வெள்ளி, 28 மார்ச், 2014
வியாழன், 27 மார்ச், 2014
வகுப்புவாத சக்திகளை தோற்கடிக்கவும் மாற்று அரசியலுக்கு வாக்களிக்கவும் மக்களுக்கு கோரிக்கை - பாப்புலர் ஃப்ரண்ட்
வருகின்ற பாராளுமன்ற தேர்தல் மக்களின்
தீர்ப்பினை மீண்டும் எதிர்பார்த்து இருக்கிறது. இரண்டு முறை ஆட்சியில்
தொடர்ச்சியாக அமர்ந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி மக்களின்
எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வதிலிருந்து தோல்வி அடைந்துள்ளது. இரண்டாவது
முறையாக ஆட்சியில் அமர்ந்த போது ஐக்கிய முற்போக்கு கூட்டணி பல்வேறு ஊழல்
குற்றச்சாட்டுகளிலிருந்து மீள முடியாமல் முடங்கியது. ஐக்கிய முற்போக்கு
கூட்டணியின் தோல்வியானது தேசிய அளவில் மக்களிடையே ஒரு வித எதிர் அலையை
ஏற்படுத்தியுள்ளது. துரதிருஷ்டவசமாக மக்களிடையே ஏற்பட்ட இந்த எதிர் அலையின்
மூலம் அரசியல் இலாபம் அடைய முயற்சிப்பவர்கள் நமது நாட்டின் அடிப்படை
அரசியல் கோட்பாடுகளுக்கே பெரும் அச்சுறுத்தலாக விளங்குபவர்கள் ஆவார்கள்.
குழந்தைகளுக்கான டயாபர் உபயோகிப்பதினால் கெடுதிகள் அதிகம்! மருத்துவர்கள் அறிவிப்பு!!
குழந்தை பிறந்த உடனே
சில நாட்களிலேயே அவர்களுக்கு டயாபர்களை மாட்டி விடுகின்றனர். அடிக்கடி
சிறுநீர், மலம் கழிப்பதால் குழந்தையின் பெட், துணி போன்றவைகளை துவைக்க
சிரமப்படும்பெற்றோர்கள் டயாபர்களை மாட்டிவிட்டு பின்னர் தூக்கி எறிந்து
விடுகின்றனர். இந்த டயாபர்களால் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுவதோடு,
சுற்றுச் சூழலும் மாசடைகிறது. எனவே குழந்தைகளுக்குடயாபர் உபயோகிக்கும்
பெற்றோர்கள் அதனால் ஏற்படும் பின்விளைவுகளைப் பற்றி தெரிந்து கொண்டு
உபயோகிக்க வேண்டும் என்கின்றனர் குழந்தை நல மருத்துவர்கள்.கடந்த 20
ஆண்டுகளுக்கு முன்புவரை குழந்தைகளுக்கு துணியினாலான, ‘டயாபர்’களே
பயன்படுத்தப்பட்டன. பின்னர், பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும்,
‘டயாபர்’கள் வரத் துவங்கின. இதன்பிரபலத்தால், துணி, ‘டயாபர்’களின்
பயன்பாடு, படிப்படியாக குறைந்து விட்டது.
புதன், 26 மார்ச், 2014
லப்பைகுடிக்காடு பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்த 2 பேர் கைது!
லப்பைகுடிக்காடு பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்த 2 பேர் கைது!
செவ்வாய், 25 மார்ச், 2014
திங்கள், 24 மார்ச், 2014
சுவாமியின் வாக்குமூலம் நாஸிர் ஹுஸைனின் விடுதலைக்கு உதவியது!
சுவாமியின் வாக்குமூலம் நாஸிர் ஹுஸைனின் விடுதலைக்கு உதவியது!
புதுடெல்லி: தீவிரவாத வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்த உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோரைச் சார்ந்த முஸ்லிம் இளைஞர் நாஸிர் ஹுஸைன்(வயது32) விடுதலையானார்.
வெடிப்பொருட்களுடன் 2007-ஆம் ஆண்டு ஜூன் மாதம் லக்னோவில் ஒரு ஹோட்டல் அறையில் இருந்து ஹுஸைனை கைதுச் செய்ததாக உத்தரபிரதேச அதிரடிப்படை
ஞாயிறு, 23 மார்ச், 2014
இரு கனவுகள்... ஒரே செயல்திட்டம்!
இந்தியாவின் அடுத்த பிரதமர் மோடி அல்லது ஜெயலலிதா. முதன்முதலில் இப்படிச் சொன்னவர் சோ.
ஆருடமா, செயல்திட்டமா?
தேசிய அரசியலில் அன்றைக்கு மோடி இவ்வளவு செல்வாக்கானவர் இல்லை. பா.ஜ.க. அத்வானி கையில் இருந்தது. ஜெயலலிதாவும் இவ்வளவு உயரத்தில் இல்லை. முந்தைய தேர்தலில் ஜெயலலிதா, மாயாவதி, மம்தா மூவரையும் இணைத்து ‘15-வது மக்களவையைத் தீர்மானிக்கும் மூன்று சக்திகள்’ என்று தேசிய ஊடகங்கள் கட்டமைத்த பிம்பம் சுக்குநூறாகிவிட்டிருந்த நிலையில், ஜெயலலிதா அடுத்த பிரதமர் என்று அ.தி.மு.க. பொதுக்கூட்டப் பேச்சாளர்கள்கூட அன்றைக்குச் சொல்லத் தயங்கியிருப்பார்கள். சோ சொன்னார். தொடர்ந்து, ‘மோடி அல்லது ஜெயலலிதா’ எனும் முழக்கத்தைப்
புதன், 19 மார்ச், 2014
செவ்வாய், 18 மார்ச், 2014
திங்கள், 17 மார்ச், 2014
நமதூரின் எதிர்காலம் இனி யார்கையில்...
நமதூரின் எதிர்காலம் இனி யார்கையில்...
குன்னம்,: குன்னம் அருகே வருவாய்த்
துறைக்கு சொந்தமான இடத்தில் மண்டபம் கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில்
இருதரப்பைச் சேர்ந்த 20 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம்
குன்னம் அருகே உள்ள லப்பைக்குடிக்காடு கிராமத்தில் மேற்கு ஜமாத் பள்ளி வாசல் அருகே
வருவாய்த் துறையினருக்கு சொந்தமான 10 சென்ட் இடத்தை அதே ஊரைச்
சேர்ந்த அப்துல்சலீம் என்பவர் கடந்த 1997ம் ஆண்டு அனுபவ
பாத்தியத்தில் பட்டா பெற்றார்.
ஞாயிறு, 16 மார்ச், 2014
ஹஜ் செல்ல விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு !
ஹஜ் செல்ல விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு !
வெள்ளி, 14 மார்ச், 2014
கலாட்டூனாகும் கார்ட்டூன்!
“என் குழந்தைகளை சினிமா பார்க்க நான் அனுமதிப்பதே கிடையாது” – இது பல கண்டிப்பு பெற்றோர்களின் பலத்த குரல். ஆனால் குழந்தைகளை கார்ட்டூன் படங்களை பார்ப்பதற்கு அவர்கள் தடையேதும் ஏற்படுத்துவதில்லை என்பதை விட வசதி ஏற்படுத்துகின்றனர் என்பதுதான் ஆச்சர்யம்.
தனது வேலைகளில் கவனம் செலுத்த, குழந்தைகளின் கவனத்தை திசைதிருப்ப வேண்டிய அவசியம் அவர்களுக்கு இருக்கத்தான் செய்கிறது. அதற்கு அவர்கள் பயன்படுத்தும் ஆயுதம்தான் ‘கார்ட்டூன் மூவி’. இப்படி இரண்டு வயது குழந்தைகளையும் தொலைக்காட்சிக்கு அடிமையாக்கிய பெருமை தாய்மார்களுக்கே சாரும்.
சத்தியம் வென்றது ! அசத்தியம் அழிந்தது!
சத்தியம் வென்றது ! அசத்தியம் அழிந்தது!
திருச்சியில் ஒரு இஸ்லாமிய பள்ளியில் பயிலும் மாணவி +2 தேர்வு எழுத வேறொரு பள்ளிக்கு சென்றுள்ளார். அந்த பள்ளியில் தேர்வு நடத்தும் ஆசிரியர் அந்த மாணவியை புர்காவுடன் தேர்வு எழுத தடை விதித்தனர்.
அந்த மனைவியோ புர்காவை கழற்ற மாட்டேன் என்று விவாதம் செய்துள்ளார்.இதனை யடுத்து அந்த மாணவி பயிலும் பள்ளியின் தாளாளர் தலையிட்டு Human Guidance and Welfare Center, Chennai கோர்ட்டில் வழக்கு தொடுத்தார்.
இறைவனின் கிருபையால் தேர்வு எழுதுவதற்க்காக இஸ்லாமிய அடையாளமான புர்காவை கழற்ற தேவையில்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.
வியாழன், 13 மார்ச், 2014
அடுத்த கட்டத்தை நோக்கி நமது இணையதளம் - தலைமை நிருபர்.
புகழ் அனைத்தும் ஆற்றல் மிக்கவனும் வெற்றிக்கு நிரந்தர சொந்தக்காரனுமாகிய
அல்லாஹ் ஒருவனுக்கே!
அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிற வேறொன்றும் நிச்சயமாக
எங்களை அணுகாது. அவன்தான் எங்களுடைய இறைவன்” என்று நீங்கள் கூறுங்கள். நம்பிக்கையாளர்கள்
அனைவரும் அல்லாஹ்விடமே பொருப்பை ஒப்படைக்கவும்
அத்தவ்பா 51.
நமது தளம் 2 ஆண்டுகள் கடந்து அல்லாஹ்வின் பேர் உதவியால் 3
ஆம் ஆண்டு மார்ச் 13 ல் அடியெடுத்து வைப்பதினால் நமது ஆசிரியர் குடும்பம் ஒன்று கூடி,
நமது கடந்த கால நிகழ்வுகளை அலசி ஆராயப்பட்டது. மேலும் வரக்கூடிய காலங்களில் நாம் எப்படி
எதைநோக்கி பயணிக்க வேண்டும் என்று தலைமை நிருபர் சிற்றுரையாற்றினார்.
புதன், 12 மார்ச், 2014
நில நடுக்கத்தை குறிப்பாக உணர்த்த வானில் தோன்றும் வெளிச்சக் கீற்றுகள்!-விஞ்ஞானிகள் ஆய்வு!
நியூயார்க்: நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்பு வானில் தோன்றும் வெளிச்ச கீற்றுகள், பூமியில் ஏற்படும் அசைவுகளால் இருக்கலாம் என அமெரிக்கவிஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
சமீபத்தில் சீனா மற்றும் இத்தாலியில் ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கங்களுக்கு முன்பு வானில் வெளிச்சம் ஏற்பட்டது. பூமியில் இருக்கும் மண் படிமங்கள் நகர்வதால் மாபெரும் மின்சார சக்தி உருவாகி அதனால் இந்த வெளிச்சப் பொறிகள் உருவாகலாம் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
விளம்பரங்கள் ஆபாசங்களாக மாறும்போது....
ஒரு காலகட்டம் வரை விளம்பரங்கள் மூலம் மக்களிடையில் செய்தியை கொண்டு போய் சேர்ப்பதில் நல்ல கருத்துகளையே முன் வைத்தார்கள். அதன் மூலம் ஒரு நிறுவனம் தாங்கள் தயாரிக்கும் பொருட்களை பற்றிய விளம்பரத்தை தயார் செய்து வெளியிடுவார்கள். இந்த விளம்பரத்தில் பல்வேறு யுக்திகளை கையாண்டு மக்களை ஈர்ப்பார்கள். இதன் மூலம் அவர்களின் பெருட்களின் பயன்பாடும், அதன் சிறப்பும் மக்களிடம் சேரும்.
திங்கள், 10 மார்ச், 2014
ஞாயிறு, 9 மார்ச், 2014
UAPA சட்டத்தால் பாதிக்கப்பட்ட இம்ரானின் அனுபவங்கள்.
UAPA சட்டத்தால் பாதிக்கப்பட்ட இம்ரானின் அனுபவங்கள். படிக்கத் தவராதீர்கள்.
இன்று முழுவதும் டெல்லியில் UAPA சட்டத்திற்கு எதிரான மாநாடு. மாலைக் கருத்தரங்கில் சுமார் 5000 பேர் கலந்துகொண்டனர். ஏகப்பட்ட தலைவர்கள் இந்தக் கொடூர சட்டத்திற்கு எதிராகக் கண்டன உரையாற்றினர். காலையில் இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒரு உரையாடல் நடைபெற்றது. நானும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த வழக்குரைஞர் ஷப்னாவும் ஒரு பேனலில் இருந்தோம். மூன்று மணி நேரத்தில் நால்வரின் சோக அனுபவங்களுக்குக் காது கொடுக்க முடிந்தது.
ஒவ்வொன்றும் இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டிய நெஞ்சை உருக்கும் அனுபவங்கள்தான். நேரமில்லை. ஒன்றை மட்டும் இங்கே பதிகிறேன். சென்ற வாரம் ஹைதராபாத் சென்றபோது சந்தித்த அந்தப் பையனை, அல்லது அழகிய தோற்றத்துக்குரிய இளைஞனை மீண்டும் பார்த்தபோது ஒரு கணம் துணுக்குற்றேன், ஆவலுற்றேன். ஓடிச்சென்று அவன் கைகளைப் பற்றிக் கொண்டேன்.
சனி, 8 மார்ச், 2014
பெண்கள் நாட்டின் கண்கள்!
சர்வதேச பெண்கள் தினம் மார்ச் 8ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டில் பெண்களின் உரிமைகளையும், அவர்களுக்கான சுதந்திரத்தையும் பேசி வரும் இத்தருணத்தில் பெண்களின் நிலையைப் பற்றி ஆராய வேண்டும்.
கடந்த காலங்களில் பெண்களுக்கு எதிராக நடந்த அநியாயங்களையும், அக்கிரமங்களையும் சற்று சிந்தித்துப் பார்த்தால், பெண்களின் நிலை எவ்வளவு மோசமாக இருக்கின்றது என்பதை நம்மால் அறிய முடியும். அதில், குறிப்பாக டெல்லியில் மருத்துவ மாணவியில் இருந்து, சமீபத்தில் நடந்த அனைத்து பாலியல் கொடூரங்களையும் பார்த்தால் நாம் பெண் சமூகத்தின் தற்கால நிலையைப் பற்றி அறிய முடியும்.
வியாழன், 6 மார்ச், 2014
வாசகர்கள் கவணத்திற்கு.
வாசகர்கள் கவணத்திற்கு.
நாம் தூதராகிய அவருக்கு நீங்கள் உதவி செய்யாவிட்டால், அவருக்கு யாதொரு இழப்புமில்லை. இறைமறுப்பாளர்கள் அவரை (ஊரை விட்டு) வெளியேற்றிய போது, திண்ணமாக அவருக்கு அல்லாஹ் உதவி செய்தே இருக்கின்றான். இருவரும் குகையில் இருந்த போது, இருவருள் ஒருவர் தம் தோழரிடம், “ கவலைப் படாதீர்! திண்ணமாக அல்லாஹ் நம்முடன் இருக்கின்றான் ” என்று கூறிய நேரத்தில், அவர்மீது அல்லாஹ் தன்னிடமிருந்து அமைதியை இறக்கி அருளினான். மேலும் நீங்கள் பார்க்கமுடியாத படைகளைக் கொண்டு அவரை வலுப்படுத்தினான். இறைமறுப்பாளர்களின் வாக்கை கீழாக்கினான். எப்போதும் அல்லாஹ்வின் வாக்ககுதான் மேலோங்கும். அல்லாஹ் மிகைத்தவன் ஞானமுள்ளவன்.
- அல்குர்ஆன் 9:40
கடந்த பல காலங்களாக நமது தளத்திற்கு குற்றச்சாட்டுகளும் மிரட்டல்களும் வந்த வண்ணம் இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் நாம் நம் வழியில் பயணித்து வந்திருக்கிறோம். ஆனால்
புதன், 5 மார்ச், 2014
அபுபக்கர் (ரலி) தெருவில் இருந்து நாம்.....
பொதுவாக ஒரு
சம்பவத்தையே அல்லது மக்களுக்கு ஏற்படும் ஓர் இடையுரையே நேரில் பார்த்த ஒருவர்
நடந்த சம்பவங்களை அச்சத்துடனும் திகிலுடனும் நம்முடன் பகிர்ந்து கொள்ளும்
சந்தர்ப்பங்களில் நாமும் அதே உணர்வுகளுடன் நடந்த சம்பத்தை கேட்பதுடன்
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு
நீதி நிறுத்தப்பட வேண்டும் என்று ஒரு கொதி நிலைக்கு தள்ளப்படுவோம். இது தான்
சாதாரண மனிதனின் இயல்பு. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வை தான் நாம் கடந்த நாட்களில்
நமதூர் பேரூராட்சியின் பணிகளின் மக்கள் கருத்து !? என்ற தலைப்பில் நமது தளத்தில்
வெளியிட்டு அந்த பகுதி மக்கள் படும் துன்பத்தை சுட்டிகாட்டியிருந்தோம்.
செவ்வாய், 4 மார்ச், 2014
வி.களத்தூர் அருகே இந்து முன்னணி தீவிரவாதிகளின் வேலை பாரீர்!!
பெரம்பலூர் மாவட்டம்-வி.களத்தூர் அருகில் உள்ள இஸ்லாமியர்கள் அதிகமாக வசிக்கும் வடகரை என்ற ஒரு சிறிய கிராமத்தில் நேற்று முன் தினம் இரவு(2-2-14) இந்து முன்னணி தீவிரவாதிகள் பாலன் மற்றும் அடையாளம் தெரியாத மற்றொரு தீவிரவாதி இருவரும் சேர்த்து கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை இஸ்லாமியர்கள் தான் வெடி வெடித்து கொண்டாடுகின்றனர் என்று மக்களை திசை திருப்புவதற்காக காட்டு பகுதிகளில் யாருக்கும் தெரியாமல் வான வேடிக்கைகளை நடத்தி உள்ளனர்.
திங்கள், 3 மார்ச், 2014
கல்வி தீபம் ஏற்றிய மௌலானா முஹம்மது பின் அலவி (ரஹ்)
கல்வி தீபம் ஏற்றிய மௌலானா முஹம்மது பின் அலவி (ரஹ்)
(பெரம்பலூர் மௌலான அவர்களை பற்றிய கட்டுரை)
பிறப்பு:
தோன்றின் புகழோடு தோன்றுக என்பர். நம் மௌலானா அவர்கள் அதற்கு இலக்கணமாகத் தோன்றினார்கள். இந்தியத் திருநாட்டின் தென்மேற்கு மாநிலமான கேரள மாநிலத்தில் மலப்புரம் மாவட்டம் மன்னார்காடு தாலுக்கா வெட்டத்தூர் என்ற அழகிய மலைகள் சூழ் கிராமத்தில் 1896-ஆம் ஆண்டு மிக ஏழ்மையான குடும்பத்தில் அலவி, பாத்திமா பீவி தம்பதியருக்கு மகனாக பிறந்தார். முஹம்மது குடும்பத்தின் முதல் குழந்தையான இவருக்கு ஜெய்னுலாப்தீன் என்ற தம்பியும் உம்மாத்தம்மாள் என்ற தங்கையும் உடன் பிறந்தவர்கள் ஆவர். இவர்களின் குடும்பத்தை 'காராடன் குடும்பம்' என்று அப்பகுதி மக்கள் அழைத்து வந்தனர்.
ஞாயிறு, 2 மார்ச், 2014
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)