Flash Return

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) ...

Green Flash

அல்லாஹ் கூறுகின்றான் “ முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.”(அல்குர்ஆன் 5:8)*******

Red Flash

“நீங்கள் தும்மினால், ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (நீங்கள் இவ்வாறு கூறியதைக் கேட்கும்) ‘உங்கள் சகோதரர்’ அல்லது ‘நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக ‘யர்ஹமுக்கல்லாஹ்’ என்ற சொன்னால், நீங்கள் (அவருக்காக) ‘யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்’ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: புகாரி 6224..!....

திங்கள், 27 அக்டோபர், 2014

இன்று 28-10-2014 கடைசி நாள் ...

SDPI கட்சியின் கோரிக்கை 
பெரம்பலூர் மாவட்டத்தில் 467 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. காலியாக உள்ள பணியிடங்களுக்கு சிறுபான்மை முஸ்லிம்களுக்கு 3.5% இடஒதுக்கீட்டின் படி பணி வழங்க வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் SDPI கட்சியின் மாவட்ட செயலாளர் A. சித்தீக் பாஷா அவர்கள் கோரிக்கை.

விண்ணபிக்க விரும்புபவர்கள் 28.10.2014 ம் தேதிக்குள் 
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

தகுதி :
விதவை, கணவனால் கைவிடப்பட்டோர், 
இரண்டு பெண் குழந்தைகளின் தாய், முதிர்கன்னி, ஆதரவற்றவர்,

வயது : 35 க்குள் 
கல்வி தகுதி : 10 ம் வகுப்பு 
கடைசி நாள் : 28.10.2014

விண்ணப்பங்கள் இணைக்கப்பட்டுள்ளது.
தொடர்புக்கு :
A. சித்தீக் பாஷா 
செல் : 94874 24761.




மின்னஞ்சல் மூலமாக
பாப்புலர் ஃப்ரண்ட் LBK



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக