வியர்வையில் உள்ள இரும்பு, சோடியம், குளோரைடு ஆகியவற்றை கணித்து தகவல் அனுப்பும்.

இதைக்கொண்டு சில வியாதிகளின் தன்மை, உடல் நலம் ஆகியவற்றை கணிக்கலாம். தேவைக்கு ஏற்ப சில மணி நேரங்களுக்கு ஒரு முறை வியர்வை பரிசோதனையை செய்ய கட்டளை கொடுக்கலாம்.

எதிர்காலத்தில் வியர்வை மாதிரியின் மூலமே எலக்ட்ரோலைட்டுகள், புரதம், தாதுஉப்புக்கள், அமினோ அமிலங்கள் ஆகியவை பற்றிய தகவல்களையும் கண்டுபிடிக்கும் வகையில் இந்தக் கருவி மேம்பாடு செய்யப்பட இருக்கிறது. அப்போது நீரிழிவு நோயாளிகள் உள்பட பல்வேறு வியாதிகளால் பாதிக்கப்பட்டவர்களும், மருத்துவ மனைக்குச் செல்லாமலே அவ்வப்போது தங்கள் உடல் நிலையை வியர்வை பரிசோதனையின் மூலம் அறிந்து கொள்ளலாம். நிலைமை கவலையடையும் வகையில் இருந்தால் மருத்துவரின் உதவியைப் பெறலாம்.


ஆய்வக அளவில் பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ள இந்த பட்டை, சிறு நாணய அளவில் சுருக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வர உள்ளது. அடுத்த ஆண்டின் ஆரம்பத்தில் மனிதர்களில் பரிசோதித்துப் பார்க்கப்பட்ட பின்னர் பயன்பாட்டிற்கு வரும். இது பற்றிய ஆய்வுக் கட்டுரையை விஞ்ஞான பத்திரிகை ஒன்றில் எழுதி இருக்கிறார் ஆய்வாளர் ஜாசன் கெய்கென்பெட்.

கலிபோர்னியா பல்கலைக்கழகம் மற்றும் சான்டியாகோ பல்கலைக்கழகம் ஆகியவையும் இதே போன்ற ஆய்வில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக