Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 27 அக்டோபர், 2014

மழைகாலமும் நாம் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கைகள்...

சுகாதாரம் இல்லாத குடிநீர் மூலம் காலரா, மலேரியா, டெங்கு, சிக்குன் குனியா, மூளைக்காய்ச்சல், யானைக்கால் வாந்தி, ப்ளூ காய்ச்சல், மஞ்சள் காமாலை ஆகிய நோய்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் தாக்கும்.அதன் அடிப்படையில் வருகின்ற காலம் பருவமழைக்காலம் என்பதனால் அதை நாம் எப்படி எதிர்க்கொள்ளவேண்டும் பருவமழையினால் ஏற்படும் நோய்களில் இருந்து எப்படி நம்மை காப்பாற்ற வேண்டும் என்பதை கீழே பட்டியலிட்டுள்ளது
காய்ச்சல், சலதோஷம், இருமல் ஏற்படும் போது மருத்துவரிடம் சென்று தகுந்த மருந்துகளை எடுத்து கொள்ளலாம். சரியாகிவிடும் என்று வீட்டிலேயே ஏதேனும் மாத்திரை போட்டுக் கொள்வதை தவிர்க்கவும்.
குழந்தைகளுக்கு மழைக் காலத்தில் கதகதப்பான ஆடைகளை அணிவிக்க வேண்டும். மழைக் காலத்தில் குடிக்கும் தண்ணீரை, காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும்.
கூடுமானவரை பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு செல்பவர்கள் வீட்டில் காய்ச்சிய தண்ணீரை கொண்டு சென்று குடித்தால் மழை கால நோயில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.
மழைக் காலத்தின் போது சுத்தமாக இருக்கும் கழிவறைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.\* வெளியே சென்று வீடு திரும்பியதும் கை, கால்களை நன்கு சோப்பு போட்டு கழுவ வேண்டும். உணவு சாப்பிடும் முன்பு கட்டாயம் கைகழுவி விட்டு சாப்பிடுவது நல்லது.
செருப்பு, ஷூ ஆகியவற்றை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.
குழந்தைகள் அவர்களுக்கே அறியாமல் கீழே இருப்பதை வாயில் எடுத்து வைத்துக் கொள்வர், எனவே குழந்தைகள் இருக்கும் இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியம்.
உணவுமுறைகள்‬
மழை நேர வைரஸ் காய்ச்சலுக்கு உடனடியாக கொடுக்க நிலவேம்பு கஷாயம் பெஸ்ட். நம் வீட்டிலேயே நிலவேம்பு பொடியை வாங்கி வைத்துக் கொண்டால் நல்லது.
இந்த நிலவேம்பு பொடியுடன் தண்ணீர் சேர்த்து காய்ச்சி,பனங்கற்கண்டு சேர்த்து, கொதிக்க வைத்து, வடிகட்டி, வைரஸ் காய்ச்சல் உள்ளவர்களுக்கு கொடுக்கலாம். உடனடியாக காய்ச்சல் பறந்தோடி விடும்.
மழைக் காலத்தில் நாம் சாப்பிடும் உணவில் இனிப்பு அதிகம் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. காரம், கசப்பு, துவர்ப்பு சுவையுள்ள உணவுகளை மழைக்காலத்தில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
பால் மற்றும் பால் சார்ந்த தயிர் வெண்ணெய்,நெய் போன்றவற்றையும் அதிகம் சாப்பிடக் கூடாது,
இரவு தூங்குவதற்கு முன் பாலில் மஞ்சள் தூள்,மிளகுத்தூள்,பனங்கற்கண்டு சேர்த்து சாப்பிடுவது நல்லது.
நீர்ச் சத்துக்கள் நிறைந்த சுரைக்காய்,பூசணி, புடலை, பீர்க்கன், வெள்ளரி போன்ற காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வதை தவிருங்கள்.
கண்டிப்பாக மழைக் காலத்தில் நம் உணவுப் பதார்த்தங்களில் மிளகு பொடியைச் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது.

முகநூலிலிருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக