Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

வியாழன், 30 அக்டோபர், 2014

கல்லாறு காட்டாற்று வெள்ளத்தில் 400 க்கும் மேற்பட்ட ஆடுகள் அடித்து செல்லப்பட்டது!


பெரம்பலூர் அருகே பலத்த மழையால் ஏற்பட்ட கல்லாறு காட்டாற்று வெள்ளத்தில் 400க்கும் மேற்பட்ட  ஆடுகள் அடித்து செல்லப்பட்டது!

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் ஆட்டுப்பட்டி அமைத்து ஒவ்வொரு இடங்களிலும் ஆடுகளை மேய்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டைக்கு வந்த அவர் பெரியம்மாபாளையம் என்ற பகுதியில் ஆட்டுப்பட்டி அமைத்து அதில் 120 ஆடுகளை வைத்து மேய்த்து வந்தார்.

தற்போது பெரம்பலூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது, நேற்று வேப்பந்தட்டை பகுதியில் பல மணி நேரம் பலத்த மழை கொட்டியது. அப்போது காட்டாற்று வெள்ளம் கல்லாற்றில் பாய்ந்து வந்தது. இதில் ஆட்டுப்பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 120 ஆடுகளும் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது.

கண் இமைக்கும் நேரத்தில் ஆடுகள் அனைத்தையும் வெள்ளம் இழுத்து சென்றது. இன்று காலை ஆட்டுப்பட்டிக்கு வந்த கோவிந்தராஜ் காட்டாற்று வெள்ளம் அந்த பகுதியில் ஓடுவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் தனது ஆடுகள் கரையோரம் இறந்து கிடப்பதை கண்டார். இதனால் பதறியபடி தனது ஆடுகள் வெள்ளத்தில் சிக்கி பலியாகி போனதே என்று அலறினார். மேலும் அனைத்து ஆடுகளையும் கிராம மக்களோடு சேர்ந்து பதறியபடி தேடும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

வெள்ளத்தில் சிக்கிய ஆடுகளின் மதிப்பு ரூ.5 லட்சம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்றொரு சம்பவம்!


இதேபோல் பெரம்பலூர் மாவட்ட எல் லையான பசும்பலூர் பெரியவடகரை பகுதிக்கும், சேலம் மாவட்டம் கெங்கவல்லி தாலுகா ராஜபாளையத்தை சேர்ந்த சிங்காரம், சின்னசாமி, தங்கவேல் ஆகியோர் சுமார் 400க்கும் மேற்பட்ட ஆடுகளை பட்டியில் அடைத்து மேய்த்து வந்தனர். நேற்று முன்தினம் இப்பகுதியிலும் கனமழை பெய்தது. பட்டியை அடுத்த ஓடிய காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் 271 ஆடுகள் அடித்துச் செல்லப்பட்டன. 150 ஆடுகள் இறந்த நிலையில் மீட்கப்பட்டன. மீதமுள்ள ஆடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. சம்பவ இடத்தில் ஆர்டிஓ ஜெயச்சந்திரன், கெங்கவல்லி தாசில்தார் சக்திவேல், வேப்பந்தட்டை தாசில்தார் ஏழுமலை, ஆர்ஐ சுகுணா, விஏஓக்கள் ஆறுமுகம், கைலாசம், உமாமகேஸ்வரி ஆகியோர் சென்று பார்வையிட்டனர். இவ்விரு சம்பவங்களிலும் 358 ஆடுகள் வெள்ளத்தில் சிக்கிய இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நன்றி தினகரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக